வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 14 May 2018

நெய்தல் நில பரதவர் தமிழ்
பரதவர் பயன்படுத்திய படகுகளின் பெயர்கள் மற்றும் தளவாடங்கள்

இந்த தமிழ் பரதவர் மட்டுமே முழுவதும் புரிந்து கொள்ள முடியும்

கப்பல் முதல் கட்டுமரம் வரை பரதவர்களே கட்டினார்கள்

ஓடாவியார் வர்க்கம் உள்ள பரதவர்கள்தான் தோணி மற்றும் கப்பல் மரங்களை கட்டியவர்கள்

ஒத்தை மரத்து வத்தை - ஒரே மரத்தால் ஆனது

வத்தை - ஒத்தை மரத்து வத்தையை விட கொஞ்சம் பெரிது

கட்டுமரம் - ஐந்து மரங்களை சேர்த்து கட்டி சொய்யும் படகு

திமில் அல்லது நீல்மரம் - இது 7 அல்லது 9 அளவில் பெரிய மரங்களை கொண்டு கட்டும் கட்டுமரம்

வள்ளம் - வத்தையை விட பெரிய அளவில் ஆன படகு

மஞ்சி டிங்கி - பெருட்கள் கப்பலுக்கு ஏற்ற பயன் படும் வள்ளம். வள்ளத்தை விட அகலமானது

லைலா வள்ளம்- வள்ளத்திற்கும் நாவாய்க்கும் இடைப்பட்ட அளவு உள்ள வள்ளம்

கட்டுவள்ளம் என்பது வள்ளத்தில் வீடு போன்ற அமைப்பும் இருக்கும். கட்டு வள்ளம் கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட வள்ளம் இந்த வள்ள வீடுகள் 60 முதல் 70 அடி நீளமும் படகின் நடுப்பகுதியில் 15 அடி அகலமும் கொண்டிருக்கின்றன. கட்டு வள்ளம் அஞ்சிலி மரத்தைக் கொண்டு செய்யப்படுகிறது பொதுவாக இப்படகுகளின் கூரை பனை ஓலை மற்றும் மூங்கில்கள்கொண்டு வேயப்பட்டு இருக்கும் வள்ளத்தின் வெளிப்புறம் பாதிக்கப்படாமல் இருக்க அதன் வெளிப்பகுதி முந்திரிக்கொட்டையின் எண்ணெய் கொண்டு பூசப்படுகிறது. இந்த வள்ளங்கள் முகத்துவாரத்தில் பயன்பட்டன

தோணி - இரண்டு வகை

கரைவலை தோணி அல்லது வஞ்சி- கரையில் இருந்து இழுக்கும் வலையை எடுத்து செல்ல பயன்படும் படகு. வள்ளத்தை விட நீளமானது

தோணி - பொருட்களை கொண்டு செல்ல பயன் படும் படகு. இது பாய்மர கப்பலுக்கு இனையான அளவு உடையது 300டன் பொருட்களை கொண்டு செல்ல முடியும்

கப்பல் அல்லது பாய்மரகப்பல் - மக்கள் வசதியாக பயணம் செய்யமுடியும். 100டன் பொருட்களை எடுத்து செல்ல
முடியும்

கோட்டியா என்றால், கடலில் புலி போல வேகமாகச் செல்லுகின்ற கப்பல். கோட்டியா என்றால், இலங்கையில் புலி என்று பொருள். அது சோழர்களைக் குறிப்பது. ‘மஞ்சு’ என்றால், மேகம் போல விரைந்து செல்லுகின்ற கப்பல் என்று பொருள். இப்படி, ஒவ்வொரு வகையான கப்பலுக்கும் ஒவ்வொரு பெயர். இந்த கோட்டியா இன்றும் கடலூர் பகுதிகளில் கட்டபடுகிறது

நாவாய் - பாய்மரகப்பலின் வடிவ அமைப்பு கொஞ்சம் வேறுபாடு கொண்டது. போர் வீரர்களை ஏற்றி செல்லும் போர் கப்பல் வேகமாகச் செல்லகூடியது . நாவாய் என்ற பெயரே பிறகு நெவி ஆனது

தாரணி - ஆழ்கடல் போருக்காக வடிவமைக்கப்பட்ட தற்கால அழிப்பு கடற்கலங்களுக்குச் சமமானது.

லூலா - சிறு போர் மற்றும் வழித்துணை கடமைகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட தற்கால வழித்துணைக்கப்பல்களுக்குச் சமமானது.

வஜிரா - சிறியளவு ஆயுதம்தரித்த, விரைவுத் தாக்குதல் போர்க்கப்பல்.

திரிசடை - பெரியளவில் ஆயுதம் தரித்த இரண்டுக்கு மேற்பட்ட இலக்குகள் சண்டையிடக்கூடிய என அறிக்கையிடப்பட்ட போர்க்கப்பல்கள் அல்லது போர்க்கலங்கள். இவை வேகம் மற்றும் தாக்குதல் என்பவற்றைவிட அதன் கட்டுமானத்தில் தங்கியிருந்தன.

அக்காலக் கப்பல்கள் ஒரு சிறிய ஈரூடகப்படையை வேலைக்கமர்தியபோதும், இவ்வகைக் கப்பலில் அவர்களுக்குத் தனி அறைகள் மற்றும் பயிற்சி பகுதியில் என்பவற்றைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இக்கப்பல் சமநிலையற்ற போர் நடவடிக்கை ஈடுபடக்கூடியது என்று கூறப்படுகிறது.

இவ்வகை கடற்களங்களைத்தவிர அரச உல்லாசப்படகுகளும் இருந்தன. அவை பின்வருமாறு:

அக்ரமண்டம் - பின்பகுதியில் அரச தங்குமிடத்துடன் கூடிய அரச உல்லாசப்படகு.

நீலமண்டம் - நீதிமன்றங்கள் நடத்தக்கூடிய, உயர் அதிகாரிகள் / அமைச்சர்கள் தங்கக்கூடிய விரிவான வசதிகள் கொண்ட அரச உல்லாசப்படகு.

சர்ப்பமுகம் - நதியில் பயன்படுத்தப்பட்ட சிறிய உல்லாசப்படகு (அலங்கார பாம்பு தலையைக் கொண்டிருந்தன)

இவை தவிர, கடலிலும் தரைப்பகுதி நீர்ப்பகுதிகளிலும் பயன்படக்கூடிய பல கப்பல் வகைகளையும் அவற்றின் பயன்பாட்டையும் புறநானூறுகுறிப்பிடுகின்றது. அவை பின்வருமாறு:

இயந்திரம் - சக்கரங்கள் நடைமுறைப்படுத்தும் இயந்திர துடுப்புகள் கொண்ட கலப்பினக் கப்பல்.

கலம் - மூன்று பாய்மரங்கள் கொண்ட காற்றுத் திசையைப் பொருட்படுத்தாது பயணிக்கக்கூடிய பெரிய கப்பல்கள்.

புனை - கடலோர கப்பல் மற்றும் தரைப்பகுதி நீர்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர அளவிலான கப்பல்.

பற்றி - வர்த்தக பொருட்களை நீர்நிலைகளில் ஏற்றிச் செல்லக்கூடிய பெரிய படகு

இவை இல்லாமல் இன்று நாங்கள் பயன்படுத்தும் படகுகள்

லாஞ்சி - இரும்பிலும் மரத்திலும் பைபரிலும் மீன் பிடி கப்பல்
பைபர் படகுகள்

படகுகளின் மற்ற தமிழ் பெயர்கள் இவை நெய்தல் மக்கள் நாங்கள் பயன்படுத்துவது இல்லை

மிதவை

ஓடம்

தெப்பம்

பட்டுவா

வங்கம்

அம்பி

மரக்கலம்

படகு

கைப்பந்தல்

கடலில் வேலை சார்ந்த பதவிகள்

தண்டல் அல்லது தண்டையல் - கப்பல் தலைவன்

சுக்கானி அல்லது #கம்மியர்-கப்பல் ஓட்டி

கடலோடி - கடல் பற்றிய அறிவும் நீண்ட காலம் கடலில் பயணம் செய்யகூடிய பரதர்

மன்டாடி - கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர்

கம்மாறுகாரர் (கம்மா ஆறு கடலான் என்பதின் சுருக்கம்) - மீன் பிடித்தலில்
அரசன்

தொள்ளாழியார் - கடல் ஆழி பற்றி நிறைந்த அறிவுடையவர்

வள்ளம் கப்பல் பாகங்கள்

சுக்கான்

கானா கம்பு.

ஏரா - அடிப்பாகம்

அனீகம்/முகரி/துரோதை - முன்பாகம்

அட்டி/அனீய துரோதை - பின்பாகம்

கூம்பு (பாய்மரத்தை கட்ட உதவும் தண்டு)

வாரி பலகை

ஓடுகை,

மீப்பாய் - பாய்மரப் பாய்

நங்கூரம்

வாரி நீக்கம்

சிந்தை உசத்தி

மணி தூக்கம்

மேல் கொடி

வரி நீக்கம்

அணியக் குச்சை

அட்டிட மடி

அட்டி சிந்தி உசத்தி

பருமல் அடி

இசுக்களா அடி

அணியத்துக் கச்சைவாரி

தட்டு உசத்தி

தலுக்காலு உசத்தி

கயிறு

மோசாவாரி - ஒட்டம் - படகின் நீளுக்கும் வங்குகளின் நுணியில் இணைக்கப்பட்டு இருக்கும் பலகை.

வங்கு - U வடிவில் படகின் அடிப்பாகத்தை உருவாக்கப் பயன்படும் திரட்சியான மரத்தில் வடிவமைக்கப்படும் பலகை.

கூத்துவாரி - படகின் நடுவில் குறுக்காக போடப்பட்டு இருக்கும் தடித்த பலகை. இதில் வட்டமாக வெட்டியெடுத்து அதற்குள்ளே பாய் மரக் கம்பை வைக்கலாம்.

பூவெச்சம் - பாய்மரக் கம்பின் அடியை தாங்கும் வண்ணம் வங்கில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் குழி.

கடையல் - வள்ளத்தின் பின்பக்கம்

மூக்கன்

பாய்மரம்

ஆஞ்சான் கயிறு

வடம்

பாவல்

வாறன் (கயிறு)

கடப்பாய்

கோர்ஸ்

தாமன்

நாளி

பாமரம்

பருமல் - பாய்மரம் நுணி

கடையால்பத்தி

கூத்துவாரி - படகின் நடுமையம்

வங்கு

யாளி

பாவல்

கடப்பாய்

கடப்பலகை

கடுசு - கண்னா- காற்றுக்கு ஏற்றாற்போல் சமன் செய்ய பயன்படுத்துவது

வடகாவி

வடசவரி

வடகூர்

வட மரம்

கலி மரம்

கலிச் சுற்று

கோசா

வங்குக்கால்

நூல் ஏணி

அணிய தண்டு

ஈயக்குண்டு

சட்டிமம்ம கெச்சண்

தொழவை

காமான்

பட்டை

ஞாப்பாரம்

படலம்

கட்டுக்கொடி

ஆஞ்சான் (கயிறு)

கூசா

புட்டரிசி

கிட்டங்கி

மகமை

ரேவடி

பத்தார்

உமல்

கச்சா

காவி

கம்பாவம்

போயா

வலை

தூண்டி

மண்டுக்

அட்டி பாரம்

கலபத்து

வாடி ( மனற்பரப்பினால் ஆன முற்றம்)

கடல் அளவைகள்:

பாகம்

ஒரு பாகம் என்பது இரு கைகளையும் நன்றாக அகல விரித்து ஒரு கை விளிம்பிலிருந்து மறு கை விளிம்புவரை எடுக்கும் அளவு

ஆழம் அளக்க பயன்படும் கருவி தாத்தி

கடல் ஆழம் அறிய முடியாத இடத்திற்கு
லோப்பு என்று பெயர்

தோணியில் டாவா செவனா கப்பலில் port side , starportside கூறுவது போல

டாவா என்பது இடது பக்கம்

செவனா என்பது வலது பக்கம்

டாவா பக்கம் சிவப்பு லைட்டும்

செவனா பக்கம் பச்சை லைட்டும் இருக்கும்


வள்ளம் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருவிகள்:

ரம்பம் - மரம் துண்டாட

உளி - மரம் செதுக்க

சுத்தியல் -உளி அடிக்க

ஒளதார் - மரத்தைத் துளையிட

பயன்படுத்தப்பட்ட மரங்கள்

வேம்பு

இலுப்பை

நாவல்

புன்னை

வெண் தேக்கு

தேக்கு

துறைமுகங்கள்:

துறைமுகம் - கப்பல்கள் நிறுத்துமிடம்.

முன்துறை - கழிமுகத்துக்கு வெளியே அதிக நிறையுள்ள பொருட்களை மட்டும் இறக்கும் இடம்.

பெருந்துறைமுகம் - கழிமுகத்துக்கு உள்ளே பண்டகசாலை போன்ற இடங்கள் உள்ள இடம்.
கழிமுகம்

உலர்துறை - கப்பல் கூடம்

சட்டிமம்-மாலுமி இல்லங்கள்

கட்டுமானத் தளம்

துறைமுகப்பட்டினம்

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com