கிறிஸ்தவம் தழுவிய பின் பரதவ சாதி தலைவர்கள் பட்டியல்
- சி.சி.தொன் சுவாம் தெக்குருஸ் விக்கிரம ஆதித்த பாண்டியன் - (1543 - 1553)
- சி.சி.தொன் மிக்கேல் சுவாம் தெக்குருஸ் பரத வர்ம பாண்டியன் - (1553 - 1562)
- சி.சி.தோனா மரியா மர்கரித் தெக்குருஸ் பரதவர்ம பாண்டியதேவி - (1562 - 1565)
- சி.சி.தொன் லூயிஸ் எஸ்தேவான் தெக்குருஸ் பீரிஸ் பரதவர்ம பாண்டியன் - (1565 - 1590)
- சி.சி.தொன் எரோணிமுஸ் சுவாம் தெக்குருஸ் பீரிஸ் பரதவர்ம பாண்டியன் - (1590 - 1615)
- சி.சி.தொன் மிக்கேல் எரோணிமுஸ் தெக்குருஸ் பீரிஸ் பரதவர்ம பாண்டியன் - (1615 - 1641)
- சி.சி.தொன் சவியர் மிக்கேல் தெக்குருஸ் பீரிஸ் பரதவர்ம பாண்டியன் - (1641 - 1646)
- சி.சி.தொன் சவியர் ஹென்றி தெக்குருஸ் கொரைரா பரதவர்ம பாண்டியன் - (1646 - 1671)
- சி.சி.தொன் ஜோசப்ஹென்றி தெக்குருஸ் கொரைரா பரதவர்ம பாண்டியன் - (1671 - 1680)
- சி.சி.தொன் எஸ்தேவான் தெக்குருஸ் பூபாலராய பரதவர்ம பாண்டியன் - (1680 - 1686)
- சி.சி.தொன் கபிரியேல் தெக்குருஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் - (1680 - 1700)
- சி.சி.தொன் சூசை தெக்குருஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் - (1700 - 1716)
- சி.சி.தொன் கபிரியேல் ஆரோக்கிய தெக்குருஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் - (1716 - 1736)
- சி.சி.தொன் மிக்கேல் பேதுரு தெக்குருஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் - (1736 - 1750)
- சி.சி.தொன் கஸ்பார் அந்தோணி தெக்குருஸ் வாஸ் விக்டோரியா பரதவர்ம பாண்டியன் - (1750 - 1779)
- சி.சி.தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் - (1779 - 1808)
- சி.சி.தொன் கஸ்பார் அந்தோணி தெக்குருஸ் வாஸ் கொரைரா பரதவர்ம பாண்டியன் - (1808 - 1839)
- சி.சி.தொன் சூசை அந்தோணி தெக்குருஸ் வாஸ் பல்தான் பரதவர்ம பாண்டியன் - (1839 - 1856)
- சி.சி.தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் பல்தான் பரதவர்ம பாண்டியன் - (1856 - 1889)
- சி.சி.தொன் கபிரியேல் தெக்குருஸ் லாசருஸ் மோத்தா வாஸ் பரதவர்ம பாண்டியன் - (1889 - 1914)
- சி.சி.தொன் மனுவேல் லூயிஸ் தெக்குருஸ் அனஸ்தாசியுஸ் மோத்தா கொரைரா பரதவர்ம பாண்டியன் - (1926 - 1952)
மேற்கண்ட பட்டியலை பரதவ சாதி தலைவர்களின் வாரிசான பெர்க்மான்ஸ் மோத்தா பாண்டியாபதியின் பல்வேறு கோப்புகளிலிருந்து தருகிறார்.
![]() |
THE LAST KING OF PARATHAVARS |
எல்லாச் சாதித் தலைவரும் தங்கள் பெயருக்கு முன் சிஞ்ஞோர் சிஞ்ஞோர் தொன் என்னும் போர்த்துக்கீசிய தகுதிப் பட்டத்தையும், பெயருக்குப் பின் பரதவர்ம பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் குடிபெயரையும் தாங்கியிருந்தனர். பரதவ சமுதாயம் கிறிஸ்தவம் தழுவ உதவிய சுவாம் தெக்குருஸ் என்னும் வணிகரின் நினைவாக தங்கள் பெயருடன் தெக்குருஸ் என்னும் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்.
வாரிசு இல்லாத போது மகளுக்கோ அல்லது மகளின் கணவருக்கோ சாதித் தலைவர் பட்டம் சூட்டப்பட்டது. மகளின் திருமணத்தின் பின் மகளின் கணவர் சாதித்தலைவர் பொறுப்பினை ஏற்றதும் உண்டு.