திவ்ய மரிய செங்கோல் அரசி மீது விருத்தாப்பா - 2

புனிதமுடன் அமைத்த
பூரணப் பிதாவின் காரணப் புதல்வி
புவியில் அதிசயமாய்
முன்னாள் தியாகோவென் பவர்க்கோர் மலைமீது
முக்யமுடன் தோன்றி
மோட்சானந்த ஜெயபாக்யம் அருள்கின்ற
மொழி போல் எளியவர்க்கும்
உன்னாதரவீந்து எந்நாளிலுமெமக்
குற்ற தொழில் பெருக
உலகோடலகை செய்துயர் வாதைகள் நீக்கி
உன் தாட் கிரையாக்கி
மன்னர்க் கதிபதி அரசாய் வருமுன்றன்
மைந்தனிடம் இரங்கி
வரமேயருள் திவ்ய புரமேவிய செங்கோல்
மரியே அருள் புரியே!
- செ. மு. முத்தையா ரொட்ரிகோ, வேம்பாறு