புனித ஜோசப் சிறுவர் கருணை இல்லத்தின் பொன் விழா
எதிர்
வரும் 12.4.2015 ஞாயிறு அன்று நமதூரின் உயிர் மூச்சாக செயல்படும் புனித செபஸ்தியார்
நடுநிலைப் பள்ளியின் முக்கிய அங்கமாக விளங்கும் புனித ஜோசப் சிறுவர் கருணை இல்லத்தின்
50 ஆண்டு நிறைவு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. அன்று முழுவதும் பற்பல நிகழ்வுகள்
நமது கன்னியர் இல்லத்தில் வைத்து நடைபெற உள்ளதால் வேம்பாற்று மண்ணின் மைந்தர்கள் தவறாமல்
கலந்து கொண்டு குழந்தைகளை ஊக்குவிக்குமாறும், நமதூரில் 50 ஆண்டுகள் சிறப்பாக கல்விப் பணி ஆற்றும் புனித ஜோசப் சிறுவர் கருணை இல்லத்தின்
பொன்விழா சிறக்க வழி செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.