பரவரிடையே திருவாங்கூர் மகாராஜா
பரவர்களின் ஊரிலே பிறந்த திருவாங்கூர் மகாராஜா:
உன்னி கேரள வர்மா(1718-24) என்ற வலுகுன்றிய அரசன் திருவாங்கூரில் ஆட்சிக்கு வருகிறார். இவர் காலத்தில், திருவாங்கூரில் இருந்த "எட்டு வீட்டு பிள்ளைமார்" என்று அழைக்கப்படும் எட்டு நாயர் சமூகத்து குறுநில தலைவர்களும் நாட்டின் அதிகாரங்கள் அனைத்தையும் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
கஜானாவுக்கு போதிய வருமானம் வராததால் உன்னி கேரள வர்மன் சிறிய அளவிலான படையே வைத்திருந்தார். உன்னி கேரள வர்மன் திருவாங்கூருக்கு வாரிசு வேண்டி கொளத்து நாட்டு ராஜவம்ச இளவரசியை தத்தெடுத்தார். தத்தெடுக்கப்பட்ட கொளத்தூர் நாட்டு இளவரசி திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் உள்ள அட்டிங்கல் அரண்மனையில் அட்டிங்கல் ராணியாக வாழ்ந்து வந்தார். இவர் அட்டிங்கல் மூத்த ராணி என்றும் அழைக்கப்படுகிறார்.
அட்டிங்கல் மூத்த ராணி கிளிமானூர் பிரபுவாகிய ரவிவர்மா கோயில் தம்புரானை திருமணம் செய்து கொண்டார். உன்னி கேரள வர்மன் எட்டு வீட்டு பிள்ளைமாருக்கு அஞ்சி நெய்யாற்றின்கரைக்கு சென்று வாழ்ந்தார். "எட்டு வீட்டு பிள்ளைமார்" அட்டிங்கல் மூத்த ராணியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.
பாதுகாப்பான இடம் தேடி எங்கு செல்வதென்று தெரியாமல் அட்டிங்கல் மூத்த ராணி தமது கணவரான கேரளவர்மா கோயில் தம்புரானுடன் கடைசி நம்பிக்கையாக நூறு கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையில் அமைந்துள்ள பரவர்களின் ராஜாக்கமங்களம் மாநகருக்கு சென்று அங்கு அவர்கள் அடைக்கலம் புகுந்தனர்.
பரவர்களின் இம்மாநகரில் தங்களுக்கென்று அரண்மனை அமைத்து இருவரும் கூடி வாழ்ந்து வருகையில் அங்கு அவர்களுக்கு கி. பி. 1724 ஆம் ஆண்டில் ஒரு ராஜ குமாரன் பிறக்கிறார். அவரே பிற்காலத்தில் நவீன திருவாங்கூரை உருவாக்கியவர் என்று அறியப்பட்ட புகழ்பெற்ற "கார்த்திகை திருநாள் ராமவர்மா".
ராமவர்மா (1758-1798) திருவாங்கூரில் ஆட்சிக்கு வந்த பிறகு தாம் பிறந்த ஊரான பரவர்களின் ராஜாக்கமங்களம் மாநகரத்துடனான உறவு முற்றிலும் விட்டு போனது. இதன் காரணமாக அவர் பிறந்த ராஜாக்கமங்களம் மாநகரின் அரண்மனையானது பராமரிப்பின்றி பழுதடைந்து இடிந்துவிழுந்தது. கி. பி. 1774-1789 இடைப்பட்ட ஆண்டுகளில் மலையாள தேசம் வந்திருந்த "பார்த்தலமேயுவின் பவுலீனுஸ்" என்ற ஆஸ்திரிய நாட்டு பயணி தமது நூலில்.. ...
"தற்போது திருவாங்கூரை ஆட்சி செய்துவருகின்றவர் (ராமவர்மா மகாராஜா) கடற்கரையில் அமைந்துள்ள (பரவர்களின்) ராஜாக்கமங்களம் மாநகரில் இருந்த முன்பு புகழ்பெற்று விளங்கிய அவர் குடும்பத்துக்கு சொந்தமான அரண்மனையில் பிறந்தவர் ஆவார். ராஜாக்கமங்களம் மாநகரில் இருந்த அவர் பிறந்த அரண்மனையானது இன்று இடிபாடுகளுடன் காணப்படுகிறது" என்று குறிப்பிடுகிறார்.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:-
VOYAGE TO EAST INDIES BY FRA PAOLINO DA SAN BARTOLOMEO Pg.112.
- UNI