பரதவத்தாயின் தாலாட்டு
ஆறோ பெருகி வர
அலைகடலும் பொங்கி வர
அந்த அலைகடலின் கரையினிலே
அராபியக் கப்பல் வர
ஆராரோ
ஆரிராரோ

ரண்டு கப்ப கொடி பிடிக்க
அந்தக் கொடியில ரட்ட
மச்சம் அசைஞ்சி வர-பரதவர்கோன்
கப்பலுன்னா பாதுகாப்பும் சேர்ந்து வரும்
ஆராரோ
ஆரிராரோ
அழகான குதுரவரும் - அராபிய
யாவாரிய சுமந்து வரும்
குல்லா வச்ச யாவாரி
ஆணி முத்த வாங்கிப் போவோம்
ஆராரோ
ஆரிராரோ
கொற்கைத் துறைமுகத்தில் - கண்ணே நீ
கொண்டு வந்த கெட்டி முத்தே
குலசேகரப் பட்டணத்தில் - கண்ணே நீ
குளிச்சி எடுத்த வெண் முத்தே
ஆராரோ
ஆரிராரோ
தொண்டி துறைமுகத்தில் - கண்ணே நீ
துணிந்தெடுத்த பார் முத்தே
வங்காளக் கடலினிலே - கண்ணே நீ
வாரி வந்த நல்முத்தே
ஆராரோ
ஆரிராரோ
தென்மதுர வீதியில் - கண்ணே நீ
வித்து வந்த பாண்டி முத்தே
ரோமாபுரித் தேசத்திலும் - நம்
பவுசைச் சொல்லுதடி
ஆராரோ
ஆரிராரோ
மூணு கப்ப கொடி புடிக்க
முத்துக் கப்ப ஓடி வர-மூழ்கி
முத்தெடுக்கும் பாண்டியரே -உன்மாமம்
பதறாம கண்ணுறங்கு
ஆராரோ
ஆரிராரோ........
அலைகடலும் பொங்கி வர
அந்த அலைகடலின் கரையினிலே
அராபியக் கப்பல் வர
ஆராரோ
ஆரிராரோ

ரண்டு கப்ப கொடி பிடிக்க
அந்தக் கொடியில ரட்ட
மச்சம் அசைஞ்சி வர-பரதவர்கோன்
கப்பலுன்னா பாதுகாப்பும் சேர்ந்து வரும்
ஆராரோ
ஆரிராரோ
அழகான குதுரவரும் - அராபிய
யாவாரிய சுமந்து வரும்
குல்லா வச்ச யாவாரி
ஆணி முத்த வாங்கிப் போவோம்
ஆராரோ
ஆரிராரோ
கொற்கைத் துறைமுகத்தில் - கண்ணே நீ
கொண்டு வந்த கெட்டி முத்தே
குலசேகரப் பட்டணத்தில் - கண்ணே நீ
குளிச்சி எடுத்த வெண் முத்தே
ஆராரோ
ஆரிராரோ
தொண்டி துறைமுகத்தில் - கண்ணே நீ
துணிந்தெடுத்த பார் முத்தே
வங்காளக் கடலினிலே - கண்ணே நீ
வாரி வந்த நல்முத்தே
ஆராரோ
ஆரிராரோ
தென்மதுர வீதியில் - கண்ணே நீ
வித்து வந்த பாண்டி முத்தே
ரோமாபுரித் தேசத்திலும் - நம்
பவுசைச் சொல்லுதடி
ஆராரோ
ஆரிராரோ
மூணு கப்ப கொடி புடிக்க
முத்துக் கப்ப ஓடி வர-மூழ்கி
முத்தெடுக்கும் பாண்டியரே -உன்மாமம்
பதறாம கண்ணுறங்கு
ஆராரோ
ஆரிராரோ........
- வலன்டினா பரத்தி