பன்மீன் கூட்டம் - பாகம் 4
களவா(ய்)
கிளாத்தி (Trigger Fish)
![]() |
ல் சிக்கிய களவாய் |
- கல்லுக் களவா
- குமரிக் களவா
- சிவப்புக் களவா
- சிக் களவா
- தோக் களவா
- மஞ்சக் களவா
- மரக் களவா
- புள்ளிக் களவா
- பஞ்சிக் களவா
- பாரக் களவா
- தலைக் களவா
- உள்ளக் களவா
காளா
- கட்டிக்காளா
- கணாக் காளா
- சீனாக் காளா
- தாழன் காளா
- உள்ளக் காளா
காரல்
- அப்புக்காரல் (மீன்பிடி வலையில் வந்து அப்பும் காரல்)
- அமுக்குக் காரல்
- கலிகாரல்
- பொட்டுக்காரல்
- நெடுங்காரல்
- மஞ்சக் காரல்
- மரவுக்காரல்
- வரிக்காரல்
- வரவுக் காரல்
- உருவக் காரல் (குதிப்புக்காரல்)
- ஊசிக்காரல்
- ஒருவாக் காரல்
- பெருமுட்டிக் காரல்
- கவுட்டைக் காரல்
- நெய்க் காரல்
- வட்டக்காரல்
- கண்ணாடிக் காரல் (சில்லாட்டை காரல், பளபளவென பாதரம் பூசிய கண்ணாடி போல மிளிரும்)
- குழிக்காரல்
- குல்லிக்காரல்
- ஒட்டுக்காரல்
- செவிட்டுக்காரல்
- சென்னிக்காரல்
- காணாக் காரல்
- காணாவரிக்காரல் (வரிக்காரலில் சிறியது)
- காசிக் காரல்
- சுதும்புக் காரல்
- சலப்பக் காரல்
- சலப்ப முள்ளுக்காரல்
- சளுவக் காரல்
- சலப்பட்டக்காரல்
- சிற்றுருவக் காரல் (சித்துருவக் காரல்)
- பஞ்சக்காரல்
- விளக்குக்காரல்
- தீவட்டிக்காரல்
- கொம்புக் காரல்
- நாமக் காரல்
- பொடிக் காரல் (பூச்சிக்காரல்)
- பூட்டுக்காரல்
- முள்ளங்காரல்
- கார்வா(ர்)
- கானாங் கெழுத்தி
- காசியாபன்
- காடன்
- காக்கைக் கொத்தி (ஊசிமூக்கு உடையது)
காரை
- கூட்டுக்காரை
- சுதுப்புனம் காரை
- மஞ்சள் காரை
- காட்டாவு
கிளாத்தி (Trigger Fish)
பார்மீன்களில் ஓரினமான கிளாத்தி, பாலிஸ்டே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் முதுகில் 3 முள்கள் காணப்படும். முதல்முள் தடித்த கனமான முள். இதையடுத்து வால் பக்கம் இருக்கும் 2 ஆவது முள்ளை முன்னே தள்ளினால் மட்டுமே இந்த முதல்தடிமுள் உறுதியாக நிற்கும். 2 ஆவது முள்ளை பின்னோக்கி தள்ளினால் தடித்த முள் தளர்ந்து விடும். இதில் 3 ஆவது முள், துப்பாக்கியில் உள்ள இழுவிசை போன்றது. அது கிளாத்தியின் உடல்வழியாக 2 ஆவது முள்ளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மீன்களுக்கு டிரிக்கர் மீன் எனப் பெயர் வரக்காரணம் இந்த முள்தான்.
இந்த தடித்த முதல் முள், மேற்பாறைகளில் குத்திக் கொண்டு கிளாத்தி மீன் நீந்தாமல் ஓரிடத்தில் நிற்க உதவுகிறது. பிறசிறு மீன்களை விரட்டி இரை கொள்ளக்கூடிய கிளாத்தி, தனக்கு ஆபத்து எதிரிடும்போது பார்பொந்துக்குள் உடலைத் திணித்து, முதுகு முள்ளை பாரில்குத்தி தன்னை இறுக்கி ஒளிந்து கொள்ளும்.
கிளாத்தியின் முதுகுப்பின் தூவியும், வால்பக்க அடித்தூவியும், ஒரே அளவாக, பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். கிளாத்தி மீனின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. கிளாத்தி அதன் பற்களை நறநறத்தோ, அல்லது எண்ணெய் கொண்ட வயிற்றுப் பள்ளையை அசைத்து சத்தம் எழுப்பக்கூடியது. இப்படி ஓசை எழுப்பாத கிளாத்தி ஊமைக் கிளாத்தி என அழைக்கப்படுகிறது.
கிளாத்தியில் பல வகைகள் உள்ளன.கிளாத்தியின் சற்று கனமான தோலைக் கழற்றிவிட்டு சிலர் அதை உண்பார்கள். சிலர் கிளாத்தியை உண்ணமாட்டார்கள்.
- மோகன ரூபன்