வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday, 17 June 2024

அதிரியர் அம்மானை


பாண்டியபதி ராஜாவின் அரசவையில் பாடப்பட்ட அதிரியர் காவியம்:

பரதவர் நாட்டு ஏழுகடற்றுறையில் ராஜா டான் எஸ்தேவான் டி குருஸ் - (1680 - 1686) என்ற பாண்டியபதிக்கு பிறகு அரியணையேறிய ராஜா டான்  கேபிரியேல் டி குரூஸ் கோமஸ் (1686-1700) என்ற பாண்டியபதி சிலகாலம் பழைய காயலில் வாழ்ந்து வந்தார்.

இம்மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது அரசவையின் முதன்மை புலவரான ''மனுவேல்'' என்பவர் புனித அதிரியனின் வாழ்க்கை வரலாற்றை கிபி1699 ஆம் ஆண்டில், காவியமாக பாடியுள்ளார்.

யார் இந்த புனித அதிரியன்?

ரோமை பேரரசனான கலேரியஸ் மாஸ்சிமீனியன்(கிபி305-311) என்பவர் இன்றைய துருக்கி நாட்டின் இஸ்தான்புல் மாநகருக்கு அருகில் உள்ள நிக்கோமீதியாவில் தமது அரசவையை வைத்திருந்தார். இவரது அரசவை மெய்காப்பாளராக "அதிரியன்" இருந்து வந்தார். அதிரியனின் மனைவி நத்தாலியா ஒரு கத்தோலிக்க பெண். அதிரியனும் சிலகாலம் கழித்து கத்தோலிக்கரானார்.

ரோமை பேரரசன் கலேரியஸ் மாஸ்சிமீனியன் தமது அரசவையில் மெய்காப்பாளராக இருந்த "அதிரியன்" கத்தோலிக்கரானதை கேள்வியுற்று அவரை சிறையில் அடைத்து துன்புறுத்தி கி. பி. 306 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அவரை கொலை செய்வித்தார். இந்த அதிரியனின் வாழ்க்கை வரலாற்றையே பாண்டியபதி ராஜாவின் முதன்மை அரசவை புலவர் "மனுவேல்" காவியமாக பாடியுள்ளார்.

பாண்டியபதி ராஜாவின் அரசவையில் பாடப்பட்ட புனித அதிரியனின் காவியமானது பிற்காலத்தில் அதாவது கி. பி. 1913 ஆம் வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை அன்று "அர்ச்சியசீஷ்டர்" என்பவரால் அம்மானையாக மாற்றப்பட்டது.

அதிரியன் அம்மானையில் நான் மேற்சொன்ன ராஜா டான் கேபிரியேல் டி குரூஸ் கோமஸ் (1686-1700) என்ற பாண்டியபதியை குறிக்க அவருடைய முன்னொட்ட பட்டபெயரான டான் என்ற பெயரை பயன்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

இந்த டான் பட்டம் பாண்டியபதிகளுக்கு ஏற்பட்ட வரலாறு:-

டான் பட்டம் என்பது போர்ச்சுகல் மன்னர்களால் ராஜவம்சத்து பிரபுக்களுக்கு வழங்கப்படும் ஒரு பட்டமாகும். ஆங்கிலத்திலும்  டான்  என்று அழைக்கப்படுகிறது. 

ஆங்கிலேய அரசு அதிகாரியான சைமன் காசி தமது குறிப்பில்......
"பாண்டியபதிகளுக்கு போர்ச்சுகல் பேரரசு டான் பட்டம் வழங்கியது" என்று குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேய அரசு அதிகாரியான எச். ஆர். பட்டே தமது "மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் கெசட்டியர் திருநெல்வேலி" என்ற நூல் பக்.122 ல்....

"போர்ச்சுகல் மன்னர்களின் கோவா ஆளுநர்கள் எல்லோருமே தங்களுடைய எழுத்துக்களில் பாண்டியபதிகளை குறிக்க டான் என்ற அவர்களுடைய முன்னொட்ட பெயரையே பயன்படுத்தியுள்ளனர் " என்று பதிவு செய்கிறார்.

__________________________________________________


Foot Notes:-
1.Madras District Gazetteer tinneveli by H. R. Patte Vol 1 Pg. 122
2.Remarks on the origin and history of parawas, by SIMON CASIE CHITTY, maniyagar of puttalam, ceylon, The Journal of Royal Asiatic Society. pg 132




- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com