பரதர்களின் தமிழ் சொற்கள் சில ....
பரதர்கள் மீன் தொழிலில் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் சில ....
- நீவாடு ( water current)
- கடப்பளகைய போடுங்கப்பா வல்லம் வழியபோகுது . புரிந்ததா
- அண்ணே இப்பம் பாரசூட் இருக்கு தெரி யிமா நின்னு வலியும்
- தாமான எலக்கிவிட்டாலும் வழியாது
- பாகளைய ஒத்த ஆளா நட்டுருக்கான் வ நம்ம தாத்தன் மார் எப்படி இருந்து ருப்பான் வ பாருங்க
- பாமரத்த ஒத்தாலா நட்டுருக்கே நானே. எப்புடி
- வெலங்க போனியா சாய போனியா
- தம்பி தொலவ போட டிசல் வேண்டாம் வெத்தல போதும் எப்புடி
- எந்த கடல் எந்த காத்தா இருந்தாலும் ஒத்தையாத்தான் நட்டிற்க்கான் தாழைக்காரன்
- காத்துகடல் பாத்தால கஞ்சி தூக்குவான்
- கடல பொறுத்தவரை ஆளானபட்ட அனுபவசாலி எல்லாம் போயி சேந்துட்டான் வ நம்ம எல்லாம் பச்ச மண்ணுன்னே பச்ச மண்னு
-நான் சுட்ட மண்னுல
- சரீதான் துடுப்புக்கு மோட்டார் வேகம் ஈடாகுமா

- ஒரு கட்டியம் போடுல
- என்னல மே வலைக்கு போயா பத்தலயா
- எச்ச வல தான். சொச்ச வல எங்கல
- என்ன மீன் தட்டி கிடக்கு
- ஏல வல தாவுள நிக்குதா கரய நிக்குதா
- கங்கில் எத்தனை பாகம் ண்ணே
- மடவலைக்கு குண்டு பத்தளயா
- கன்னி எத்தன விரல்கட்ட
- முனு விரல் பாயும் அயில வல
- ஒண்ணா ஒண்ணறையாண்ணே
- சாத்தாங்கம் தெவு திலுவு பாத்து கைவீச்சு
- ஏலே சாத்துமால் போட்டுறுக்கா
- எத்தனாம் நம்பர்
- ஏலே மூனாம் நம்பர் இருக்கால
- இரண்டாம் நம்பர் குமுலா வலை எட்டாம் நம்பர் திருக்க வல
- நாலாம் நம்பர் பருவலை எப்புடி
- மேக் கோடி எச்சவலை ஒண்ணாம் நம்ப ராத்தான் இருக்கும் நெத்திலி பாயும்
- தாத்திகள்ள கெளப்புங்கல
- அவன் வலைல செவப்பாம்ல
- சிங்கி வல எதுக்குள்ள விடுவிய
- பாற பாத்து எலக்கனுமுல
- இந்த கடல்ல இத்தனை பாகந்தாம்ல பாயும் எல சந்தியா எரில போயா வ எலக்கு ல வலைய
- டேய் அனியத்ல போய் செடரு தெரியுதானு பாரு
- கானாவுள யார் இருக்கா
- தண்ணீ பத்தார் நெரம்பி கெடக்கு
- கடுசு உச்சிக்கு போடா
- குத்து பாய் அடுச்சு இருக்கான்
- தாத்தி போட்டியா தாவு எவ்வளவு
- காத்து கொண்டலா கரவாடையா கச்சானா
- செவப்பு தெரியுது கருப்பு அடிக்குது
- மீனு பச்சைக்கா பட்றைக்கா
- கஞ்சிக்கு வெஞ்சனம் என்ன
- கைவல கலுச்சாச்சா
- பத்தார்ல உக்காரு
- வெப்பளா கெடக்கு
- செக்களுக்கு போனியலே பாடு எப்படி
- வெலுப்புல மீன் பட்டுச்சா