ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரர் பேரில் பாடல்
சந்த செபஸ்தியானுவெனும்

உந்தனருள் தந்திடவே
மைந்தரும்மைப் போற்றி செய்தோம்
நேசமிகு நர்போன் தேச
வாசனே தியோக்ளேசியனின்
வீசுபுகழ் சேனாதிப
மேன்மை உத்யோகத்தமர்ந்த
சேசுபரன் வேதமதை
காசினியில் ஓதினதை
இராசனறிந்தே உமையே
இரத்தம் சிந்த வாதை செய்தான்
வம்புறு புரவலனால்
உம்பர்கோன் பதம் சேர்ந்தபின்
நிம்பைநகர் நண்பர்கட்கோர்
தம்பமென வந்திருந்தீர்
இந்நகரை வன்னலகை
பின்னமுறச் செய்வதினால்
உன்னருளால் பின்னமற
ஓர் புதுமை செய்தருளும்