சந்த செபஸ்தியார் பேரில் பாடல்

இதயங்கனிந் தெமக்கிரங்கிட வாராய் இவ்வேளை
சதமெனவே எண்ணியாம் பதமே கூடினோம் இவ்வேளை
விதவிதவாத்தியம் முழங்கிடும் பெருமை இவ்வேளை
ததிகொண்டடி வீழும் தனையரெம்மைத் தாபரி இவ்வேளை
தண்டமிழ் நாட்டில் விளங்கும் இவ்வூரில்
அண்டிடுவர் சேவடி அடைக்கலமாக இவ்வூரில்
பண்டிதமணியே படைக்கல அணியே இவ்வூரில்
மன்றாடிடும் மாந்தர் மயக்கம் தன்னை மாற்றிடும் இவ்வூரில்
அன்புருவானோர் என்பையுமீவார் மெய்யோனே
விண்ணிறையிடம் கொண்ட அன்பதனாலே மெய்யோனே
உன்னரும் ஆவி உவகையோ டீன்றாய் மெய்யோனே
பண்பாகிடும் வீரம் விளைந்திடச் செய் எம்மில் மெய்யோனே
பருவ மழையுடன் பசுங்கதிர் மணிகள் இந்நாட்டில்
அறுவடைகள் மிகுந்திட அருள் சுரப்பாயே இந்நாட்டில்
கரமது கூப்பி சிரமதுபணிந்தோம் இந்நாட்டில்
மறையோனிடம் சென்று மனுக்கொடுப்பீர் மாதவ விண்ணாட்டில்