வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 13 April 2016

சோழர்களின் கடல் வணிகம்
சோழர்களின் கடல் வணிகமானது மூன்று நிலைகளை கொண்டது. தமிழகத்தில் இருந்து முத்துக்கள், நவமணிகள், தந்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட வாசனை பொருட்களை ஏற்றி கொண்டு சீனாவுக்கு போவது. சீனாவிடம் விற்று விட்டு அங்கிருந்து பட்டு துணி, இரும்பு, பீங்கான் பாத்திரங்கள், அலங்கார பொருட்களை கொண்டுவருவது அவற்றை இந்தியாவில் விற்றுவிட்டு மீதி இருப்பதை அரபுநாடுகளுக்கு குறிப்பாக பாக்தாத் நகர் வணிக சந்தையில் விற்பதற்காக அராபிய வணிகர்களிடம் ஒப்படைப்பது. அரேபியாவில் இருந்து குதிரைகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து சோழ மன்னர்களிடம் விற்பது .ஆகவே சோழர்களின் கடல் பயணத்துக்கு சீனர்களும், அரேபியர்களும் உதவிசெய்ய வேண்டிய அவசியம் இருந்தது .

1020-ஆம் ஆண்டு சோழ மன்னர் ராஜேந்திரன் சீனாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி சாங் மன்னருடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார். அதற்காக சீன அரசனுக்கு ஏராளமான பரிசுகளை அளித்து தூதுக்குழுவை அனுப்பி வைத்தார் .அந்த பரிசுகளை ஏற்றுகொண்ட சீன அரசர் தூதுக்குழுவினருக்கு பட்டு துணிகளை பரிசளித்து கௌரவப்படுத்தி இருக்கிறார். அதனால் சீனாவுடன் தொடர்ந்த நல்லுறவு சோழர்களின் கடல் வணிகத்திற்கு சாதகமாக அமைந்தது. அது குறித்து சீனக்குறிப்புகள் கூறுகிறபோதும். 

தமிழகத்தில் நேரடியாக கல்வெட்டு சான்றுகள் எதுவும் காணப்படவில்லை. ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணபட்டணத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு ஒன்றில் மரக்கலம்,தோணி,படகு, கலவம், வேதி என்ற ஐந்து விதமான கடல் கலங்களை பற்றிய விவரங்கள் இருக்கின்றன .அதில் மரக்கலம், தோணி போன்றவை படகை போன்று நான்கு மடங்கு பெரியவை என கூறப்பட்டு இருக்கிறது.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com