வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 16 September 2015

பருவ காற்றும் கடலோடிகளும்
இந்த வட கிழக்கு பருவ காற்றுகள் கொண்ட முழு இரவு நாள் பண்டைய காலத்தில் கிழக்கு செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டும் நாளாக இருந்தது

முழு இரவு நாளில் வானம் மூட்டமற்று இருக்கும்போது ஆகாயத்தில் பால்வீதி தெளிவாகத் தெரியும். பெருங்கரடி ( சப்தரிஷி ) உடுத் தொகுதியும் கப்பல் வெள்ளியும், விடிவெள்ளியும் மாலைவெள்ளியும் தெளிவாகத் தெரியும். சூரியன் உதிக்கும் திசை எல்லாக் காலங்களிலும் நேர் கிழக்கு அல்ல. நிலநடுக்கோட்டு அகலாங்குக்கு நேர் செங்குத்தாக பூமி சூரியனுக்கு முகம் கொடுக்கும் காலங்களில் மட்டுமே சூரியன் உதிக்கும் திசை நேர்கிழக்கு. 

இரவில் சப்த ரிஷி மண்டலம் எனப்படு பெருங்கரடி உடுத்தொகுதியின் தலை எனச் சொல்லப்படும் முக்கோண வடிவின் மூன்று உடுக்களையும் இணைத்தால் வால் பகுதிக்கு எதிரே இருக்கும் உடு சுட்டும் திசை பூமியின் உண்மை வடக்கு. அதை முனையாகக் கொண்ட முக்கோணத்தின் அடிப்பக்க நேர்கோடு பூமியின் கிழக்கு-மேற்கு நேர்த் திசைச் கோடு.  இந்த உடுத் தொகுதி நேர் உச்ச வானில் இருக்கும்போது திசை அறிதல் இலகுவாக இருக்கும்.


திசைகாட்டி பயன்பாட்டுக்கு வந்த பின்னர் அவற்றின் மூலம் சம நிலத்தில் குறிக்கம்புகளை ( picket post / aim post ) நட்டு அடையாளங்களை செய்து பின்னர் திசை காட்டியை இணைத்து அந்தப் பிரதேசத்தின் சராசரி காந்தக் கோணத்தைக் கணக்கிடுவர்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நில அளவையாளர்கள் தியோடலைட் கருவியை வரைபடத்துடன் இணைத்து நில அளவை செய்யத் தொடங்குமுன்னர் திசை குறித்தலில் சந்தேகம் எழுந்தால் வழுத்திருத்தம் செய்ய பெருங்கரடி உடுத் தொகுதியுடன் நிலை அமைவு செய்து குறிக்கம்பங்களை நட்டு விட்டு பகலில் மீண்டும் அவற்றைக் கருவியுடன் இணைத்து வழுத்திருத்தம் செய்வர்.

இன்றும் சில பழைய கடலோடிகள் Gyro Compass இனை வழுத்திருத்தம் செய்ய பெருங்கரடி உடுத் தொகுதியின் திசைசார்பு முறையினைப் பயன்படுத்துகின்றனர். கடலில் பயணிக்கும் போது GPS தொடர்புகள் பலவீனமாக உணரும் போது Almanac / Chart உடன் வானில் இருக்கும் உடுக்களின் அமைவிடச் சார்புக் குறிநிலையையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்துகின்றனர்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com