கண்டி பரவர்கள்
பரவர்கள் வசமிருந்த கண்டி பஜார்:
"ஃபெர்னாவோ டி குயீரோஸ்" என்ற போர்சுகீசிய பயணி, கிபி1653-1688 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியா மற்றும் இலங்கைக்கு வந்திருந்தார். இவர் தமது நூலில் இலங்கையின் கண்டி இராச்சியத்தின் தலைநகரான கண்டி நகரை பற்றி குறிப்பிடுகிறார்.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்....
"கண்டி நகரம் நன்கு கட்டப்பட்ட வீடுகளும், சுத்தமான மற்றும் அலங்கரிக்கப்பட்ட தெருக்களையும் கொண்டிருந்தன. இந்நகரில் உள்ள கட்டடங்கள் கற்களால் கட்டப்பட்டு, மேலே மூங்கில் மற்றும் பிரம்பு இலைகளால் மூடப்பட்டுள்ளன.
கண்டி ராஜாவின் அரண்மனை மற்றும் புத்த சமய கோவில்களின் மேற்கூரையில் செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களால் பூசப்பட்டுள்ளது. மொத்தம் 2,500 பேர் கண்டி நகரில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுள் புத்த சமய குருக்கள், கண்டி ராஜா மற்றும் அவர் படை பிரிவு தளபதிகள் தவிர பெருபான்மையான மக்கள் பரவர்குல வணிகர்களும், மூரின அரேபியர்களுமே ஆகும்.
பரவர்குல வணிகர்களும், மூரின அரேபியர்களும் கண்டி நகரில் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே அந்நகரில் தங்கள் வசமுள்ள வீதியான தெரு ஒன்றில் பெரிய பஜார் ஒன்றை அமைத்திருந்தனர்".
இன்றும் கண்டி நகரில் பரவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
____________________________________________
ஆதாரம்:
THE TEMPORAL AND SPIRITUAL CONQUEST OF CEYLON BY FERNAO DE QUEYROZ,Vol 1 Pg.60
- UNI