சுதந்திர போராட்ட மாவீரர்
மாவீரர் பாண்டியபதி 'டான்' கேப்ரியேல் டி குரூஸ் (1779-1808)
பாண்டியபதிகள் என்பவர்கள் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டிணம், புன்னைக்காயல், வைப்பார் மற்றும் வேம்பார் ஆகிவை உள்ளடக்கிய ஏழு துறை நாட்டுக்கு மன்னர்களாவர்.
மேற்சொன்ன பாண்டியபதிகள் ஒட்டுமொத்த பரவர் சமுதாயத்தின் பரம்பரை தலைவர்கள் என்பதால் இவர்களுக்கு 'ஜாதி தலைவன்' என்னும் பட்டமும் பெற்றுள்ளார்கள்...
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் கிபி 1799 ஆம் ஆண்டு அக்டோபர் பதினாறாம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு பல மாதங்கள் முன்பே அவருடன் கூட்டணி வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள் சிலரை ஆங்கிலேய அரசுக்கு எதிராக மறைத்து பாதுகாப்பு அளித்தார் பாண்டியபதி 'டான்' கேப்ரியேல் டி குரூஸ்(1779-1808).
பாண்டியபதியை கிளர்ச்சியாளராக அறிவித்து அவரையும், அவர் மகனையும் ஆங்கிலேய அரசு படைகளின் மூலம் சிறைபிடித்து அவர்களுக்குரிய ஆவண பத்திரங்களையும் கைப்பற்றினார் திருநெல்வேலி_சீமை கலெக்டர் ஸ்டீபன் லூஷிங்டன். மேலும் கலெக்டர் ஸ்டீபன் லூஷிங்டனின் வற்புறுத்தலின் பேரில் 'பாண்டியபதியின் ஆட்சி அதிகாரத்தை நிரந்தரமாக பறிக்க ஆங்கிலேய அரசு தீர்மானித்திருந்தது..
கட்டபொம்மன் நாயக்கருக்காக முதன்முதலில் தமது நாட்டை இழந்தவர் இவரே..!
கலெக்டர் ஸ்டீபன் லூஷிங்டனுக்கே அதிர்ச்சியளிக்கும் விதமாக இலங்கையின் ஆங்கிலேய அரசு அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'பாண்டியபதி' இல்லாமல் மன்னாரில் முத்து குளித்தல் நடைபெறாது! என்று ஆங்கிலேய மேலிடத்துக்கு கூறினர்...
கலெக்டர் ஸ்டீபன் லூஷிங்டனின் முந்தைய தீர்மானம் ரத்து செய்யப்பட்டு பாண்டியபதி மீண்டும் அரியணை ஏறுகிறார்...
நான் மேற்கூறிய குறிப்புகள் அனைத்தும் தகுந்த ஆங்கிலேய அரசு ஆவணங்களுடன் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் சூசன் பெய்லி தமது புனிதர்கள், பெண் தெய்வங்கள் மற்றும் அரசர்கள் என்னும் நூலில் பதிவு செய்கிறார்...
----------------------------------------
Saints, Goddess and Kings by Susan Bayly. Pg 353,355
கிபி 1799 ஆம் ஆண்டில் கட்டபொம்மன் நாயக்கர் தூக்கிலிடப்பட்டு அவருடைய சகோதரர்களான ஊமைத்துரை மற்றும் செவத்தையா பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் காளையார்கோவில் மருது பாண்டியர் இரட்டை வீரியத்துடன் எழுந்து தோற்கடிக்கப்பட்ட கிளர்ச்சி படையினருக்கு அடைக்கலம் கொடுத்தார்.
மருது பாண்டியர் அமைத்த கூட்டணி:-
திருநெல்வேலி சீமை-பாண்டியபதி டான் கேப்ரியேல் டி குரூஸை(1779-1808) தமது கூட்டணியில் இணைத்து கொண்டு உடனடியாக மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் மற்றும் முத்து கருப்பு தேவரை பிரித்தானிய இராணுவ நடவடிக்கை காரணமாக சீர்குலைந்திருந்த கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக 'மறவர் சீமை'க்கு அனுப்பி வைத்தார் மருது பாண்டியர்.
இதுபோக கள்ளர் பழங்குடிகளை இன்னும் நெருங்கிய கூட்டணிக்குள் கொண்டு வந்தார். கிபி 1801 ஆம் ஆண்டில் கந்தசஷ்டி விழாவை பயன்படுத்தி வெளியே இருந்த நண்பர்களின் துணையுடன் ஊமைத்துரை மற்றும் செவத்தையா பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்தனர். தரைமட்டமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆறே நாட்களில் கெட்டி எழுப்பப்பட்டது...
ஆங்கிலேயர்களை தாக்கி அவர்களிடம் இருந்து தாங்கள் கைப்பற்றியிருந்த 200 துப்பாக்கிகளின் பயன்பாட்டிற்காக நாற்பது மூடை வெடிமருந்து வேண்டி மருது பாண்டியரிடம் உதவி கேட்டார் செவத்தையா. உடனடியாக மருது பாண்டியர் கூட்டணியிலிருந்த பாண்டியபதி 'டான்' கேப்ரியேல் டி குரூஸ், மயிலப்பன் சேர்வைக்காரருடன் காடல்குடியில் கூடி இதுசம்பந்தமாக ஆலோசித்தனர்.
முடிவில் மயிலப்பன் சேர்வைகாரர் பாஞ்சாலங்குறிச்சி காளையார்கோவிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளில் இருபது மூடைகளை பாஞ்சாலங்குறிச்சிக்கு வழங்கினார். இதுபோக பாண்டியபதி 'டான்' கேப்ரியேல் டி குரூஸ் தனிப்பட்ட முறையில் ஊமைத்துரை மற்றும் செவத்தையா தலைமையிலான கிளர்ச்சி படைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மதில் சுவர் துப்பாக்கி (Wall Guns), இதர துப்பாக்கி வகைகள் மற்றும் அதன் பயன்பாட்டிற்கு தேவையான வெடிமருந்துகளையும் வழங்கினார்.
ஒரு போருக்கு நவீன ஆயுதம் எவ்வளவு முக்கியமென்றால் இஸ்ரேயேல் தேசம் அமேரிக்காவின் ஆயுத உதவினாலேயே அரபு கூட்டணி நாடுகளை தோற்கடிக்க முடிந்தது. பரதகுலத்தவர்கள் தங்கள் பாண்டியபதி பின்னால் அணிவகுத்து வீரபாண்டியனின் தம்பிகளான குமாரசுவாமி நாயக்கர் என்னும் ஊமைத்துரை மற்றும் சுப்பா நாயக்கர் என்னும் செவத்தையாவுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிகின்றனர்...!
நன்றி!
ஜெய் ஹிந்த் !!
----------------------------------------
South Indian Rebellion The First War of Independence 1800-1801 by K Rajayyan Pg. 98,201 and 202.
- UNI