திவ்ய இஸ்பிரீத்து சாந்து சர்வேஸ்பரன் பேரில் விருத்தாப்பா
எழு கொடை வழங்கும் தூய
ஆவியே எழுந்து வாரும்
பழிமிகு உள்ளந் தன்னில்
படிந்துள்ள மாசு எல்லாம்
கழுவியே தூய்மை யாக்கிக்
கவினுறு கோவில் செய்தேன்
எளியவர் தந்தை வாரும்
என்னுளம் மகிழ நன்றே.
தந்தையும் மகனும் ஒப்ப
சரிநிகர் மகிமை யோடு
வந்தனை பெருவை உன்றன்
மாண்பினைத் தகுதியாக
புந்தியிற் சிறந்த மேலோர்
புகழ்வதற்கரிது என்னில்
சிந்தனைத் திறனே அற்ற
சிறியேனால் யாது ஒல்லும்?
வருசெயல் உரைக்க வல்லார்
வாய்மொழி யாகப் பேசி
இறைவனின் திட்டம் யாவும்
இகமதில் நவின்றோய் முன்னாள்
புறாவெனும் புள்ளின் தோற்றம்
பூண்டனை - சீடர் மீது
எரியழல நாவின் தோற்றம்
ஏற்றனை இறங்கி வந்தாய்.
கரந்துறை சீடர் உன்றன்
கதிரொளி பெற்ற பின்பு
மறந்தனர் துன்ப மெல்லாம்
மனத்தினில் துணிவு பெற்றார்.
இறந்துயிர் இழப்ப தேனும்
இயேசுவுக் குழைப்போம் என்று
சுரந்திடும் அன்பு பொங்கக்
சூளுரைத் தெழுச்சி யுற்றார்.
தடம்புரண் டோம் என்றன்
வாழ்வினைச் செம்மை யாக்கித்
திடம்பெறச் செய்ய வல்ல
திருவருட் கருவி எழில்
உடம்போடு ஒன்றி நின்று
இயங்கிடும் உயிரைப்போல
இடம் பெரும் ஒளியே என்றன்
இதயமீ திறங்கி வாரும்.
சொல்லினால் உலகம் யாவும்
படைத்தவன் அன்னை உன்றன்
வல்லமை நிழலால் தாய்மைப்
பேற்றினை அடைந்தாள் - விந்தை!
வெல்லரும் உன்றன் சொல்லாய்
விளங்குபோ தகங்கள் யாவும்
நல்லுணர் வோடு ஏற்கும்
நலமதை ஈவாய் தேவே!
ஆவியே எழுந்து வாரும்
பழிமிகு உள்ளந் தன்னில்

கழுவியே தூய்மை யாக்கிக்
கவினுறு கோவில் செய்தேன்
எளியவர் தந்தை வாரும்
என்னுளம் மகிழ நன்றே.
தந்தையும் மகனும் ஒப்ப
சரிநிகர் மகிமை யோடு
வந்தனை பெருவை உன்றன்
மாண்பினைத் தகுதியாக
புந்தியிற் சிறந்த மேலோர்
புகழ்வதற்கரிது என்னில்
சிந்தனைத் திறனே அற்ற
சிறியேனால் யாது ஒல்லும்?
வருசெயல் உரைக்க வல்லார்
வாய்மொழி யாகப் பேசி
இறைவனின் திட்டம் யாவும்
இகமதில் நவின்றோய் முன்னாள்
புறாவெனும் புள்ளின் தோற்றம்
பூண்டனை - சீடர் மீது
எரியழல நாவின் தோற்றம்
ஏற்றனை இறங்கி வந்தாய்.
கரந்துறை சீடர் உன்றன்
கதிரொளி பெற்ற பின்பு
மறந்தனர் துன்ப மெல்லாம்
மனத்தினில் துணிவு பெற்றார்.
இறந்துயிர் இழப்ப தேனும்
இயேசுவுக் குழைப்போம் என்று
சுரந்திடும் அன்பு பொங்கக்
சூளுரைத் தெழுச்சி யுற்றார்.
தடம்புரண் டோம் என்றன்
வாழ்வினைச் செம்மை யாக்கித்
திடம்பெறச் செய்ய வல்ல
திருவருட் கருவி எழில்
உடம்போடு ஒன்றி நின்று
இயங்கிடும் உயிரைப்போல
இடம் பெரும் ஒளியே என்றன்
இதயமீ திறங்கி வாரும்.
சொல்லினால் உலகம் யாவும்
படைத்தவன் அன்னை உன்றன்
வல்லமை நிழலால் தாய்மைப்
பேற்றினை அடைந்தாள் - விந்தை!
வெல்லரும் உன்றன் சொல்லாய்
விளங்குபோ தகங்கள் யாவும்
நல்லுணர் வோடு ஏற்கும்
நலமதை ஈவாய் தேவே!
- செ. மு. முத்தையா ரொட்ரிகோ, வேம்பாறு