வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 20 October 2017

தமிழில் அரபுச்சொற்கள் ..

பண்டைய தமிழகத்துடன் அரேபியர்கள் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர் என்பதற்கு சான்றாக பல்வேறு வரலாற்று ஆவணங்கள் காணப்படுகின்றன எனினும் பேச்சு வழக்கில் பல்வேறு அரேபிய சொற்கள் தமிழ் மொழியுடன் கலந்து உள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்....

அசல் أصل மூலம்

மாஜிماضي முந்தைய

அத்து حد வரம்பு

முகாம்مقام தங்குமிடம்

அத்தர் عطر மணப்பொருள்

முலாம்ملام மேற்பூச்சு

அமுல் عمل நடைமுறை

ரத்துرد விலக்கு/நீக்கம்

அனாமத்أنعمت கேட்பாரற்ற

ரசீதுرصيد ஒப்புப் படிவம்

அல்வாحلوه இனிப்பு

ராஜிراضي உடன்பாடு

ஆஜர்حاظر வருகை

ருஜுرجوع உறுதிப்பாடு

ஆபத்துآفت துன்பம்

ருமால்رمال கைக்குட்டை

இனாம்انعام நன்கொடை

லாயக்لائق தகுதி

இலாகாعلاقة துறை

வக்கீல்وكيل வழக்குரைஞர்

கஜானாخزانة கருவூலம்

வக்காலத்துوكالة பரிந்துரை

காலிخالي வெற்றிடம்

வகையறாوغيره முதலான

காய்தாقاعدة

தலைமை/வரம்பு

வசூல்وصول திரட்டு

காஜிقاضي நீதிபதி

வாய்தாوعده தவணை

கைதிقيد சிறையாளி

வாரிசுوارث உரியவர்

சவால்سوال  அறைகூவல்/கேள்வி

சர்பத்شربة குளிர்பானம்

ஜாமீன்ضمان பிணை

சரத்துشرط நிபந்தனை

ஜில்லாضلعة மாவட்டம்

தகராறு تكرار வம்பு

தாவாدعوة வழக்கு

திவான்ديوان அமைச்சர்

பதில்بدل மறுமொழி

பாக்கிباقي நிலுவை

மஹால்محل மாளிகை

மகசூல்محصول அறுவடை

மாமூல்معمول வழக்கம்.

- JAMIA MUHAMMADIA
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com