வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday, 2 September 2024

பரவர் நாட்டு துறைமுகங்கள்


பரவர் நாட்டில் சரக்கு மற்றும் இடைநிலை துறைமுகங்கள்:

பரவர் நாடு இரண்டு உட்பிரிவுகளை கொண்டிருந்தது. வடக்கு பகுதி ஏழுகடற்றுறை என்றும், தென்பகுதி மேல்நாடு என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டினம், புன்னைகாயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பாரும் அதனை சார்ந்துள்ள பகுதிகளுமே ஏழுகடற்றுறை. மேற்சொன்ன ஏழு ஊர்களிலும் சரக்கு துறைமுகங்கள் இருந்தது. சரக்கு துறைமுகங்கள் இரண்டு செயல்பாடுகளை கொண்டுள்ளது. அவை,

* கப்பல்கள் மூலம் உள்நாட்டு சரக்குகளை இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

* வெளிநாட்டு சரக்குகளை கப்பல்கள் மூலம் இங்கு இறக்குமதி செய்து, உள்நாட்டில் விற்பனை செய்து கொள்ளலாம்.
 
ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு தூத்துக்குடி தவிர மீதமுள்ள ஆறு துறைமுகங்களும் செயலிழந்து போயின.

 
०००००००००००००००००००००००००००००००००००००००

மேல் நாடு:

மணப்பாடுக்கு தெற்கே அமைந்துள்ள ஊர்கள் அனைத்தும் மேல்நாடு என்று அழைக்கப்பட்டது, அதாவது இன்றைய கூட்டபுளி வரை. கன்னியாகுமரி கிபி1606 முதல் மேல்நாட்டுடன் இணைந்திருந்தது, அதன் பிறகு மீண்டும் திருவிதாங்கூர் அரசன், கிபி1700 களில் கைப்பற்றி தமது அரசோடு இணைத்து கொண்டான். 

மேல்நாட்டில், ஏழு ஊர்களில் இடைநிலை துறைமுகங்கள் இருந்தது. அவை பெரியதாழை, உவரி, கூத்தன்குழி, இடிந்தகரை, பஞ்சல், பெருமணல் , கன்னியாகுமரி ஆகும். 

இடைநிலை துறைமுகங்கள் மூன்று செயல்பாடுகளை கொண்டது ஆகும்.
அவை,

* கப்பல்கள் இங்கிருந்து சரக்குகளை வேறு கப்பல்களுக்கு மாற்றி ஏற்றி இறக்கி கொல்லலாம்.
* கப்பல்கள் இங்கு நிறுத்தி, பயணத்துக்கு தேவையான தண்ணீர் நிரப்பி, உணவு பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லலாம்.
* கப்பல்களை பழுது பார்க்க வேண்டுமெனில் இங்கு நங்கூரமிட்டு பார்த்து கொள்ளலாம்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு இத்துறைமுகங்கள் செயல்யிழந்து போயி மேல்நாட்டு பரதகுல கிராமங்கள் முழுவதுமாக மீன்பிடி தொழிலையே நம்பியிருக்க வேண்டியதாயிற்று.

०००००००००००००००००००००००००००००००००००००००००

சேது நாடு:-

சேது நாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில், பரவர்களின் ஊரான பெரியபட்டிணம்(இன்றைய முத்துப்பேட்டை பகுதி), மூக்கையூரில் சரக்கு துறைமுகங்கள் இருந்தது.

இதுவும் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு செயலிழந்து போனது.
ஆங்கிலேயர்களின் வருகையே பரவர்களின் வீழ்ச்சிக்கு ஆரம்பம்....

००००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:-

Encounters on the Opposite Coast: The Dutch East India Company and the Nayaka State of Madurai in the Seventeenth Century
Book by Marcus P. M. Vink Pg. 162





- UNI 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com