அர்ச். தனிஸ்லாஸ் பேரில்
வல்லவராம் சிஷ்ட ஸ்தனிஸ்லாஸ்

ஞானமென்னும் பானமெதை
கான வாழ்வில் (கொண்ட) உண்ட சீலன்
தேவதாயின் திருமகனைத்
தேடிக் கையில் ஏந்தினாய்
சேசுசபை தன்னில் சேர
சிறந்த உம்மில் நேசமதை
சிந்தித்து யாம் மனதில் கொள்ள
சிறுவரின் இருதயம் திறப்பீர்
நிம்ப நகரம்பதியில்
நிருவிய நின்னருள் சபையில்
நீடிக்க யாம் உம்மையண்டி
நிதமே தொழுவோம் எம்மின் தாதா