ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரரை நோக்கிய ஜெபம்
நவநாள் செபம் :
எங்கள் மீதும், எங்கள் குடும்பங்கள், உற்றார், உறவினர் மீதும்
உலகக் கிறிஸ்தவர்கள் அனைவர் மீதும் மனம் இரங்கியருளும். சர்வேஸ்ரனுடைய ஏவுதலுக்கு செவிசாய்த்த, உமது வியப்பிற்குரிய
பிரமாணிக்கத்தையும், பிராணனைத் தர மிகவும் அபேட்சித்த உம்மைத் தளராத விசுவாசத்தையும்
எண்ணி உம்மைப் புகழ்கின்றோம். உமது நெஞ்சத்தில் பற்றி எரிந்த விசுவாச ஒளி எங்கள்
நெஞ்சிலும் பற்றி எரியச் செய்தருளும்.
மகிமை நிறைந்த
வேதசாட்சியே! கொள்ளை நோய், பெருவாரிக் காய்ச்சல், வைசூரி முதலான வியாதி
வருத்தங்கள் நீக்கும் மருத்துவரே! எங்களின் நேசப் பாதுகாவலரே! உமது ஆன்மீக
உழைப்புகளையும், ஜெபதபங்களையும், வீர தியாகத்தையும் முன்னிட்டு எங்களுக்கு வரும்
துன்பங்களைப் பொறுமையோடு சகித்துக்கொள்ளவும், எங்களை இடரும் வியாதி,
வருத்தங்களிலிருந்து விடுதலை அடைந்து மனிதனை விட ஏக சர்வேஸ்ரனுக்கு மட்டுமே பயந்து
வாழும் வரம் பெற்றுத்தாரும்.
பகையினை விரட்டுகிற
சேனாதிபதியான சந்த செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களின் சகாயமும், எங்கள் தாயாரும்,
வழிகாட்டியுமான அதிபரிசுத்த தேவதாயின் மீது உமக்குள்ள நேசத்தைக் குறித்து, மதுரம்
நிறைந்த அத்தாயாரின் மீது இடையறாத உண்மை பக்தி பெருகவும், விசேஷமாய் எங்கள் மரண
நேரத்தில் அவருடைய பாதுகாப்பிற்கு நாங்கள் பத்திரவான்கள் ஆகவும் வேண்டிய வரம்
பெற்றுத் தாரும்.
சேசு நாதரை நேரில்
கண்ணும் வரம் பெற்ற சந்த செபஸ்தியாரே! சேசுவினிடத்தில் கொண்ட அத்தியந்த இரக்க
நேசத்தில் நீர் அதிகரித்திருக்கின்றீர் ஆதலால், நீர் அவரைக் கேட்பவைகளை எல்லாம், அவரிடமிருந்து நீர்
பெற்றுக்கொள்ளக் கூடியவராய் இருக்கின்றீர். இதனிமித்தம் நம்பிக்கையுடன் உம்மை
அண்டி வந்து, நாங்கள் உம்மிடம் கேட்கும் விண்ணப்பங்களுக்கு சர்வேஸ்ரனிடத்தில்
உமக்குள்ள வல்லபத்தைக் கட்டி எங்கள்
மன்றாடுகளுக்கு அணுகூலமாயிரும்.
சர்வேஸ்ரனுடைய மகிமைக்காகவும், உமது பக்தி
பரப்புதலுக்காகவும், உம்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் ஆறுதலுக்காகவும், அநேக
ஆசாரியமான விஷயங்களில் நீர் எங்களுக்கு உதவி புரிந்தது போல, இப்பொழுதும் உமது
உதவியை ஏராளமாய்ப் பொழிந்தருளும். (தேவைக்காக மன்றடவும்) எங்கள் வேண்டுதல்கள்
தந்தருளப்படுவதால், நீர் செய்த உபகாரங்களை வெளிப்படுத்துவதில் உம்மை
மகிமைப்படுத்தி, உமது புகழ்ச்சியை என்றென்றும் பாடிப்புகழ வாக்களிக்கிறோம்.
ஆமென்