வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 8 October 2021

அலைகளின் மைந்தர்கள் - 26

கடலில் மந்திரம் ஒதுவதற்கு பணம் கொடுக்காததால் டச்சுகாரர்களால் ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு பின் பரதவர்களின் கடுமையான எச்சரிக்கையால் உடனே விடுதலை செய்யப்பட்ட புன்னகாயல் சாதி தலைவரை பார்த்து நலம் விசாரிக்க பாண்டியாபதியும் முத்துகுளித்துறையின் மற்ற சாதி தலைவர்களும் வந்திருந்தனர்..

ஏற்கனவே இயேசுசபை குருக்களால் அர்ச்சிக்கப்பட்டு ஆலய பீடத்தில் அமர்ந்திருக்கும் இளவரசி ராஜகன்னி மாதாவின் சுருபத்தை அகற்றும் உத்தரவுக்கு பணிவதில்லை என்றும்.. இரண்டாம் வருடம் நடக்கும் பரதவரின் தாய் தேரோட்ட நிகழ்ச்சிக்கு இலங்கையிலுள்ள டச்சு தலைமைக்கு அழைப்பு விடுப்பதில்லை எனவும் பாண்டியாபதி கூற...

தங்களின் அரசரின் உத்தரவை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள் முத்துக்குளித்துறையின் சாதி தலைவர்கள்.. கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய பேரரசை நிறுவி 3 ஆம் நூற்றாண்டின் முடிவு வரை மதுரையை தலைநகரகவும், கொற்கையை துனை தலைநகரமாகவும் கொண்டு ஆண்ட பரதவ வம்சம் களப்பிரர்களின் வருகைக்கு பின் கடற்கரை ஒரங்களில் சிற்றரசர்களாக சுருங்கி போனது ...

மூவேந்தர் காலத்தில் திறை செலுத்தி.. பின்வந்த போர்ச்சுகீசியர்களுக்கும், டச்சுக்காரர்களோடு இணைந்து முத்து வணிகம் செய்த போதும் பரதவர்கள் மதிப்பு மிக்கவர்களாகவே நடத்த பட்டார்கள்.. அதற்கு காரணம் இவர்கள் கடலுக்கு அரசன் போர்க்குணம் கொண்டவர்கள். சிறிய அளவிலான தங்களின் படையை வைத்து வேதாளையில் மூர் இன படையின் ஆயிரக்கணக்கான பேரை கொன்று கடலிலே வீசிய வீரம் மிக்க பரம்பரை என்பதால் மற்ற எல்லா பாளையக்காரர்களை போல் அல்லாமல் முத்துக்குளித்துறை பரதவர்கள் நாயக்கர் மன்னராலும், டச்சு நிர்வாகத்தாலும்... இன்றுவரை (17 ஆம் நூற்றாண்டின் நடு பகுதி) ஒருவித பயம் கலந்த மரியாதையுடன்.. எப்போதுமே மதிப்பு மிக்கவர்களாகவே நடத்தப்பட்டார்கள்...

மாதா (பனிமயதாய்) புகழ்பாடும் கட்டியம் போட்டு கடலில் மூழ்கி கிடந்த வள்ளம் கரைக்கு வந்தவுடன்.. அங்கு நின்ற பெரியவர்களிடம்..

சரி நான் வர்றேன்... என்று கிளம்பிய ராயப்பிடம்..

தம்பி பத்து வருஷத்துக்கு முன்னால உங்க ஊர்ல செத்துபோன செபத்தியான உங்களுக்கு தெரியுமா.? ஒரு பெரியவர் அவனிடம் கேட்க..

நான் அவருடைய ரெண்டாவது பையன் என்றான் ராயப்பு..

சந்தோஷமாக அவனை கட்டியணைத்து.. உங்க அப்பாவுடைய ஒன்னுவிட்ட தங்கச்சியத்தான் நான் கட்டியிறுக்கேன்..

கள்ளு குடிச்ச இடத்தில எனக்கும் அவருக்கும் நடந்த சண்டையில கோவிச்சுக்கிட்டு வைப்பாருக்கு வந்துட்டேன். எங்க மச்சான் செத்ததே எனக்கு அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் தெரியும்.. 25 வருஷமா எங்களுக்குள்ள எந்த தொடர்புமில்ல....ஒரு நடை எங்க வீட்டுக்கு வந்து உங்க அத்தையை பார்த்துட்டு போங்கப்பா.. ஒங்கள பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாள்னு ராயப்பை வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்க்கு அழைத்து சென்றார்.

வீட்டுக்குள் நுழைந்த ராயப்பை பார்த்து யார் என்று தன் கணவரிடம் கேட்க..

மூக்கூர்ல செத்துபோன உங்க அண்ணன் செபத்தியான் மகன் என்றார் தன் மனைவியிடம்..

என் அண்ணன் மகனா.... ஓடி வந்து ராயப்பை அனைத்து ரொம்ப நேரம் தேம்பி தேம்பி அழுதாள்.

தன் குடும்ப குசலம் விசாரித்த தன் அத்தையிடம் எல்லாவற்றிற்கும் பாசத்தோடு பதில் சொல்லிவிட்டு.. அத்தை நேரமாகுது.. நான் கெளம்புறேன் என்றவனிடம் கொஞ்சம் இருங்கப்பா.. எங்க வீட்டுக்கு இதுவரை வராதவுக இப்ப வந்துருக்கிய.. கையை நனச்சுட்டு போங்கப்பான்னு சொல்லி..

பீங்காட்டுக்குள்ள மேய்ஞ்சுக்கிட்டுறுந்த சேவலை புடுச்சு.... அடிச்சு கொளம்பு வச்சு சுட சுட நெல்லு சோறு ஆக்கி தன் அண்ணன் மகனுக்கு கொடுத்துக்கிட்டு இருக்கும் போது... ஆத்துல குளிச்சுட்டு ஈரத்தலையோட வீட்டுக்குள் நுழைந்த செல்வி..

தன் அம்மா ராயப்புக்கு சோறு கொடுத்து கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியமாகி.. இந்த மனுசன் என்னத்த சொல்லி வீட்டுக்குள்ள வந்தார்னு தெரியலையே.. சளுவ இழுக்காம போகமாட்டார் போலேன்னு நெனக்கும்போது...

சாப்பிட்டு கொண்டிருந்த ராயப்பை காட்டி... இவரு மூக்கூர்ல உள்ள ஒன்னுவிட்ட என் அண்ணன் மகன் என்றாள் தன் மகளிடம்...

வேண்டுமென்றே செல்வியை பார்க்காமல் தலை குனிந்தவாறே சாப்பிட்டு கொண்டிருந்தான் ராயப்பு ..

மதினி எப்படி புள்ள வளர்த்திருக்காகன்னு ஆச்சரியப்பட்ட செல்வி அம்மா .. ஒரு பாத்திரத்தில கறிகொளம்பு ஊத்தி .. நான் அக்காட்ட போய் கொடுத்துட்டு வர்றேன்.. நீ மருமகன் தட்டுல கறி கொறையாம பார்த்துக்கன்னு தன் மகளிடம் சொல்லிவிட்டு சென்றாள் செல்வி அம்மா...

நடிப்பு போதும் அம்மா போய்ட்டாங்க.. என்று சொன்ன செல்வி.. தட்டில் தனக்கும் சோறுபோட்டு சாப்பிட அவன் அருகில் உட்காரும் போது..

ராயப்பு அவளை பலமாக தன் பக்கம் இழுத்து அவளை அணைக்க ... வேண்டாம்.. உங்க அத்தை உங்கள ரொம்ப நல்ல பையன்னு நினைக்கிறத கெடுத்துறாதிய என்றாள் செல்வி.. 

ராயப்பு வீட்டை விட்டு சென்றவுடன் மூக்கையூர்ல என்னைக்கு திருவிழான்னு தன் மகளிடம் தாய் கேட்க... 

இந்தமாச கடைசிலம்மா என்றாள் செல்வி...

இந்த வருஷம் குடும்பத்தோடு திருவிழாவுக்கு கண்டிப்பா போகனும் என்ற சொன்ன தன் அம்மாவின் நோக்கம் தெரிந்து சந்தோஷமானாள் செல்வி...

தூத்துக்குடில நடக்கிற மாதாவின் ரெண்டாவது தேரோட்டத்துக்கு நீ வருவியாம்...

இயேசு உன்னட்ட சொல்ல சொன்னார்னு யோவான் தன் தம்பி சந்தியாகப்பரிடம் சொன்னார்.

பரதர்மாதா, உபகார மாதா, ஜெபமாலை மாதா, காணிக்கை மாதா, ராஜகன்னி மாதா, செல்வமாதா, செங்கோல் மாதா, சகாயமாதா, பாத்திமா மாதா, மோட்ச அலங்காரினு அவுக அம்மாவுக்கு பெயரை மாத்தி மாத்தி வச்சு...உலகத்தில பாதிக்கு மேல் உள்ள ஆலயங்களில் தன் அம்மாவை தங்கவச்சுறுக்காறு..

தேரோட்டத்த போய் பார்க்க போகலைனா இந்த பகுதில நமக்கு கொடுத்த ஒத்த வீட்டையும் பறிச்சுக்கிட்டு அவுக அம்மாவ தங்க வச்சாலும் வச்சுறுவாறு
இயேசுபிரான் ..

நமக்கு எதுக்கு வம்பு ..தூத்துக்குடி போய் மாதாவை பார்த்துட்டு வந்துற வேண்டியதுதான்னு சந்தியாகப்பர் முடிவெடுத்தார்..

........... தொடரும் .....
- சாம்ஸன் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com