வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 23 October 2015

இறால் பிரியாணி

தேவையான பொருட்கள் :

இறால்  – 1/2 கிலோ
பாசுமதி அரிசி – 400 கிராம்
பல்லாரி – 2
தக்காளி -3
பட்டை -1 துண்டு
ஏலம் – 3
கிராம்பு – 3பச்சை மிளகாய் – 2
இஞ்சிபூண்டு விழுது – 1 1/2 மே. கரண்டி
காயல் மசாலா தூள்- 3 மே.கர
மல்லி இலை- தேவைக்கு
புதினா இலை – தேவைக்கு
ரம்பா இலை – தேவைக்கு
எலுமிச்சை – 2
நெய் -3or4 மே.கரண்டி
எண்ணெய் – 4 மே.கரண்டி
தயிர் – 1 கப்
தேங்காய் பால் பவுடர் – 2 மே. கரண்டி
உப்பு தேவைக்கு


செய்முறை:
இஞ்சி பூண்டுடன் பட்டை கிராம்பு ஏலம் தயிர் ரம்பா சேர்த்து கலந்து வைக்கவும்.
1. இராலை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
2. பல்லாரி , தக்காளி யையும் நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில்  எண்ணெய் , நெய் யையும் ஊற்றவும்.
4. எண்ணெய் காய்ந்த பின்பு  வெங்காயத்தை போடவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சிபூண்டு கலவையினை போடவும்.
6. பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
7. அடுத்து தக்காளி உப்பு காயல் மசாலாத்தூள் சேர்க்கவும்.
8. நன்கு வதக்கியதும் பச்சைமளகாய், மல்லி இலை, புதினா இலை போட்டு கிலறி பின்பு இராலை சேர்க்கவும்.
9. 5 to10 நமிடம் வேக வைத்து பின் தேங்காய் பால் பவுடர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அனைக்கவும்.
10. அரிசி நன்றாக கழுவி 1 க்கு 1 3/4 அளவு தண்ணீர் சேர்த்து rice cookerல் வேக வைக்கவும். அதில்  இரால் gravy ஐ கலந்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து குக்கரை on பண்ணவும். பிரியாணி ரெடியான பின்பு கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி பரிமாறவும்.
சூடான சுவையான இரால் பிரியாணி ரெடி…
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com