திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்
ஆதிகர்த்தர் எம்மைமீட்கப் பூதலத்தில் மீதிலே
ஓதுபெத்தலெம் புரியிலே தீது வெல்லைக் கிரியிலே
பாதி நள்ளிராவிலே பழைய மாட்டுக் குடிலிலே
பாலனாகக் கோலம் சொரிந்து பாரில் மனிதனாப் பிறந்து
சீலராக எம்மைப் புரந்து சிலுவை ஏறிக் கதியைத் திறந்தாயே
வானவர்கணங்கள் கூடி ஞானகீதம் பாடவே
ஈன அலகை வாடவே கோனர் பணிந்தேகவே
தீனதயாளர் நீடவே தீதகன்று ஓடவே
திகழும் மரியின் பாலனாக திருக் கண்ணோக்கும் சீலனாக
இகலில் மனுவேலனாக எமக்கென்றும் அனுகூலனாகவே
தாதை சூசையும் தாலாட்ட தாய்மரி பாலூட்டவே
மேதையோர்கள் போற்றவே சோதி வுடுத்தோன்றவே
சீதமலர் சாற்றவே சிறுபனித் தூற்றவே
செய்யப்பாலன் ஐயோ அழுது செகத்தை மீட்கும் நாள் இப்போழுது
துய்யமலர் தாளே தொழுது தோத்தரிப்போம் எப்பொழுதுமே
அண்டசாரசர மனைத்தும் உண்டுபண்ணும் கர்த்தனே
மண்டலத்தின் சுத்தனே அண்டர்பணி அத்தனே
மானிடதேகம் எடுத்தோனே
மாசில்லாமல் உற்பவித்து நேசத்தாய் வயிற்றுதித்து
சேசுவென்னும் பெயர் தரித்து செகத்தை மீட்டுப் பாதுகாத்தாயே