வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday, 22 September 2024

பரவரின் முத்து

உலக புகழ்பெற்ற பரவர்களும் அவர்களது முத்துக்களும்:

"ஜான் நியூஹாஃப்" என்ற டச்சு பயணி தமது நூலில்...

"கடலில் மூழ்கி முத்தெடுப்பதில் இவ்வுலகிலேயே சிறந்தவர்கள் பரவர்கள் மட்டுமே. பரவர்கள் தங்கள் ஆண் பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே முத்தெடுக்கும் தொழிலில் பழக்குகின்றனர்" என்று குறிப்பிடுகிறார். 

Ancient And Renaissance Rome:(பண்டைய மற்றும் மறுமலர்ச்சி காலத்திய ரோமாபுரி)

கி. பி. 1450 க்கு முந்தைய உரோமை நகரும், அதனை சார்ந்துள்ள பகுதிகளும் பண்டைய உரோமாபுரி என்று அழைக்கப்பட்டது. கி. பி. 1450 முதல் கி. பி. 1550 வரை ஐரோப்பாவில் நடந்த புதிய நவீன புரட்சிகள், மாற்றங்கள், படைப்புகள் எல்லாம் மறுமலர்ச்சியின் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மறுமலர்ச்சியின் காலத்துக்கு உரோமை நகரம் மையப்புள்ளியாக விளங்கியது.

புகழ்பெற்ற ஆங்கிலேய வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான வின்சென்ட் குரோனின் தமது "இராபர்ட் டி நோபிலி" வாழ்க்கை வரலாற்று நூலில்...

"பண்டைய உரோமாபுரியிலும் சரி, மறுமலர்ச்சி காலத்திய உரோமாபுரியிலும் சரி, பரவர்கள் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்களையே உரோமையர் பெண்கள் அணிந்திருந்தனர்" என்று குறிப்பிடுகிறார். சரி உரோமையர் பெண்கள் ஏன் பரவர்கள் மூழ்கி எடுத்த முத்துக்களால் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை விரும்பி அணிந்தனர்?

கடலில் மூழ்கி சிறந்த முத்துக்களை எடுப்பதில் பரவர்களுக்கு நிகரானவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை. இதனால் தான் இவ்வுலகில் கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்களில் சிறந்தவர்கள் பரவர்கள் மட்டுமே என்று குறிக்கப்படுகின்றனர்.


०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

ஆதாரம்:

Voyages to East Indies and Brazil by John Nieuhoff Pg. 262
Pearl to India by Vincent Cronin. Pg 33








-UNI

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com