வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 1 April 2015

மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்


450 ஆண்டுகள் பழமையானது. வேம்பார் சர்ப்பமடம் பகுதியில் இருந்த  மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலிருந்து இவ்வாலய சிலைகள் கொண்டுவரப்பட்டது. அவ்வாறே வேம்பார் சிவபெரும்குன்றம் பகுதிலிருந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலிருந்த சிலைகள் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் கொண்டு செல்லப்பட்டது.  

மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை திருநெல்வேலி மேடைத்தளவாயில் வசிக்கும் அரியநாயகி முதலியார் குடும்பம் நிர்வகித்து வருகிறது. இக்குடும்பத்துக்கே பத்தியப்பட்டது. மேல்மாந்தையில் உருவான முதல் ஆலயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகும். ஜமின் காலத்தில் மிகுந்த செல்வாக்குடனும் சீருடனும் திகழ்ந்தது. பற்பல இடங்களில் நிலபுலன்கள் இருந்தன. தற்போது ஆலயமும் அதனைச் சுற்றிய இடங்களும் மட்டுமே உள்ளன. 

இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமே ஆலயப் பராமரிப்புக்கு உதவுகிறது. ஆலயத்தில் வழிபாடுகள் காலையிலும், மாலையிலும் நடைபெருகின்றன. இவ்வாலயத்திற்கு இருவாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் நோக்கி சுந்தரேஸ்வரர் பீடமும் தெற்கு வாயிலை நோக்கி மீனாட்சியம்மன் பீடமும் அமைந்துள்ளது. இங்கு சிவன், மீனாட்சி, சுப்பிரமணியன், விநாயகர், சண்டிகேஸ்வரர், பைரவர், தட்சனாமூர்த்தி, முதலிய சிலைகள் உள்ளன.

வேம்பார் சிவபெரும்குன்றம் பகுதி இன்றும் அரசின் வருவாய் துறையால்  ‘சிவபெரும்குன்றம் மால்’ என்றே அழைக்கப்படுகிறது. (இது டிமேல் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.)
-    சங்கரநாராயணன் – அர்ச்சகர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், மேல்மாந்தை
(4 தலைமுறையாக இவ்வாலயத்தில் பணி செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்) 

நேர்காணல் நாள் : 15.07.2013
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com