வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 21 October 2015

வாளை மீன் புட்டு

தேவையானப் பொருட்கள்

  • முள்வாளை மீன்(துப்புவாளை)-1
  • (வாளை மீன் போல ஆனால் நிறைய முள் இருக்கும்)
  • வெங்காயம்-2
  • தேங்காய்-3/4 கப்
  • சீரகம்-1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை-2 கொத்து
  • உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன்
  • கடுகு-1/2டீஸ்பூன்
  • எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
  • உப்பு


செய்முறை

மீனை சுத்தம் செய்து உப்பு 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

தேங்காய்,மிளகாய் தூள் மஞ்சள்தூள்,சீரகம்,சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

வேக வைத்த மீனிலிருந்து முட்களை நீக்கி உதிர்த்தது போல எடுக்கவும்.
முட்கள் அதிகமாக இருப்பதால் கவனமாக எடுக்கவும்

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து,கறிவேப்பிலை தாளித்து,வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

முக்கால் பாகம் வதங்கியதும்.உதிர்த்த மீன்,அரைத்த தேங்காய் கலவை,தேவையான உப்பு போட்டு 5 நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும்.

மீனை வேகவைப்பதற்கு உப்பு சேர்த்திருப்பதால் வெங்காயம்,தேங்காய்க்கு வேண்டிய அளவு மட்டும் உப்பு சேர்க்கவும்.


குறிப்பு:

மீனிலிருந்து முள் எடுப்பது சிரமமாக இருந்தாலும் மிகவும் சுவையானதாக இருக்கும். திருக்கை மீன்,சுறா மீனிலும் இதை போல் செய்யலாம்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com