வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday, 31 October 2024

பரவர்களின் கல்நகரம்


இன்று நாங்கள் பழங்கால கல்நகரத்தை சீனாவில் கண்டுபிடித்துள்ளோம் என்று உலக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பரவர்களோ வருடா வருடம் ஒரு கல்நகரத்தை உருவாக்கி வந்தனர் என்று எத்தனை பேருக்கு தெரியும்.
 
"சீசர் ஃபிரடெரிக்" என்ற இத்தாலி நாட்டு பயணி இது குறித்த குறிப்புகளை தமது நூலில் நமக்கு தருகிறார். அவற்றுள் சில ....
 
கன்னியாகுமரி தொடங்கி இலங்கையில் உள்ள சிலாபம் முடிய உள்ள இடைப்பட்ட கடற்பரப்பில் முத்து குளித்தல் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வருடமும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் முத்து குளித்தல் ஆரம்பமாகி, பிறகு தொடங்கிய பதினைந்தாவது நாளில் முடிவடையும்.

பரவர்களுள் மூழ்கி முத்தெடுப்பதில் மிக சிறந்தவர்கள். கன்னியாகுமரி முதல் இலங்கையின் சிலாபம் முடிய உள்ள இடைப்பட்ட கடற்பரப்பில் கடலுக்கு அடியில் சென்று முத்து சிப்பிகளின் இருப்பை கண்டறிவர். அதன்பிறகு கடலில் எந்த இடத்தில் முத்து சிப்பிகள் தென்படுகிறதோ அதற்கு எதிரே உள்ள கரையில் கற்களாலான ஒரு நகரத்தை கட்டியெழுப்புகின்றனர் பரவர்கள்.

இந்த கல்நகரில் உள்ள அம்சங்கள்:

பரவர்கள் அங்கு தற்காலிகமாக தங்கியிருந்து முத்துக்குளிக்க அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் முழுவதும் கற்களால் கட்டப்படுகிறது. கூடவே கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வசதியாக முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கடைகளை கொண்ட ஒரு பஜார் உருவாக்கப்படுகிறது.

முத்து குளித்தல் பதினைந்து நாட்களில் முடிவடைந்து, முத்துக்களை பஜாரில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்த பிறகு தாங்கள் கட்டியிருந்த மாபெரும் கல்நகரத்தை பரவர்கள் தீக்கிரையாக்குவர்.

०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

ஆதாரம்:

Purchas His Pilgrims Vol X Pg. 105





- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com