வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 26 March 2015

வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 2
வேம்பாறும் அதன் பாதுகாவலரும்

இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக சந்த செபஸ்தியார் தங்கள் வாழ்வில் செய்த சகல உபகாரங்களுக்குப் பரிகாரமாகவும்இலங்கை தேசத்தில் வாழும் நிம்பவாசிகள் தாங்களின் பல்வேறு இடர்களிலிருந்து அடைந்த சகாயங்களுக்குக் கைமாறாகவும் 1952 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 அன்று வேம்பாற்றுவாசிகள் அனைவரும் இணைந்து அவருக்கு பசும்பொன்னாலான மகுடத்தினை அணிவித்து மகிழ்ந்தனர். 

        இவ்விழாவில் கலந்து கொண்டு முதன் முதலாக பசும்பொன் முடியை சூட்டிய மிக. வந். திபுர்ஸியஸ் ரோச் ஆண்டகை அவர்கள் சந்த செபஸ்தியாரின் மேல் நிம்பவாசிகள் கொண்ட ஆழ்ந்த பக்தியை நேரில் கண்டு அதிசயித்து, “அர்ச்சிஷ்ட செபஸ்தியாரின் பேரில் நிம்பவாசிகள் கொண்ட ஆழ்ந்த பக்தியை நேரில் கண்ட எனக்கும் அந்த அர்ச்சிஷ்டவரின் பேரில் அதிக பற்றுதல் தோன்றிவிட்டது. என்று கூறும் அளவிற்கு பக்தியினை புனிதரின் பேரில் கொண்டுள்ளனர்.

வேம்பாற்றைச் சார்ந்த நம்மவர் திரு. ம. செல்வம் காகு என்பவர் சந்த செபஸ்தியாரின் மேல் கொண்ட பற்றுதல் காரணமாகவும்தன் பெற்ற சகாயங்களுக்கு கைமாறாகவும் 1967 ஆம் ஆண்டு சந்த செபஸ்தியாருக்கென பங்கு ஆலயத்தின் அருகே (பழைய கல்லறைத் தோட்டத்தில்) எழிலுற அமைந்த மணிமண்டபத்தினை நிர்மாணித்து பக்தி முயற்சிகள் பெருக வழி வகுத்தார். அம்மணிமண்டபமானது மிக. வந். தாமஸ் பர்னாந்து ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திருத்தலமாக உயர்த்தப்பட்டது.


St. Sebastian's Shrine

     இவ்வாறு வேம்பாற்றில் அமைக்கப்பட்ட சந்த செபஸ்தியார் திருத்தலம் முத்துக்குளித்துறை மறைமாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்த திருத்தலமாக உள்ளது. இதற்கென திருவிழாவிற்கு அடுத்து வரும் இரண்டாம் நாள் திரு. ம. செல்வம் காகு அவர்களின் குடும்பத்தினருக்காக ஊர் சார்பாக சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்படுவதும் இன்றும் வழக்கிலுள்ளது. இம்மணிமண்டபத்தில் ஜனவரி 21 ஆம் தேதியன்று புனிதரின் திருவிழா கொண்டாடப்படுகிறது.

வேம்பாற்றின் பாதுகாவலராக தூய ஆவி ஆலயத்தில் குடியிருக்கும் அழகின் வடிவாய்பார்த்ததும் பரவசமடையச் செய்யும் சந்த செபஸ்தியாரின் சாந்தமிகு இச்சொரூபம் வேம்பாற்றிக்கு எவ்வாறு வந்ததுஎன்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றும் தற்சமயம் கிடைக்கவில்லை. மாறாக வாய்மொழிச்சான்றே பல கிடைக்கிறது. 

 அவற்றை அடுத்த பதிவில் காண்போம்........
- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com