வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday, 4 August 2024

தலைவனார் வம்சம்


தலைவனார் பட்டம் கொண்ட சமூகத்தவர்கள்:

"பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கர் கி.பி. 1799 ஆம் ஆண்டில், அக்டோபர் 16 ஆம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு பல மாதங்கள் முன்பே அவருடன் கூட்டணி வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள் சிலரை ஆங்கிலேய அரசுக்கு எதிராக மறைத்து பாதுகாப்பு அளித்தவர் ராஜா டான் கேபிரியேல் டி குருஸ்(1779-1808) என்ற பாண்டியபதி.

எனவே திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த "ஸ்டீபன் லூஷிங்டன்"  "ராஜா டான் கேபிரியேல் டி குருஸ்" என்ற பாண்டியபதியை கிளர்ச்சியாளராக அறிவித்திருந்தார். இந்த சமயத்தில் பாண்டியபதி ராஜாக்களை எப்படியேனும் ஒழிக்க வேண்டும் என்று காத்துகொண்டிருந்த பத்தொன்பது முக்கிய நபர்களை கொண்ட தூத்துக்குடி பரதவர் குழு ஒன்று அவருடைய ஆட்சியை நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மேற்கொண்டது.

கி.பி. 1799 பிப்ரவரி 4 ஆம் நாள் நான் மேற்கூறிய பத்தொன்பது பரதவர்களும் பாண்டியபதி ராஜாவுக்கு எதிராக பதினான்கு பொய் குற்றச்சாட்டுகளை தயார் செய்து அனைவரும் அதில் கையொப்பமிட்டு அந்த மனுவை திருநெல்வேலி ஜில்லா கலெக்டரான "ஸ்டீபன் லுஷிங்டன்" பிரபுவிடம் சமர்பித்தனர்.....

அவற்றுள் நான்காவது குற்றச்சாட்டு என்னவெனில்...

"அவர்(பாண்டியபதி ராஜா) தமக்கு அடுத்த நிலை பதவி வகித்த தலைவனார்களை அவமதித்தார்" என்று குறிப்பிடபட்டுள்ளது. இதன்மூலம் பரதவர்களுள் தலைவனார் பட்டம் கொண்ட நபர்கள் பாண்டியபதி ராஜாவுக்கு அடுத்த நிலை அந்தஸ்தில் இருந்தனர் என்பது தெளிவு. 

மறவர்களிடையே தலைவனார் பட்டபெயர் வழங்கி வந்ததை பற்றி கி.பி. 1909 ஆம் ஆண்டில், ஆங்கிலேய மானிடவியலாளர் "எட்கர் தர்ஸ்டன்" தனது நூலில் முதலாம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேற்சொன்னவைகள் மூலம் தலைவனார் பட்டபெயர் பரதவர்களுக்கும், மறவர்களுக்கும் உரியது என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

ஆதாரம்:-
1. Caste and Tribes of South India by Edgar Thurston Vol 7 Pg. 1
2. Saints, Goddess and Kings by Susan Bayly. Pg 353,355















- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com