சிந்துசமவெளி பரவர்
சிந்துசமவெளி பரவர்களின் வாழ்வியல், தொழில் மற்றும் வரலாறு:
மீனாடு:
இன்றைய பாகிஸ்தான் நாட்டில் சிந்து சமவெளி நாகரிகமானது அன்று கி.மு. 3300 முதல் கி.மு. 1300 வரை நீடித்திருந்தது. மீன்பரவர் இனத்தவர்கள் சிந்து சமவெளியில் தங்களுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கி, அதற்கு மீனாடு என்று பெயரிட்டு அழைத்தனர். மீன்பரவர்கள் வாணிபம், விவசாயம், மீன் வேட்டை போன்ற தொழில்களில் ஈடுபட்டனர்.
மீன்பரவர்கள் பல குலங்களை உள்ளடக்கிய ஓர் இனக்குழுவாக இருந்தனர். மீன்பரவர் இனத்தவருள் சந்திர மற்றும் சூரிய குலத்தவர்களே முதன்மையானவர்களாக இருந்தனர். மீன்பரவர் இனத்தவருள் மக்கள் தொகையில் சந்திரகுல மீன்பரவர்கள் இருபத்தைந்து சதவீதமும், சூரியகுல மீன்பரவர்கள் பதினைந்து சதவீதமும் இருந்தனர் .
சந்திரகுல மீன்பரவர்களின் தலைவர்கள் மீனவன் என்ற பட்டமும், இரட்டைமீன் சின்னத்தை தங்கள் கொடியிலும் கொண்டிருந்தனர். சந்திரகுல மீன்பரவர்களின் தலைவர்கள் மட்டுமே மொத்த மீனாட்டுக்கும் அரசர்களாக வர முடியும்.
பரவர் நாடு:
மீனாட்டில், சந்திர மற்றும் சூரிய குல மீன்பரவர்கள் வாழ்ந்த நிலபரப்பே பரவர் நாடு என்று அழைக்கப்பட்டது. பரவர் நாடு என்பது தனி நாடாக இருக்கவில்லை, மாறாக மீனாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
பரவர் நாட்டில், நீர்ப்பாசன வசதிக்காக பல கால்வாய்கள் கட்டப்பட்டன, அவற்றுள் மிக நீளமான கால்வாய் ஒன்று கட்டிமுடிக்கவே ஒரு வருடம் மேல் ஆனது. பரவர் நாட்டின் முதன்மை நகரம் "பரவர்பள்ளி" என்று அழைக்கப்பட்டது.
பரவர்பள்ளி என்பதற்கு பரவர்களின் நகரம் என்று பொருள். பரவர் நாட்டுக்கு உள்ளேயே ஆறு ஊர்களை சேர்ந்த மக்கள், நிர்வாக வசதிகாக "ஆறூர் கூட்டமைப்பு" என்ற ஒன்றை உருவாக்கியிருந்தனர். பரவர் நாட்டில், "மலகோபா" என்ற ஊரில் தென்னந்தோப்புகள் இருந்தது.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
மேற்கூறியுள்ள தகவல் அனைத்தும் உலகப்புகழ் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான "ஹென்றி ஹெராஸ்" சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளை ஆராய்ந்து தமது "மோகஞ்சதாரோ மக்களும், நாடும்" மற்றும் "மோகஞ்சதாரோவில் மீனவன்" ஆகிய நூல்களில் பதிவு செய்தவைகளாகும்.
இந்திய தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கு "ஹென்றி ஹெராஸ்" ஆற்றிய சேவையை அங்கீகரித்து அவரது நினைவை கொண்டாடும் வகையில், அவரது உருவம் பொரித்த அஞ்சல் தலையை இந்திய அரசு கிபி1981 யில் வெளியிட்டது.
____________________________________
ஆதாரம்:-
1.Henry Heras, Mohenjo daro, the people and land Pg.715-16
- UNI