வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday, 19 August 2024

தென்னாட்டு வேங்கைகள்


திருமலை நாயக்கர்(1623 - 1659) காலத்திற்குப் பிறகு மதுரை மாநகர் மிகவும் வெறிச்சோடியது, புலிகள் அதன் தெருக்களில் சுற்றித் திரிந்தன, தனியார் முற்றங்களில் கூட உள்ளே நுழைந்தன. சேது நாட்டில் கி.பி.1678 முதல் கி.பி.1685 வரை ஏழு ஆண்டுகள் பஞ்சம் நீடித்திருந்த சமயத்தில் புலிகளின் குழுக்கள் அங்கு சுற்றித் திரிந்தன, அவற்றில் ஏதேனும் ஒன்று ஒத்தையாக நூறு பேர் கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை தாக்கி, அவர்களில் முதல்வரை தூக்கி சென்றுவிடுமாம்.

ஒரு இடத்தில் (திருநெல்வேலி சீமை பகுதி) கால்நடைகள் தவிர, எழுபது நபர்களுக்கு அதிகமானோர் காணாமல் போயினர். பாண்டிய நாட்டிலும், சேது நாட்டிலும், புலிகளை பற்றிய பயம் மக்களை ஆட்கொண்டிருந்தது. மக்கள் இரவில் பயணம் செய்யத் துணியவில்லை, பகலில் எப்போதும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை. ஆனால் பரவர்களோ அப்படிபட்ட புலிகளை வேட்டையாடுவதிலும், கொலை செய்வதிலும் வல்லவர்களாக இருந்தனர் என்பதை ஐரோப்பியர்கள் பதிவு செய்துள்ளனர்.

பரவர்கள் தங்கள் இடக்கையில் நீள்கையுறை அணிந்து புலியை பிடிக்கின்றனர். புலி அந்நீள்கையுறையை பறிக்க முற்ப்படும்போது தாங்கள் வலக்கையில் பிடித்திருந்த குத்துவாளைக் கொண்டு புலியின் வயிற்றை குத்தி கிழிக்கின்றனர்.
 
மேற்சொன்ன நீள்கையுறை(Gauntlet) என்பது முற்காலத்தில் குறிப்பாக ஐரோப்பியாவில் குதிரை மீதிருந்து போர் புரியும் மாவீரர்கள் அணிந்திருந்த கைகவச உறையை ஒத்தது ஆகும்.
 
சான்று:1
ATLAS GEOGRAPHUS:OR, A COMPLETE ANCIENT AND MODERN By Herman Moll-1711. Pg 599

சான்று:2
The Gazetteers Or Newsmans Interpreter. being a Geographical Index of the World Countries, printed for P. Crampton, dublin 1732



















Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com