வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 21 October 2021

கொற்கை முத்து

இலக்கியச் சான்றுகளும் அகழ்வாய்வுச் சான்றும் 


ஈண்டு நீர்
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்"
- நற்றிணை 23 :5-7

(பொருள்: கொற்கைத் துறையின் கடல் நீரில் முத்துக்கள் விளையும்.)

.............................

"அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்"

-ஐங்குறுநூறு 185: 1 – 2

(பொருள்: கொற்கைத் துறையின் நுழைவாயிலில் சிதறிக் கிடக்கும் முத்துகளைப் போன்ற ஒளிரும் பற்களையுடைய இளம்பெண்.)

......................................

"புகழ் மலி சிறப்பின் கொற்கை முன் துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து"

-அகநானூறு 201:4 – 5

(பொருள்: பாண்டியனின் கொற்கைத் துறையில் ஒளிர்விடும் முத்துக்களும் வலம்புரிச் சங்குகளும் சிதறிக் கிடக்கின்றன.)

..............................................

"கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு"

-சிலப்பதிகாரம். 14:180

(பொருள்: கொற்கையின் பெருந்துறை முத்துக்களை பெற்றுள்ளது.)

..............................................


மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன

-அகநானூறு 27: 8 – 9

(பொருள்: பல போர்களில் வீரத்துடன் போரிட்டுக் காத்து வந்த பாண்டியர்களின் கொற்கையின் பெரிய துறையின் முத்தைப் போலப் புன்னகை பூக்கும் ஒளிபொருந்திய பற்களும் பவளம் போன்று சிவந்த வாயும் கொண்ட தலைவி.)

..............................................


புகழ் மலி சிறப்பின் கொற்கை முன் துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து

-அகநானூறு 201; 4 – 5

(பொருள்: ஒளிர்விடும் பொன்னால் செய்த நெற்றிப்பட்டம் அணிந்த வெற்றிக் களிறுகளை உடைய பாண்டிய மன்னனின் கொற்கைத் துறையில் ஒளிர்விடும் முத்துக்களும் வலம்புரிச் சங்கும் சிதறிக் கிடக்கிறது.)

..............................................


இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும் 10
நற்தேர் வழுதி கொற்கை முன் துறை

-அகநானூறு 130; 9 – 11, 

(பொருள்: கொற்கைத் துறையில் கடல் அலை கரையில் முத்துக்களைக் குவிக்கின்றன. கடற்கரையில் சிதறிக் கிடக்கும் இந்த முத்துக்கள் செல்வந்தர் ஏறிவரும் குதிரையின் காலடிக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமைகிறது. இந்த அளவிற்கு முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றனவாம்.)

..............................................


சீர் உடைய விழு சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்
இலங்கு வளை இரும் சேரி
கள் கொண்டி குடி பாக்கத்து
நல் கொற்கையோர் நசை பொருந

-மதுரைக்காஞ்சி 134 – 138

மதுரைக் காஞ்சி வரிகளில் கொற்கைத் துறைமுகத்தின் சிறப்பு வியந்து போற்றப்படுகிறது.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com