வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 12 April 2016

சிலுவை நண்டு

பதினாறாம் நூற்றாண்டில் பெரிய தகப்பன் புனித சவேரியார் ஒருமுறை மலாக்கா தீவுக்கு சென்று கொண்டிருக்கும் போது கடலில் பெரும் புயல் உருவாகி அவர் சென்று கொண்டிருந்த கப்பலை  நிலைகுலையச் செய்தது. அப்போது சவேரியார் தன்னுடைய கையில் வைத்திருந்த இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சிலுவையை தனது கைகளில் உயர்த்தி பிடித்து செபிக்க தொடங்கினார். அவரது செபத்தின் வல்லமையால் புயல் அடங்கியது. ஆனால் துரதிஷ்டவசமாக சவேரியாரின் கையில் இருந்த பாடுபட்ட சிலுவை கடலில் விழுந்து மூழ்கியது. சவேரியார் கலக்கமுற்றார்.

மறுநாள்  நண்டு ஓன்று தன்னுடைய இடுக்கு கைகளில் சவேரியார் கடலில் விழுந்த இயேசுவின் பாடுபட்ட சிலுவையை பிடித்துக் கொண்டு வந்தது. இதைக் கண்ட தூய சவேரியார் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். சிலுவையை பெற்றுக் கொண்ட சவேரியார், மகிழ்ச்சி பொங்க அந்த நண்டை ஆசீர்வதித்தார்.

அந்த இனத்து நண்டுகளின் முதுகில் இன்றளவும் அந்த சிலுவை அடையாளம் உள்ளது என்பது வியக்கத்தக்கதாகும். இங்குள்ள பரதவர்கள் இந்த இனத்தின் நண்டுகளை குருசு நண்டு என அழைகின்றார்கள். அவற்றைப் புனிதமாகக் கருதுவதால் இன்றளவும் உணவுக்கு குருசு நண்டுகளை பயன்படுத்துவதோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com