வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday, 25 June 2024

ஆர்மீனியரும் பரதவரும்



ஆர்மீனியர்களுக்கு அடைக்கலம் தந்த பரதவர்கள்:

துருக்கியின் அண்டை நாடான ஆர்மீனியா உலகின் முதல் கிறிஸ்துவ நாடாகும். இவர்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்தவ பிரிவின் பெயர் "ஆர்மீனிய அப்போஸ்தலிக் திருச்சபை" என்பதாகும். கிபி ஏழாம் நூற்றாண்டில், முகமதியர்கள் ஆர்மீனிய தேசத்தின் மீது படையெடுத்து வந்து, அந்நாட்டை பிடித்து கொண்டனர். 

ஆர்மீனியாவை கைப்பற்றி இருந்த முகமதியர்கள், அங்குள்ள கிராமங்களை தீக்கிரையாக்கி, ஆயிரமாயிரம் ஆயிரமாயிரம் பூர்வகுடி ஆர்மீனியர்களை படுகொலை செய்தனர். ஆர்மீனியாவில் உள்ள ஒரு நகரில் மட்டும் 12,000 மக்களை படுகொலை செய்ததுடன் 35,000 மக்களை அடிமைகளாக பிடித்து சென்றனர் முகமதியர்கள்.

முகமதியர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு தப்ப ஆர்மீனியர்கள் பலர் உலக முழுவதும் பல நாடுகளில் சென்று தஞ்சமடைந்தனர். இப்படி உலக முழுவதும் தஞ்சமடைந்த ஆர்மீனியர் சிலருக்கு கன்னியாக்குமரி பரதவர்கள் தங்கள் நிலத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்துள்ளனர். இங்கு அவர்கள் தங்களுக்கென்று தேவாலயம், குடியிருப்புகள் அமைத்து பரதவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கி.பி.1514ல் இந்தியா வந்திருந்த "டுவார்டே பார்போசா" என்ற போர்சுகீசிய பயணி தமது நூலில் கன்னியாகுமரியில் பரதவர்களோடு வாழ்ந்து வந்த ஆர்மீனியர்களை பற்றி குறிப்பிடுகிறார்.

அவற்றுள் சில.....

* பண்டைய காலத்தில் ஆர்மீனியர்கள் கட்டியிருந்த தேவாலயம் ஒன்று கன்னியாகுமரியில் உள்ளது.

* இன்றும் அந்த தேவாலயத்தில், சிலுவைகள் பொறுத்தப்பட்டுள்ள பலிபீடம் முன்பு ஆர்மீனிய இன குருக்கள் பலிபூசை நிறைவேற்றி வருகின்றனர்.

* கன்னியாகுமரியில் உள்ள இந்த ஆர்மீனியர்களின் தேவாலயத்தை கடந்து செல்லும் மாலுமிகள் அங்கு சென்று காணிக்கை அளிப்பது வழக்கமாக இருக்கிறது.

* இவ்வழியாக செல்லும் போர்ச்சுகீசியர்களும், இந்த ஆர்மீனிய தேவாலயத்தில், ஆர்மீனிய குருக்களால் நிறைவேற்றப்படும் திருப்பலி பூசையில் பங்கெடுக்கின்றனர்.

*கன்னியாகுமரியில் ஆர்மீனிய தேவாலயத்துக்கு அருகாமையில், அவர்களுடைய பல கல்லறைகள் காணப்படுகிறது. அவற்றில் ஒரு கல்லறை மீது இவ்வாறு லத்தீன் மொழியில் பொறிக்கப்பட்டள்ள எழுத்து

"Hic jecet Catuldus Gulli fillius qui obiit ano"

கன்னியாகுமரியில் பரதவர்களோடு வாழ்ந்து வந்த ஆர்மீனியர்கள் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

யூகப்படி, கிபி1544 ஆம் ஆண்டு நடைபெற்ற வடுகர் படையெப்பில் கன்னியாகுமரி நகரம் தாக்குதலுக்கு உள்ளாகி சூறையாடப்பட்டது. இச்சமயம் ஆர்மீனிய தேவாலயம் இடிக்க பட்டிருக்கலாம், அதன்பிறகு ஆர்மீனியர்களும் பாதுகாப்பான இடம் தேடி போயிருக்கலாம் என்பதே.

_______________________________________________

ஆதாரம்:-
The Book Of Duarte Barbosa, Vol 2, Pg.102, 103





- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com