வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 6 October 2017

J.P. சந்திரபாபுவின் வாழ்வில்

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள அன்னை பாத்திமா திருத்தலத்தில் உள்ள கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட பணம் இல்லாமல் போனது. அப்போது ஒரு முதியவர் நடிகர் சந்திரபாபுவை சந்தித்து உதவி கேட்கலாம் என்று யோசனை கூறினார்.

அப்போது கிருஷ்ணகிரியின் மலை அடிவாரத்தில் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்து. அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி  குழந்தை நாதர் அடிகள் ஊர் பொது மக்களுடன் தூத்துக்குடி சென்று அங்கு நடிகர் சந்திரபாபு அவர்களைப் பார்த்து உதவி கேட்டனர். உடனே அவர் ஒரு கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யுங்கள். நான் வந்து சிறப்பாக நடத்தி தருகிறேன்.

அந்த நிகழ்ச்சியில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் முழுவதும் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட நன்கொடையாக எடுத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள். எனக்கூறி ஒரு கலை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தந்தார் இந்த கலைநிகழ்ச்சி ஏப்ரல் 1958 ல் நடத்தப்பட்டது. இதில் வசூல் ஆன தொகை ரூ 10 000. இந்த நிகழ்ச்சிக்காக தூத்துக்குடியில் இருந்து காரில் வந்து சென்றதற்கான பெற்றோலுக்கு கூட பணம் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

இவர் செய்த உதவியின் காரணமாக 3/05/1958ல் மேதகு ஆயர் செல்வநாதர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இவருடைய உதவியை மறவாமல் இன்று வரை (கடந்த 49 ஆண்டுகளாக) வருடம் ஒரு முறை நடத்தப்படும் மாதா தேர் திருவிழாவின் முதல் நாள் ஜெபமாலையில் முதல் பத்துமனி திரு சந்திரபாபு அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com