வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 8 August 2017

புறநானூறு மூலமும் உரையும்


புறநானூறுமூலமும் உரையும் : (பக்கம் :474) 


பரதவர் - 378 

இவர் தென்திசைத் தமிழகத்தே வாழ்ந்தவர்; கடலோடி களாகக் கடல் வாணிபத்திலும், கடல்தரு பொருள்களை ஈட்டு வதிலும் ஈடுபட்டிருந்தவர்.'தென் பரதவர் போரேறே எனக் கூறும் மதுரைக் காஞ்சி, இவர் பாண்டியரது மேலாட்சிக்கு உட்பட்டிருந்தவர் எனக் காட்டும். சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடும் ஊன்பொதி பசுங்குடையார், இச் செய்யுளில், தென் பரதவர் மிடல்சாய' என்று அவனது வெற்றிச் சிறப்பையும் கூறுகின்றார் பரதவர் என்பது இதனாற் பாண்டியர் குடியினரைக் குறித்ததும் ஆகலாம்; பாண்டியருக்கு 'மீனவர் என்று வழங்கும் பெயரையும் இங்குக் கருதுக. 


பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் - 55 - 57 196, 198 - 

இவன், தன் காலத்துப் பிறவரசரினும் மேம்பட்டு விளங்கிய சிறப்பினன். மதுரை மருதன் இளநாகனார். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், இடைக் காடனார், வடம வண்ணக்கண் பேரிசாத்தனார் முதலியோர் இவனைப் பாடியுள்ளனர். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தவன். இவன் காலத்துச் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவான். பழையன் இவன் பாண்டியர் மறவருள் ஒருவன். மோகூர்த் தலைவனாக விளங்கியவன். சோணாட்டுப் போஒர் என்னும் கோட்டைத் தலைவனாகிய பழையன் வேறு; இவன் வேறு. 


பாண்டியன் அறிவுடை நம்பி - 184, 188 

இவன் அறிவாற்றலாற் சிறந்தவன். பிசிராந்தையார் காலத்தில் இருந்தவன். பிசிராந்தையார் இவனுக்கு உரைத்த அறவுரைகள் மிகவும் செப்பம் உடையன. மக்கட்பேறு இல்லாத வாழ்வு ஒரு வாழ்வாகாது’ என்னும் பொருள்பட இவனுரைத்த செய்யுள் (188) மிக்க செறிவுடையது. பாடினோர் வரலாற்றுள்ளும் இவனைப் பற்றிக் காண்க. 


பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3 

இவனைப் பாடியவர் இரும்பிடர்த் தலையார். இவனுடைய மற மேம்பாட்டையும், கொடைச் சிறப்பையும் அவர் பாடியுள்ளனர். ‘கருங்கை’ என்பது இவனது தோள்வலியால் அமைந்த சிறப்புப் பெயர் ஆகும்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com