வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 12 April 2016

சிப்பி மீன் & உருளை கிழங்கு ரெசிபி


தேவையான பொருட்கள்

  1. அரிசி - 300 கிராம்
  2. சிப்பி மீன் - 1 கிலோ கிராம்
  3. வெங்காயம் - 2 நடுத்தர அளவு
  4. பூண்டு - 3 பற்கள்
  5. தக்காளி - 200 கிராம்
  6. உருளைக்கிழங்கு - 1 (பெரியது)
  7. மல்லித் தளை - ஒரு கைப்பிடி அளவு
  8. உப்பு - தேவையான அளவு
  9. நல்ல மிளகு தூள் - தேவையான அளவு
  10. வினிகர் , சீஸ்
  11. தேங்காய் எண்ணெய்


செய்முறை:

சிப்பியை நன்கு சுத்தம் செய்து அதிலுள்ள ஓட்டின் மேலுள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி விடவும். ஏனென்றால் அதன் ஓட்டையும் சேர்த்து சமைக்க வேண்டும்.

வாணலியில் சிப்பிகளை போட்டு ஒரு மூடியால் மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

சிப்பியின் ஓடு திறக்கும் வரை காத்திருந்து பின் தீயை அணைத்து விடவும்.

வெங்காயம் தக்காளி மற்றும் மல்லித் தளையை நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு உருளைக் கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பெரிய கடாயில் தேங்காய் எண்ணெய்,சிறிது வெங்காயம், தக்காளி, மல்லித்தளை, உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்.

பின்பு உருளைக் கிழங்கை படத்தில் உள்ளது போல அவற்றின் மீது இடைவெளி இல்லாமல் மூடி வைக்கவும்.

பின்பு மீண்டும் தேங்காய் எண்ணெய்,சிறிது வெங்காயம், தக்காளி, மல்லித்தளை, உப்பு, நல்ல மிளகு தூள் மற்றும் சீஸ் போன்றவற்றை போடவும்.

பின்பு சிப்பியை திறந்து சதைப்பகுதி உள்ள ஓட்டை மட்டும் எடுத்து அதனை படத்தில் உள்ளது போல் அதன் மேல் வைக்கவும்.மீதமுள்ள ஓட்டையும் தனியே வைத்திருக்கவும். ஏனெனில் அதிலுள்ள நீரை நாம் பயன்படுத்த வேண்டும்.

பின்பு அதன் மேல் பூண்டு மற்றும் மல்லித் தளை சேர்க்கவும்.

அதன் மேல் அரிசியை போடவும்.
மீண்டும் அதன் மேல் மீண்டும் தேங்காய் எண்ணெய், சிறிது வெங்காயம், தக்காளி, மல்லித்தளை,உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் ஆகியவற்றை போடவும்.

பின்பு ஒரு கைப்பிடி அளவு சீஸ் சேர்க்கவும்.

பின்பு சிப்பியை வேக வைத்த வாணலியில் உள்ள நீரை வடிகட்டி எடுக்கவும்.

அந்த நீரை கடாயில் அவை மூழ்கும் அளவு விடவும்.தேவைப்பட்டால் நீர் சேர்க்கவும்.

பின்பு மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும்.
கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

பின்பு அதனை எடுத்து தீ நேரடியாக படாதவாறு கரியின் மூலம் வேக வைக்கவும்.

அதிலுள்ள நீர் முழுவதையும் உருளை கிழங்கு மற்றும் அரிசி எடுத்துக் கொள்ளும் வரை வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com