வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 1 April 2015

களியலாட்டப்பாடல்-1



பரிசுத்த பனிமய அன்னையின் புகழ் பாடவேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் எழுத்தோவியத்தில் உருவாகிகாலம் காலமாக வேம்பாற்று  இளைஞர்களால் களியலாட்டம் மூலம் நினைவு கூறப்படும் பாடல் வரிகள் ......




தாமதம் இதுவென்ன தோழர்களே - திமி
ததிகிணத்தோம்  எனத் தாளங்கள் முழங்கிட (தாமதம்)

நாமமுயர்ந்திடு வளர் நல்ல மணவாளி
நங்கையர்களுக்கரசி சங்கை சேர் குணாளி
சேமமிகு அற்புதஞ்சேர்  செல்வியாம் தயாளி
தேவனைப் (ப)ஈன்ற மாதாவுக் கென்றும் வாழி - (2)

தேவுலக கன்னிமா - மரிய தசுநே
விஸ் அன்னை மகராசி இருபதம் -(2)

தெண்டனிட்டவள்  அடியைக் கண்டு மகிழ் கொண்டிடவே
ஆடிகீதம் ஓடிகீதம் பாடி விளையாடிச் செல்ல

பாவலர் புகழொரு மகராசி
திருநங்கை யெனுலகுபிரு
மங்கை யென்னும் உல்லாசி
பாவலர் புகழொரு மகராசி

தேவநற்கனி, பழுத்த தேன்பொழியும் வனமே
தென்றிசை கொடுத்தெடுத்த  ஒன்பது ரத்தினமே
நாவினால் உனைப்புகழ வந்திடுவாய் மனமே!
நாயகி நமக்கிருக்க ஏன் சலிப்பு மனமே - (2)

நாகரிகமுடன் நாம் களியல் விளையா
டிடுவோம் இது சாரிசநிதப - (2)

நங்கை திருமங்கை தனை சங்கையுடன் போற்றிசெய்து
ஆடிகீதம்  ஓடிகீதம் பாடி விளையாடிச் செல்ல

தாமதம் இதுவென்ன தோழர்களே - திமி
ததிகிணத்தோம்  எனத் தாளங்கள் முழங்கிட (தாமதம்)
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com