திவ்ய இஸ்பிரித்து சாந்து சர்வேசுரன் பேரில் விருத்தாப்பா

மூன்றாமாளான திவ்ய
முதல்வனே இதயத்தில் மெஞ்ஞான ஸ்நேகத்தை
மூட்டும் பிரகாசத் தழலே.
செப்பரிய தெய்வீக சுதனவ தரித்திடச்
சென்ம மாசற்ற தூய
திருமரியின் இருதயம் பரவசமிகுந்திடச்
செய்த வெண்புறா உருவனே.
ஒப்பரிய தமியோர்கள் செய் தொழில்கள் சேமமுற்
றுய்யவும் வினை சூதுகள்
ஒழியவும் அறநெறிகள் மலியவும் சமாதானம்
ஓங்கி நற்கீர்த்தி பெறவும்.
இப்புவியில் நிம்ப நகர் வாழ் பரதர் உமதடியை
இறைஞ்சியே போற்றுகின்றோம்
இஸ்பிரித்து சாந்து சர்வேசுரா அனுதினம்
இரக்கம் வைத் தாளுவீரே !
- செ.மு. முத்தையா ரொட்ரிகோ, வேம்பாறு