

அங்குள்ள கல்வெட்டு கூறும் செய்தியாவது....
BHARATHA HOME
THIS HOME FOR BHARATHA
TRAVELLERS IS DEDICATED TO THE
COMMUNITY BY THE FIVE SONS OF THE
LATE MR. FRANCIS XAVIER PERIERA
IS COMMEMORATION OF THE FOURTH
CENTENARY OF THE CONVERSION
OF THE BHARATHARS
1535 – 1935
THIS WAS DECLARED OPEN BY
M. RUTHNASAMY.ESQUIRE C.I.E.
ON 3ED AUGUST 1937
மற்றொரு கல்வெட்டு கூறும் செய்தியாவது....
அடிக்கல் நாட்டியவர் J.L.P. ROCHE VICTORIA ” என்றுள்ளது.
பச்சரிசி 1 கோப்பை, 5 தேங்காய், சர்க்கரை 1 கிலோ, பனை வெல்லம் 250 கிராம், 4 மேசைக் கரண்டி ஜவ்வரிசி (அல்லது அதே அளவு வறுத்த பாசிப்பருப்பு) ஏலக்காய் தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அகன்ற சட்டியில் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் (6 டம்ளர்), சீனி, பனை வெள்ளம், பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக ஊற்றி இரண்டு மணி நேரம் கிளர வேண்டும்.
பின்னர் 2 டம்ளர் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலவை திரண்டு அல்வா போன்ற வடிவம் வரும் வரையிலும் கிண்ட வேண்டும். பின்னர் ஏலக்காயைப் பொடியாக்கித் தூவ வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பை மேலே தூவலாம்.
அல்வா வடிவத்தில் கையில் ஒட்டாத பதம் வந்ததும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் கேக்குகள் போன்று வெட்டிப் பரிமாறலாம்.
நன்றி: தி தமிழ் ஹிந்து
நன்றி: தி தமிழ் ஹிந்து
கீழக்கரை தொதல்
Heritage Vembarites
05:56

இந்த கீழ்க்கண்ட வார்த்தைப்பாடு 258 ஆண்டுகட்கு முன் நம் முன்னோர்களால் தஸ்நேவிஸ் மாதாவுக்குத் தரப்பட்டதாகும்.

இது 1947 ஆண்டு வெளிவந்த பனிமய மலரில் காணப்பெற்றது. இதை இப்பொழுது வெளிக்கொண்டு வருவதின் நோக்கங்கள் மூன்றாகும்.
1) இதன் பழமையை வெளிப்படுத்துதல்: 258 ஆண்டுகட்கு முந்திய வார்த்தைப்பாடு இது.
2) நம் முன்னோரின் மாதா பக்தியையும் மாதாவிற்கு நம் சமர்ப்பணத்தையும் வெளிக்கொணர்தல்.
3) இதில் நம் முன்னோர்களால் எழுதப்பட்டுள்ள தொன்மைத் தமிழ்தனை வெளிக்கொணர்தல்.
_இதைப் படித்து மகிழுங்கள்……._
193 வருஷங்களுக்கு முன்
எழுகடற்றுறைக்கும் ஏக அடைக்கலமும் பாதுகாவலும்
பரதர் மாதாவாகிய திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு
பரதகுல மக்கள் சமர்ப்பித்த வார்த்தைப்பாடு
எழுகடற்றுறைக்கும் ஏக அடைக்கலமும் பாதுகாவலும்
பரதர் மாதாவாகிய திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு
பரதகுல மக்கள் சமர்ப்பித்த வார்த்தைப்பாடு
(அசலையே பிரசுரித்திருப்பதால் பிழைகளைத் திருத்தி வாசித்துக்கொள்க.)
இசேசு முன்னிற்க.
சவாது
சவாது
*அர்சியசிக்ஷ்திரீத்துவத்தின் திருநாளன்று சாந்தமரிய தசுநேவிஸ் ஆண்டவளுக்குத் தூத்துக்குடி ஊராராகிற நாங்கள் கொடுக்கிற வார்த்தைப்பாடு.*
சினேகத்துக்குப் பாத்திரமாகவும் எங்களுடைய ஒரே பாதுகாவலுமாயிருக்கிற தசுநேவிஸ் மாதாவாகிய ஆண்டவளே. உமது மேலான திருப்பாதத்திலே மிகுந்ததாட்சியுடனே சாக்ஷாங்கமாகவிழுந்து உமது அடிமைகளாயிருக்கிற எங்கள் பேரிலேயும் தூத்துக்குடியாகிற இந்த ஊரின் பேரிலேயும் .
யித்தைவரைக்கும் நீர்பாதுகாத்துக் கொண்ட கனமான அடைக்கலத்துக்காக மிகுதியும்நன்றியறிகிறோம். யின்னமும் பாதுகாவலினாலே பஞ்சம் படை வியாதி முதலான துரிதங்களில் நின்று எங்களை ரெட்சித்துக் கொண்டதினாலும் நன்றி அறிந்த மனதுடனே நமஸ்காரம்பண்ணுகிறோம். நாங்கள் பாவம் நிரம்பினவர்களானாலும் உமது திருக்கரத்திலிருக்கிற திவ்ய கொமாரன் எங்களுடைய குடும்பத்தின் பேரிலேயும் சமுத்திரத்தின் பேரிலேயும் காண்பிச்சுக்கொண்டு வருகிற தேவ யிரக்கத்தை யெப்போதும் கண்டுவந்தோமே. அப்படியிருந்தாலுமித்தை வரைக்கும் எங்களுக்குச் செய்திருக்கிற அத்தனை உபகாரங்களுக்கும் நன்மைகளுக்கும் கூடின மட்டும் பிரத்தியுபகாரஞ்செய்ய வகையறியாதவர்களாயிருந்தோம். ஆனால் நீர் பாவிகளுடைய அடைக்கலமானதினாலே எங்கள் பேரிலே யிரக்கமாயிருந்து எங்களுடைய அறியாத் தனத்தை மனசிரங்கவேணும். அதேனென்றால் யின்று முதல் நன்றியறிந்த மனதுடனே பிரதியுபகாரமாக வார்த்தைப்பாடு சொல்லுகிறோம். யித்தைவரைக்கும் உமது யிஸ்தோத்திரமாகத் தேரிசு செபம் பண்ணுகிறதுக்கும் கோவில் சடங்கு முதலான தேவஆராதனைகளிலேயும் சுறுசுறுப்பன்றியே, சோம்பலுள்ளவர்களாயிருந்தோமே. யினி மேல்வரை கூடினமட்டும் எங்களுடைய ஆற்றுமசரீரத்தை உமதுபணிவிடைகளிலே காணிக்கையாகக் கொடுக்கிறோம். இதுவல்லாமல் உமது தேவாலயத்தின் திருப்பணிக்கு எப்போதுஞ் சங்குகுழிக்கிற காலத்திலே குழியாள்க்கள் நாள் ஒன்றுக்குச்சனம் ஒன்றுக்கு ஒறு காசும், பிரஊர்த்தோணி முதலான உருக்களிலேவருகிற யாபாரத்தில் ஊர்ஆதாயம் வாங்குகிறதில்பத்துக்குமூன்றும், மீன்பிடிதோணிமஞ்சிகளெல்லாம் தோணி ஒன்றுக்கு ஒருஆள்ப்பங்கும்பிலால் வலைகாரர் , களங்கட்டிகளும் ஒவ்வொருஆள்ப்பங்கும், கொம்பஞ்ஞியப்பணிவிடைமுதல் மற்றுமிந்தத் துறைமுகத்தில் யேற்றுமதி இறக்குமதிக்கும் , ஒவ்வொரு ஆள்ப்பங்கும், சல்லியேத்துகிற மஞ்சி ஒன்றுக்குப்பத்துக்காசும், கச்சைப்பிடவையாபாரிகள் அவர்களுக்குற்காணுகிற பிரயோசனத்தில் ஒரு ஆள்ப்பங்கும், உள்ளூர்க்குடியானவர்கள் முதல்ப்பிறவூரிலிருந்து தவசதரனிய முதல்மற்றும் யாபாரம் ஏற்றிவருகிற உருக்கள்முதலான தோணிமஞ்சிகளுக்கு அணுவுக்கு ஒரு பணமும் கொடுப்போமென்று யெப்போதைக்குமாக வார்த்தைப்பாடுகொடுக்கிறோம்.
எங்களுடைய கனமானகடனுக்குப் பரலோகத்தினுடைய ராக்கினியே யிதுகொஞ்சக்காணிக்கையானாலும், திருச்சமூகத்துக்குச்சந்தோக்ஷம் வருத்துவிக்கிறதுக்கு மிகுந்த ஆசையாயிருக்கிறோம். யிரக்கருணையுள்ள ஆண்டவளாகிற தசுநேவிஸ்மாதாவே கையேத்துக்கொள்ளும். அதேனென்றால் யித்தோடேகூட எங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் பத்தியும் அடிமைத்தனத்தையும் இந்தப்பட்டணத்தையும் முழுதும் பாதகாணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறோம்.
உமது திருக்கோமாரன்பேரிலுண்டான மெய்யான பக்கிக்ஷத்தையும் உம்முடைய பேரிலுண்டான நேமத்தையும் யிழந்துபோரதைப்பாற்க ஆயிரமுறை எங்களுடைய ரெத்தஞ்சிந்துகிறதுக்கு விருப்பமாயிருக்கிறோம்.
கிறுபைதயாபத்துக்குக் மாதாவே யிந்தஉம்முடைய பட்டணத்தை உமது யிரக்கமுள்ளதிருக் கண்களினாலேபாத்தருளி சகல பொல்லாப்புகளில் நின்றுரெட்சித்துக் கொள்ளும். விசேக்ஷமாய் எங்கள் பாவத்தினாலே வரத்தக்க சறுவேசுரனுடைய கோபத்தில்நின்று ரெட்சித்துக்கொள்ளும்.
சாதுகுணமுள்ள கன்னியாஸ்திரியே எங்களுடைய நம்பிக்கையானவளே உமதுமக்களாயிருக்கிற எங்களுக்கும் எங்களுடைய பட்டணங்களுக்கும் சமுத்திரத்துக்கும் ஆசீர்பதித்தருளும். யிந்த உமதுமகாபெரிய ஆசீர்பாதத்தோடே உம்முடைய திவ்விய பாலனுடைய வல்லமையுள்ள ஆசீர்பாதத்தையும் கொடுத்தருளும். யிப்படியே யிந்தலோகத்திலே உமக்கியன்ற நல்லஊளியஞ்செய்து மோக்கிக்ஷராட்சியத்திலே உம்மைச் சந்தோக்ஷத்துடனே கண்டுகளிகூருவோமென்கிற நம்பிக்கையாயிருக்கிறோம். ஆனால் நாங்கள் கொடுத்த வார்த்தைப்பாட்டின் நினைவு அழியாதபடிக்குச் சறுவேசுரனுடைய மாதாவாகிய தசுநேவிஸ்நாயகியே அடியேன்களுடைய பாத்திரமில்லாதபேர் உம்முடைய திருப்பாதத்திலே எழுதிவைக்கிறதுக்கு உத்தரவு தந்தருளும்.
தூத்துக்குடியில் சூஎளருயச ளூ ஆனிம கூ
யோசேமரீய தெவலாசி யேசுசபைச் சன்னியாசியார் நாளையில் அவர்கள் கையொப்பமும் பதிவிச்சு அதின் கீழே அவ்வேளைத் தலைமையாயிருந்த.
கவரியேல் கோமுசு, சாதித்தலைவமோர்.
பேதுரு கோமுசு பர்னாந்து உள்ளூர்த்தலைவமோர்.
சூசையின்னாசிக்குருசுக்கொறேய, கொம்பஞ்ஞிய அடப்பனார்
சவியேரின்னாசிக் குரூசு மெச்யகணக்கப்பிள்ளைமோர்.
சல்வதோரேன்றீக்தற்குரூசு துப்பாசிமோர்.
இவர்கள் கைஒப்பம்வைத்துக்கொடுத்திருக்கிற வார்த்தைப்பாடு.
இதின்அசல் துப்பாசிபட்டி சர்வேஸ்பான் கோயில் அக்தார் அவர்களிடமிருக்கிறது.
யோசேமரீய தெவலாசி யேசுசபைச் சன்னியாசியார் நாளையில் அவர்கள் கையொப்பமும் பதிவிச்சு அதின் கீழே அவ்வேளைத் தலைமையாயிருந்த.
கவரியேல் கோமுசு, சாதித்தலைவமோர்.
பேதுரு கோமுசு பர்னாந்து உள்ளூர்த்தலைவமோர்.
சூசையின்னாசிக்குருசுக்கொறேய, கொம்பஞ்ஞிய அடப்பனார்
சவியேரின்னாசிக் குரூசு மெச்யகணக்கப்பிள்ளைமோர்.
சல்வதோரேன்றீக்தற்குரூசு துப்பாசிமோர்.
இவர்கள் கைஒப்பம்வைத்துக்கொடுத்திருக்கிற வார்த்தைப்பாடு.
இதின்அசல் துப்பாசிபட்டி சர்வேஸ்பான் கோயில் அக்தார் அவர்களிடமிருக்கிறது.
பரதகுல மக்கள் வார்த்தைப்பாடு
Heritage Vembarites
20:13

திருமந்திர நகரில் திருக்கோவில் கொண்டெழுந்தருளி யிருக்கும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச் சரிதை.

அவையாவன:-
1. நம் திருவன்னையின் சிரமேற் சிங்காரிக்கும் திருமுடி, 1920ல் களவாடப்பட்டு, களங்கப்படுத்தபட்டு, பின் கண்டுபிடிக்கப்பட்டு, மாசு நீக்கி மீண்டும் கிரீடதாரணம் செய்யப்பட்டது எனும் சரித்திரம், நம்மில் எத்தணை பேருக்குத் தெரியும்.இச் சரித்திரத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பேராவலின் பேரில் இது இங்கு வெளிக் கொணரப்பட்டுள்ளது.
2. இதை எழுதிய வித்துவான் திருமிகு M.A.பீரிஸ் அவர்களின் தமிழ் அலங்கார நடைதனையும் அவர்தம் கற்பனைவளதினையும் விவரிப்புபுலமையும் நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எப்படி அலங்காரத்தமிழ் திரு.பீரிசின் பேனாமுனையில் இருந்து கசிந்தது என்பதை பறைசாற்றுவதற்கு இது பிரசுரிக்கப்படுகிறது.
3. மாதா மீது நாம் கொண்டிருந்த பரவசப் பக்தியையும் அதை வெளிப்படுத்தும் முறைகளையும் இக்கட்டுரை வெளிக்கொணர்வதால் இது இவ்விடம் பிரசுரிக்கப்படுகிறது.
*திருமந்திர நகரில் திருக்கோவில் கொண்டெழுந்தருளி
யிருக்கும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ்
ஆண்டவளின் திருமுடிச் சரிதை.*
_(வித்வான் எம்.ஏ. பீரிஸ் அவர்கள், 1920ல் எழுதியது)
பரமதயாநந்த பரமேஸ்வரியாகிய பரிசுத்த பனிமயத் தாயின் திவ்விய மங்கள வருக்ஷோத்ஸ்வம் பரம்பரையை அநுசரித்து 1920 ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 தேதி வயாகிய சுபதினத்தில் சர்வாடம்பரங்களுடன் இனிது நிறைவேற்றப்பட்டது. பரமதாயின் பக்தர்கள் அனைவரும் தத்தமக்குரிய இக்ஷ்ட சித்திகளைப் பெற்று மிழ்வராயினர்.இதில் ஒரு விக்ஷேசத்தைக் குறிப்பிடுதல் அவசியம். அதாவது பரம தேவதாயின் விக்ஷேசப் பாதுகாவலை விடாது தழுவி நிற்பவர்களாகிய பரதகுலத்தவர்களின் கல்வி, செல்வாக்கு, நாகரிகம் முதலிய அபிவிருத்திகளின் பொருட்டு பரத கான்பரென்சு எனும் முதலாவது மஹா ஜன சபை ஸ்தாபிக்கப்பட்டது, இத்தினமகாலின், ஏனைய வருக்ஷங்களிலும், பாரத மாதாவாகிய அர்ச் பனி மயத்தாயின் திவ்ய உத்ஸவமானது பரத குலத்தவர்களுக்கு விக்ஷே குதூகலத்தையும் உத்ஸாகத்தையும் உண்டுபண்ணத் தக்கதாயிருந்ததென்பதில் ஆக்ஷேபமின்று.
நெடிய மயக்கத்தைக் கொன்று ஜெயவிருதேந்திய மஹோந்நத மஹா இராணியாகிய பரிசுத்த பரம அன்னையின் திரு வருக்ஷோத்ஸ்வம் பூர்த்தியான ஆறவது தினமாகிய 1920 ஆண்டு ஆகஸ்டு மீ 10 தேதி , செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் அவ்வன்னை எழுந்தருளி யிருக்கும் தேவாலயத்தின் மணியாவது அலங்கரிக்கப்பட்டது.
இம்மணியோசை நகரத்தையே நடுங்க வைத்துவிட்டது. யாது சம்பவித்ததோ வென்ற மனத்திராய் யாவரும் அர்ச் பனிமயத் தாயின் தேவாலயத்தை தேடி ஓடி வந்தனர். சில நிமிக்ஷங்களுக்கெல்லாம் சிறுவர், வாலிபர், வயோதிகர், ஆண், பெண் அனைவரும் எள்ளிட இடமின்றித் தேவாலயத்தில் நிறைந்துவிட்டனர்.
ஹா! பரிதாபகரமான காட்சி
பயங்கரமான காட்சி
நடுக்கத்துற் குரிய காட்சி
நாவாலுரைக்கமுடியாத காட்சி
ஐயோ! சர்வலோக இராக்கினியாகிய
பரிசுத்த பனிமயத் தாயின்
கோடி சந்த்ரப்ரபையை
யொத்து விளங்கும் வதன மண்டலம்
விசனத்திலடிபட்டு விளங்குகின்றது. எத்தகைய கவலை, படை, துன்பங்களையும் மாத்திரைப் பொழுதில் போக்ககூடிய கருணாசாகரமாகிய கிருபாநேத்திரங்கள் பார்த்தவர்கள் மனதைப் பதைப்புறச் செய்யக்கூடிய வியாகூலத்தைக் கொண்டு விளக்குகின்றன. அன்பும், புன்னகையும், அமைந்தொழுகும் செம்பவழ வாய் வாடிய குமுத மலர் போன்று சோகமயத்தை யடைந்திருக்கின்றது காணுந்தோறும் ஆநந்தாமிர்தத்தை அள்ளியிறைக்கும் பரமதேவதாயினது திவ்விய சொரூபத்தோற்றம் யாவருள்ளத்தையும் நடுங்குறச்செய்து தேகம் மயிர்க்குச் செறிய ஆலயமுழுவதும் அம்மா! அம்மா!! தாயே! தாயே!! மாதாவே! மாதாவே!! என்ற கூக்குரலைக் கடல் முழக்கோ வென்றெண்ணும்படி உண்டுபண்ணி விட்டது.
ஐயோ! பரிதாபம்! ஆற்றோணைத்துக்கம்! அடக்கமுடியாத கக்ஷ்டம் அறியமுடியாத சம்பவம். என்னை? ஸ்வர்ணகசித ரத்னசிம்மாதனத்தின் மீது திருக்கோவில் கொண்டிருந்தாளாகிய எமதாத்தாளது ஈராறு தாரகை பூத்த, எழின்மிக்க சிரோபாரத்தை அழகுசெய்து கொண்டிருந்ததாகிய வெண் பொற் கிரீடத்தைக் காணவில்லை.
ஐயோ! அம்மட்டுமா? எமதன்ணையின் திவ்விய கரத்தில் செவ்விய அன்னம்போல் அமர்ந்து குறுநகை புரிந்து கொண்டிருந்த திruக்குழந்தையாகிய எம்பெருமான் திவ்யஜேசுவினது சென்னியில் மின்னிக்கொண்டிருந்ததாகிய வெண்பொற் கீரிடத்தையும் காணவில்லை.
திரியுக இராஜேஸ்வரியாகிய எமதன்னைக்கும் எவ்வுயிர்க்கும் இறைவனாகிய எமதப்பனுக்கும் ஏக காலத்தில் இவ்வித நிந்தை ஏற்படுமெனில் அதை யாரே சகிக்க வல்லார்?
உணர்விலந்தார் பலர்
உரையிழந்தார் பலர்
மதியிழந்தார் பலர்
மனசிழந்தார் பலர்
உடல் மறந்தார் பலர்
உடனயர்ந்தார் பலர்
ஆலய முழுவதும் கண்ணீருங் கம்பலையுமேயன்றி வேறில்லை.
மாதர்கள் ஒருபுறமாய் நின்று ஆற்று பெருக்கோ அல்லது ஊற்றுப் பெருக்கோ எனக் கண்ணீரைப் பெய்து மாதாவே! மாதாவே!! மன்னித்தருளும்! மன்னித்தருளும்! என்றிரங்கி விம்மி விம்மி யழுததொலி எவ்விதத்தானும் அடக்க முடியாததாயிற்று. குருப்பிரசாதிகளும், திருப்பணியாளரும் ஏனையோரும் ஆலயத்தின் தளம் முதல் முகடு வரை ஒவ்வொரு யிடத்தையும் தேடிப்பார்த்தனர். காணப்படவில்லை. சஞ்சலம் விர்த்தியாகின்றது. சாந்திக்கிடமில்லை. அனற்பட்ட மெழுகாய் அகங்கரைகின்றனர். ஆலைவாய்க்கரும்புபோல் அங்கலாய்க்கின்றனர்.
ஆலயத்தின் உட்புறத்தில் பாடகர் ஸ்தலமாகிய மேடையின் கிராதிகளில் கனத்ததும், மெல்லியதுமாகிய இருகயிறுகள் கட்டிக்கீழே தொங்கவிடப்பட்டிருந்தன. கனத்தகயிறு ஆலயமணியில் கட்டியிருந்ததாகும். அக்கயிற்றின் வழியாக மேலேறிப்பார்க்கும் வெளிப்புறத்திலிருந்து வரக்கூடிய மேடை வாசல்கள் திறக்கப்பட்டிருந்தன. கள்வர், திருடர் என்ற பேரிரைச்சல் கிளம்பிற்று. மூலைமுடங்குகளெல்லாம் தேடினர். கள்வரையும் காணோம். கனகசோபித முடிகளையும் காணோம்!!
ஹா! துரோகம்!! சகல நலன்கட்கு ஊற்றாகவும், உறைவிடமாகவும் இருக்கக்கூடிய எம்பெருமாட்டியின் திருச்சிரசை தீண்டுவொர் யார்? திருடுவார் யார்? பேய்க்கும்
அரிதன்றோ?
அங்ஙனமிருக்க களவாடினர் மானிடராய்க் கொள்ளுதல் எங்ஙனம்?
ஐயோ! முன்னம் எம்பெருமானாகிய திவ்ய ரக்ஷகனை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த பன்னிரு சீடர்களிலொருவனாக யூதாஸ் ஸ்காரியோத் எனும் கொடிய பாவியின் செய்கையை யொப்ப நயவஞ்சகமாகச் சென்று எமது தாயின் முடியைக் கவர்ந்தார்போலும்.
சேயனுக்குள்ளது தாய்க்கிராதா? யூதாஸ் ஸ்காரியோத் தன்னைக் காட்டிக் கொடுக்க இசைந்திருந்த பெருங்குணம் அவனை ஈன்றெடுத்த எமதன்னைக்கில்லாதொழிதல் எங்ஙனம்? ஆனதுபற்றியே சண்டாளர்கள் நமதன்னையின் திருச்சிரசைத் தீண்டவும் திருமுடியைத் திருடவும் இசைந்தாளன்றி வேறில்லை யென்பதே துணிவு.
ஹா! அம்மா! நின்கருணயை எவ்வாறுரைப்பது.
உரைக்கவும் நினைக்கவும் முடியாத
கருணாகரச் சாகரமே-
நினது தாசர்களாகிய எங்களுக்குத்
துன்பிழைத்ததாகிய அலகை இன்றும்
என்றும் நினது திருவடித் தாமரைக் கீழ்
ஓய்வொழிவின்றி நசுங்கி அல்லற்பட்டுக்
கொண்டிருக்க நினது திருமுடி கவர்ந்து செல்லத் துணிந்த அலகையினும் கொடிய அவ்வலகையை அக்கணமே நீறாக்க நினையாது அக்கொடிய எண்ணம் நிறைவேறச் சிரந்தாழ்த்தியது புதுமையன்றோ?
அமலோற்பவி! மன்னுயிர்க்காக்கத் தன்னுயிர் துற என்ற மஹா வாக்கியத்தின் பெருமையை நின்னிடம் கண்டோம். நிகரற்ற நின்துணை நீடு வாழ்க!
எவ்வித பிரயத்தனங்களும் பலிக்கவில்லை. அழுததைத் தவிர விமோசனத்திற்கிடமில்லை. தாயும் மகனும் காணப்படும் முடியிழந்த தோற்றமானது கன்னெஞ்சனையும் விடாது கதற வைத்துவிட்டது.
எல்லோரும் அழுது கொண்டிருக்கும்போது எவர் அமர்த்துவார் அழுகைதனை பரமதேவதாயைத் தவிர!
அவளே! அம்மா! தாயே!! மாதர்க்கரசியே!! மக்களின் அழுகையை அமர்த்தினாள்.
அற்புதம்! அற்புதம்!! சில வினாடிகளுக்குள் எங்கும் நிர்சப்தமாகி விட்டது. எல்லோரும் முழந்தாளிட்டனர். தேவதாய்க்கும் அவளது திருக்குமாரனுக்கும் சேர்ந்து போன நிந்தைக்குப் பரிகாரமாக ஐம்பத்துமூன்று மணிச்ஜெபமும் மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற ஜெபமும் ஜெபிக்கப்பட்டது.
ஊரும் காலும் ஒடுங்கிய நேரம்
மானிட வியாபக ஒதுங்கிய வேளை
வியாகுலமானது ஊடறுத்துக் கொண்டிருக்கும் சமயம்
கண்ணீர் பிரவாகம் சுனையினின்று
எழுந்தாற்போல் பொங்கித் தாரை தாரையாய்
வடிந்துகொண்டிருக்கின்ற சந்தர்ப்பம். இத் தருணத்தில் ஜெபிக்கப்படும் ஜெபமானது எத்தகைய உருக்கமும் பக்தியுடைத்தான தாயாருக்கு மென்பதையெடுத்துரைத்தல் இயலாத விக்ஷயம்.
ஹா! பெருமூச்சும் விம்முதலும் அழுகையும் கலந்த மந்திரஒலியானது திவ்யதாயின் திருச்செவிகளின் வழியூடுருவி அவனது திவ்ய திரு ஹிருதயத்தை வதைத்ததாகிய வாதனையை எமது தாய் சகிக்க முடியாதவளாய் அவள் புரிந்தருளிய அற்புத நலத்தை எந்த நாவைக் கொண்டு புகழ்வது.
ஐம்பத்துமூன்று மணிச் ஜெபமும் ‘மிகவும் இரக்கமுள்ள தாயே’ என்ற ஜெபமும் முடிந்தன. அப்பால் அர்ச்செயசிக்ஷ்ட கன்னிமரியாளின் தஸ்நேவிஸ் மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற இறுதிச் ஜெபத்தை மும்முறை உச்சரித்து முடியும் தருணம் ஹா! என்ன அற்புதம்! மேக கர்ச்சனையை நேர ஒரு பேரொலி ஆலயமெல்லாம் அதிரும்படி கேட்கப்பட்டது இவ்வளவே எல்லோரும் வெளிவந்தனர். அகப்பட்டன! அகப்பட்டன என்ற பேரிரைச்சல் அண்டம்மதிர்ந்தன.
அற்புதம்! அற்புதம்!! என்ற ஓசையானது நாலு திக்குகளிலிருந்தும் சப்திக்கின்றது. திருமுடிகளைக் கண்டுகுளிரக் கண்டு தெரிசிக்க வேண்டுமென்று அவாவினால் இழுக்கப்பட்டு ஜனங்களனைவரும் ஒருவரோடுஒருவர் மோதிக் கொண்டு கூட்டத்தினிடைப் புகுவராயினர். இஃது பெருந்துயரத்தைத்தருவதாயிருந்தது. உடனே, எவ்விடத்திலிருந்தபோதும் எக்காலத்தில் எல்லோரும் கண்குளிரக் கண்டு தெரிசிக்கும்படி உயிர்த்த ஓரிடத்தில் எமது தாயானதும் அவளது திருக்குமாரனதும் திருமுடிகள் ஸ்தாபிக்கப்பட்டன.
ஹா! பயங்கரம். அழகிய முடிகள் நசுங்கப்பட்டு அழகிழந்திருந்தன. சில தாரகைகளும் அத்தாரகைகளையேந்தி நிற்கும் வில்வளைவுகளில் சிலவற்றையும் காண முடியவில்லை. எனினும் எல்லோரும் இனிது தெரிசித்துத் தாயானது அதியற்புத விக்ஷேக்ஷத்தைக் கண்டு வாயாரப் புகழ்ந்து அவரவர் இல்லம் புகுவாராயினர்.
மேற்கூரிய திருமுடிகள் இரண்டும் தேவாலயத்துக்கெதிராக கடற்கரையருகில் செப்பனிட்டு வைக்கப்பட்டிருந்த இருப்புப் படகுகள் ஒன்றினுக்கடியில் கண்டெடுக்கப்பட்டன. சதியர் யாரோ தென்படவில்லை. தேவதாயும் க்ஷமித்துவிட்டனர். தேவதாயின் அன்பும் பாதுகாவலும் விக்ஷேக்ஷமாய்ப் பரதகுலத்தவர் மத்தியில் பிரகாசிக்குமாக,
இஃதிங்கனமாகத்;
தீயர்களால் தீண்டப்பட்ட அத்திருமுடிகளை நன்கு செப்பனிட்டுக் கிரீடதாரணஞ்செய்யத் தினங்குறிப்பிடப்பட்டது.
1920 செப்டம்பர் மாதம் 9 ம் தேதி வியாழக்கிழமை முதல் 12ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கிரீடதாரண உஸ்தவம் வெகு சிறப்பாகவும், வெகு கம்பீரமாகவும் நடைபெற்றது.
எமது நகர்ப்பங்கு விசாரணை மிகவும் சங்கைக்குரிய A.மோனீஸ் சுவாமியவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து இவ்வுத்ஸவத்தை மிகு விமரிசையாகக் கொண்டாடினர். திருவிழாவின் கடைசி தினத்திற்கு முந்தின தினமாகிய சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நிந்தை பரிகார ஆராதனை செய்யும் பொருட்டாய் திவ்ய சற்பிரசாத எழுந்தேற்ற ஸ்தாபகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. கடைசித் தினமாகிய ஞாயிற்றுக்கிழமை பாடற்பூசை, தேவராதனை முதலிய சடங்குகள் நிறைவேறியபின் மிகவும் சங்கைக்குரிய A.மோனீஸ் சுவாமியவர்கள் பிரசங்கத் தொட்டியிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை கேட்போர் மனது பரவசமாகும் வண்ணம் திவ்ய தாயினது பிரபாவங்களை வாசாமகோசரமாய்ப், பாலுந் தேனும், பாகும் பழமுங் கலந்து ஊட்டியது போல் பிரசங்கமாரி பொழிந்தனர்.
அப்பால், கனம் சுவாமியவர்களால் பரலோக பூலோக ராஜேஸ்வரியும் , பாவிகளுக் கடைக்கலமும், எழு கடல் துறைக்கும் நாமுண்டென்று பிசகாத அரணாயிருப்பவளும் , பரதர் பாதுகாவலும் , மாதாவுமாகிய திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கும் அவளது திருக்குமாரனுக்கும் கிரீடதாரணம் செய்யப்பட்டது.
சந்தோக்ஷ ஆரவாரகீதங்கள் கோக்ஷித்தன. பரம தேவதாயை யாவரும் தெரிசித்து அவளது திருப்பாத முத்திசெய்து, இக்ஷ்ட சித்திகளைப் பெற்றுச் செல்லுமாறு திவ்ய சொரூபத்தைப்பீடத்தின் மத்தியில் ஸ்தாபகம் செய்து வைக்கப்பட்டது.
அவ்வாறே காலை முதல் மாலை வரை பரதகுலத்தினர் யாவரும் ஏனைய கிறிஸ்தவர்களும் இடைவிடாது தெரிசித்துப் பாதமுத்திசெய்து செல்வாராயினர். இரவில் பஜனை கோஸ்டியர் மேலதாளங்களுடனும் தேவதாயின் சித்திரப்படத்துடனும் தேவதாயின் பிரபாவங்களையும் பிரஸ்தாசம்பவங்களையுங் குறிப்பிடக்கூடிய பாட்டுக்களைப்பாடி ஊர்வலம் வந்தனர்.
தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச் சரிதை.
Heritage Vembarites
20:11

இந்த மீண்ட முடிதனை திரும்ப சூட்டிய போது பாடப்பட்ட கவிதைகளை கீழே தந்துள்ளோம். இரண்டாம் கவிதையை படிக்கப் படிக்க, நமது புலவரின் தமிழ் அருமை தெளிவாக தென்படும்.
திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளது கிரீடாதாரணத்தின் போது பாடிய பதினான்கு சீரிரட்டை
ஆசிரிய விருத்தம்

வானாடு செல்வமே, வரையாடு தீபமே
வான்மக ராஜேஸ்வரியே.
வற்றாத கேணியே பரலோக ஏணியே
வாடாத நறிய பூவே.
மறையவர் இன்பம் நீ மறைக்கொரு பிம்பம் நீ
மாசிலா வடிவம் நீயே.
மன்னவர் மகுடம் நீ மகிதல சிகரம் நீ
மகத்துவ சொரூபம் நீயே,
தேனாடு மலரடி திருமந்த்ர நகரினைத்
திருக்கோவில் கொண்ட நாளாய்
செய்தமா நன்மையை எழுதவோ நினைக்கவோ
செப்பவோ முடியாதம்மா.
செய்ந்நன்றி கொன்றவர் சிறுதொழில் வஞ்சகர்
தீயவர் நினக் கிழைத்த
செயலரும் நிந்தையை நினைக்கவுந் துடிக்குதே
திருவுளம் சகித்த தென்னே.
மானாடு நின்விழா நிறைவுற்ற தினமாறு
மதிக்குமா வணி நாள் பத்து
வளரிருட் போதுநிற் பதமுறை யலகையின்
வலைப்படு கயவ ரந்தோ.
வல்லபீ! நினதுடுச் சிரமிசை துலங்குமா
மணிமுடி கவர்ந்து செல்ல;
மைந்தரும் மாதரும் மனமொடிந் திருகணீர்
வடித்தவர் தொழுதல் கண்டு
மீனாடு நின் முடி அலையோரங் காணவே
மிகு புதுமை செய்த தாயே
மிளிர்வடி விழந்ததை யியல்வரை திருத்தியுன்
வியன்சிர ஸமைக்க வேண்டி
விசித்தமா மகுடமிது; விருப்பமுட னேற்றருள்
விரிமழை பொழிவா யம்மா
மிகுமந்த்ர நகர்தந்த திருமந்த்ர முறைசந்த
மரியதஸ் நேவிஸனையே.
இராகம் செஞ்சுருட்டி (லாவணி) தாளம் ஆதி
அகிலமனைத்து மொரு மொழியிலமைத்த திரு
அமலன் திருக்கரத்தி லிருக்க
இளம்பிறையுடு சுடர்கதி ரெறிக்க
மணி-மகுடமதனை யபகரிக்க
வந்த-அதிசயமிதை விரித்துரைக்க
முடி-யாதுநிச்சய மாகு மற்பவி
வேகி யெப்படி யோதமுற்படல்
ஐயோ-கொடியர் நெஞ்சமுருக்கு
இந்த அவமதிக்கெவர் மனச்செருக்கு
திருட்டுத் தொழில் நடத்தப்
பொருத்த முறு கனத்த
இருட்டுப் பொழுதிலையோ பாவியே
திரி-புவனமாள் திவ்ய பிரதாபியே
வளர்-திருப்பதிமிசை வந்துலாவியே
அவள்-இருக்கும் இருப்பிட்த்தைத் தாவியே
துணி-வேதுபெற்றதோர் தாயிலுத்தம
தாய் சிரத்தினிலே ஜொலித்திடு
மகுடமெடுத்த பச்சை நாவியே
உன்னை-மன்னித்தாள் எங்கள் மஹாதேவியே
தட்டுமணிக் கயிற்றை
வெட்டித் தட்டினுட்
புறத்திற் கட்டியது தொங்கவிட்ட சூது
மெல்லப் பற்றிப்பற்றிக் கீழிறங்க ஏது
கடை-கெட்ட துட்டச் செய்கையன்றோ ஈது
மதி தட்டுக்கெட்டுப் போனவகையாது
மட-மாதருக்குள தீதபொற்புயர்.
தாய்மலர்ப்பத சேவை நிற்பவ
ராரோ அவர்க்கு நிறைபாது
தந்-தாதரிப்பாள் குறை யாது
இரக்கமெனும் புனலைச்
சுரக்குந் தடாக மவள்
எவர்க்கும் நல்லுப காரியல்லவா
இதை-ஏனோமறந்தாய் மஹா வல்லவா
அன-லெரிவாய் நரகக்குழி செல்லவா
இடர் எண்ணினாய் உனக்கிது நல்லவா
அவளற்புதச்சொரு பத்தினித்தெரி
சித்த வர்க்கதி சித்திவிர்த்திக
ளெய்துமெனல் பழமை யல்லவா
இதை-எடுத்து விரித்துனக்குச் சொல்லவா
பால்சுரக்கும் பான்மடுவைத்
தானறுத்துப் பால் குடிக்க
வே நினைத்த பான்மையது நோ
சதி-காரரிருள் சூழுமந்தகார
வேளை-யாருமறியாது வந்தபார
உபகாரி யெமதன்னை சிரோபார
முடி-பற்றியோடிய வெற்றி தானென
உற்றதோர் மனம் பற்றுதே நனி
பசிப்பிணி வறுமை நோய் தீரத்
தகு-வழியவளிணையடி சார
அண்டினவர்க் கபய
மென்றும் அளிப்பாளென
அன்றுபெர்நர் துரைத்தவாக்கு
அது-குன்றுமெனும் பயமோ தாய்க்கு
மிக-நன்றுநன்றுனது செல்வாக்கு
ஆஹா கண்டோ முனது மனப்போக்கு
பர-மண்டலத்தினி லண்டரெத்தனை
தொண்டிசைத்தடி தெண்டனிட்டிடும்
அரசீ நினது கிர்பாநோக்கு-என்றும்
அகலாதிருக்குமடி யோர்க்கு
ஆழக்கடல் குளித்து
மாமுத்தது படுத்துச்
சீர்மிக்குலவு மதிகுலமே
திருமந்திரமா நகர்த் தலமே
வளர்-சிம்மாசனத் தெழுந்த நலமே
பர-தவர் தமக்குய ரடைக்கலமே
வினை-நீங்க வற்புத மோங்ரு பொற்கர
மேந்து தற்பர னேர்ந்துபெட்புற
வேண்டுவாய் அமிர்த பொற்கலமே
எம்-விண்ணப்ப மிது நற்கோகிலமே.
—-
திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளது கிரீடாதாரணத்தின் போது பாடிய பதினான்கு சீரிரட்டை
Heritage Vembarites
20:09

மணமகளின் தாய்மாமன் – மகன் மணமகனை வழிமறித்தல்
மணமகளின் தாய்மாமன் மகன் :-

எழிலார் குணசீலரே
துந்துபி தொனி முழங்க மதிகுல
துவச விருதுகள் இலங்கவே
சமூக நிபுணர்கள் இருபுறமும் புடை
சூழ்ந்து வர நவம் இலங்கவே
செந்தமிழ் இசை பாடவும் சுர
நாதஸ்வரம் வீணை கூடவும்
சுற்றம் மகிழ சுகிர்த மணமுடன்
அன்றே புகழ்பெற்று இன்றே துணிவுற்று
(இந்தராவினில்)
மணமகன் :-
கலியாணம் செய்த என்றன்
பெண்ணரசியைக் கண்டு
களிகூற வந்தேன் தோழரே
நந்தாப் புகழ் நிம்ப நகரில் அமர் திரு
நற்றேவாலயம் நாடியே
நலமுலவுகுரு (பங்குத்தந்தை பெயர்) முன்
நவிலும் மெய்ம் மணம் சூடியே
எண்ணரும் ஜனர் கூடவும் எங்கள்
இதயம் அன்பு கொண்டாடவும்
திண்ணமுடனே திருநுதலாள்தனை
சீர்த்தியுடன் மனப்பூர்த்தியே கண்டு
(இந்தராவினில்)
சுற்றிடுவேன் இச்சபையோர் தாம் மகிழ
தொங்கவிட்ட பொற்சரிகைப் பாவுதன்னை
பட்சமுடனே தருவேன் இச்சமயம்
பாரிலுள்ளோர் தரம் அறிய
பட்சமுள்ள என்னுடைய மைத்துனரே
பாரிலிருப்போரும் வெகு நேசமாக
பல்வகையாம் பேறு பதினாறும் பெற்று
பாங்குடனே வாழுவீரே !
பெண்ணரசியைக் கண்டு
களிகூற வந்தேன் தோழரே
நந்தாப் புகழ் நிம்ப நகரில் அமர் திரு
நற்றேவாலயம் நாடியே
நலமுலவுகுரு (பங்குத்தந்தை பெயர்) முன்
நவிலும் மெய்ம் மணம் சூடியே
எண்ணரும் ஜனர் கூடவும் எங்கள்
இதயம் அன்பு கொண்டாடவும்
திண்ணமுடனே திருநுதலாள்தனை
சீர்த்தியுடன் மனப்பூர்த்தியே கண்டு
(இந்தராவினில்)
சுற்றிடுவேன் இச்சபையோர் தாம் மகிழ
தொங்கவிட்ட பொற்சரிகைப் பாவுதன்னை
பட்சமுடனே தருவேன் இச்சமயம்
பாரிலுள்ளோர் தரம் அறிய
பட்சமுள்ள என்னுடைய மைத்துனரே
பாரிலிருப்போரும் வெகு நேசமாக
பல்வகையாம் பேறு பதினாறும் பெற்று
பாங்குடனே வாழுவீரே !
மணமகளின் தாய்மாமன் மகன் :-
உத்தமரே எங்கள் அத்தை மகளை நீர்
உவந்து மணம் செய்தல் நியாயமோ?
ஊரிலுள்ள பெரியோர்கள் உமக்கென்று
உதவினதும் சம்ப்ரதாயமோ?
வித்தகா செல்ல விடுவேனோ யானும்
வீணில் ஆத்திரப்படுவேனோ
கொத்து சரமார் முத்துமாலையும்
கொண்டே தருவதை நன்றேயறியாமல்
இன்றே தருவதை எண்ணி நினையாமல்
(இந்தராவினில்)
உவந்து மணம் செய்தல் நியாயமோ?
ஊரிலுள்ள பெரியோர்கள் உமக்கென்று
உதவினதும் சம்ப்ரதாயமோ?
வித்தகா செல்ல விடுவேனோ யானும்
வீணில் ஆத்திரப்படுவேனோ
கொத்து சரமார் முத்துமாலையும்
கொண்டே தருவதை நன்றேயறியாமல்
இன்றே தருவதை எண்ணி நினையாமல்
(இந்தராவினில்)
மணமகன் :-
உரிமையுறும் என்றன் அருமை தம்பியே
ஓதுவது என்ன நியாயமோ?
உலக வழக்கத்தை அகற்றி விடுவது
ஓர்மையற்ற மாபேதமே
சரிகைச் சோமனும் சாத்துவேன் இன்னும்
தக்க பரிசுகள் ஏற்றுவேன்
உற்சாகமாக நில்லும் அச்சமதைத் தள்ளும்
மெச்சும் கணையாழி அச்சாரமாய்க் கொள்ளும்
(இந்தராவினில்)
ஓதுவது என்ன நியாயமோ?
உலக வழக்கத்தை அகற்றி விடுவது
ஓர்மையற்ற மாபேதமே
சரிகைச் சோமனும் சாத்துவேன் இன்னும்
தக்க பரிசுகள் ஏற்றுவேன்
உற்சாகமாக நில்லும் அச்சமதைத் தள்ளும்
மெச்சும் கணையாழி அச்சாரமாய்க் கொள்ளும்
(இந்தராவினில்)
விருத்தம்
மணமகளின் – தாய்மாமன் மகன்:-
கணையாழி ஈன்ற மணவாளனே நின் கனங்
குழலாளோடு
இணையான பாலும் ஜலம் போலும் கூடி
இனிது வந்து
கனமான பேறு பதினாறும் பெற்று—
இக்காசினியில்
தினம் வாழ ஏகன் கிருபை செய்வார் நித்தியம்
ஜெயம்! ஜெயமே!!.
மணமகளின் – தாய்மாமன் மகன்:-
கணையாழி ஈன்ற மணவாளனே நின் கனங்
குழலாளோடு
இணையான பாலும் ஜலம் போலும் கூடி
இனிது வந்து
கனமான பேறு பதினாறும் பெற்று—
இக்காசினியில்
தினம் வாழ ஏகன் கிருபை செய்வார் நித்தியம்
ஜெயம்! ஜெயமே!!.
வேம்பாற்றுவாசிகளின் வாசல்படி மறியல் விருத்தம்
Heritage Vembarites
20:08

Ruled by Pandyan Kings
Situated in the Tuticorin – Rameswaram highway about 45 kms from Tuticorin, Vembar is one of the main places inhabited by the Paravars. Before the Arabs and Portuguese came to the coastal region the Paravars were governed by Pandyan kings in Madurai.
In 1534 many Paravars in these coastal areas along with Vembar were converted to Christianity by the Portuguese. Paravars embraced Catholicism to gain the help of Portuguese who battled against the Arabs securing them. Paravars in Vembar, Tuticorin, Virapandianpatanam, Alanthalai, Kanyakumari, Manappad etc. embraced Catholicism during this time.
History of the Holy Spirit Church
During 1542 when Jesuit Priest Francis Xavier travelled through these coastal regions he asked people to build churches. Churches were built with walls made of clay and roofs made of thatched leaves. More than 40 churches were built in this way along the coastal regions and Vembar was one among them. During 1600 Jesuit records in Rome noted that Vembar’s church was the biggest and beautiful among the coastal churches built during that time.
Around 1658 Dutch explorers overtook these coastal regions from Portuguese. The Dutch who followed “Calvinism” started damaging Catholic churches in Vembar, Manappad, Virapandianpatanam, Tuticorin and Punnaikayal. These churches started functioning as the warehouses for the weapons possessed by the Dutch. Eventually the Paravars did not support the Dutch in their business and the Dutch faced heavy losses. In 1699 the Dutch called up all Paravars along the coast line and asked them to follow Catholicism without any fear. In fact the Dutch were instrumental in starting some churches for us and many of them turned to Catholicism. After 50 years since the Dutch came the church in Vembar started functioning again as a parish. In 1708 Vembar and Vaipar was a single parish. During 1720′s a second church was built and was named The Holy Spirit Church.
History records that in 1709 a terrible plague visited the people of Vembar. This plague took many lives and incapacitated many in this village which lasted for nearly 2 years. During this time people turned towards St. Sebastian, a warrior saint from Milan, Italy. He is known for curing plagues amongst several people all over the world. The people of Vembar prayed vigorously to St. Sebastian and many were cured by these prayers. Around 1711 – 1712 the people embraced St. Sebastian as the patron saint of Vembar. For more information on St. Sebastian please read the article “Vembar & St. Sebastian”.
The second church built during 1720′s started deteriorating in the beginning of the 20th century. The construction of new church began in 1908 and the stones and woods from the old church were used for this building. Paravars belonging to Vembar (within Vembar and outside of Vembar) contributed heavily to build this new church. Finally on 1st February 1915 the new church was blessed and dedicated to The Holy Spirit by Parish priest Fr. Swaminathar in the presence of Tiruchi Bishop Rev. Augustine Faisandier
Since 1876 Vembar had been a big mission with 25 substations; but from 1908 substations of Vembar were annexed with Tuticorin one after another. The church has a beautiful statue of Auxilium Mary (In Tamil known as “Sengol Matha”) in the centre near the Eucharistic Tabernacle. The feast for Sengol Matha is observed on 30th October. On the left and right side of the Tabernacle are the statues of St. Joseph and St. Sebastian. St. Sebastian’s relic was brought from Rome to Vembar and this relic is used for blessing during St. Sebastian’s feast.
Feast of St. Sebastian and The Holy Spirit
The feast of St. Sebastian (as the patron Saint of Vembar) is observed on January 20th every year. A large procession of St. Sebastian around the village takes place during this time. Natives belonging to Vembar arrive from different places to attend this feast.
A beautiful grotto (“Keby” in Tamil) of St. Sebastian stands next to the church and a separate festival for the grotto called “Keby Thirunal” is observed on 21st January (next day of St. Sebastian’s feast).
The feast of Holy Spirit is observed every year on the day of ” The Pentecost” (50 days from Easter) in a grand manner. Hence there are two major feasts celebrated in the Holy Spirit Church, Vembar: “St. Sebastian’s feast” and “The Holy Spirit feast”.
by Anton Niresh
Thanks : Global Paravar
The Holy Spirit Church, Vembar
Heritage Vembarites
19:59
தே.பொருட்கள்:
சுறாமீன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1 பெரியது
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லித்தழை -சிறிது
மஞ்சள்தூள் – 1சிட்டிகை
மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பூண்டுப்பல் -5
இஞ்சி – சிறுத்துண்டு
தாளிக்க:
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
*சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும்.
*வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் )
*பின் உப்பு+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும்.
*வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை+இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து இஞ்சி+பூண்டு+வெங்காயம்+பச்சை மிளகாய் அனைத்தயும் போட்டு நன்றாக வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் மீனைப் போட்டு நன்கு கிளறவும்.
*நன்கு பொலபொலவென்று ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பி.கு:
விருப்பப்பட்டால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.
சுறாமீன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1 பெரியது
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லித்தழை -சிறிது
மஞ்சள்தூள் – 1சிட்டிகை
மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பூண்டுப்பல் -5
இஞ்சி – சிறுத்துண்டு
தாளிக்க:
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
*சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும்.
*வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் )
*பின் உப்பு+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும்.
*வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை+இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து இஞ்சி+பூண்டு+வெங்காயம்+பச்சை மிளகாய் அனைத்தயும் போட்டு நன்றாக வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் மீனைப் போட்டு நன்கு கிளறவும்.
*நன்கு பொலபொலவென்று ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பி.கு:
விருப்பப்பட்டால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.
சுறா புட்டு
Heritage Vembarites
19:56

ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரில், கி.பி. 1800-1802ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் குறிப்பிடத்தக்கதாகும். கி.பி. 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனின் தம்பியர்களான செவத்தையாவும் குமாரசுவாமி என்கிற ஊமைத்துரையும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1800ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், சிவகங்கைச் சீமையின் மக்கள் தலைவர்களான மருது சகோதரர்களின் திட்டப்படி, திருச்செந்தூருக்குத் திருத்தலப் பயணம் மேற்கொள்ளும் பரதேசிகளைப் போல வேடமிட்ட புரட்சியாளர்களால் செவத்தையாவும் ஊமைத்துரையும் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் இந்த எழுச்சி பாளையக்காரர்களின் போராட்டம் என்ற நிலையைக் கடந்து, மாபெரும் மக்கள் இயக்கம் என்ற நிலையை எய்திற்று. இக்கால கட்டத்தில், தூத்துக்குடிப் பகுதியின் முதன்மையான சமூகத்தவர்களான பரதவர் சாதியினர், புரட்சியாளர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். இக்கால கட்டத்தில், இராமநாதபுரம் சீமை ஆப்பனூர் மயிலப்பன் சேர்வை, திருநெல்வேலி மணியக்காரர் நாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து, தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர் இரகசியமாக ஆலோசனை நடத்தி, புரட்சியாளர் கூட்டணிப் படைகளுக்கு வெடிமருந்து, துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பெற்றுத் தந்தார் என்று கி.பி.1801ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைச் சேர்ந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி ஆவணங்களை ஆராய்ந்துள்ள பேராசிரியர் கே. இராஜையன், தமது "South Indian Rebellion" என்ற நூலில் (பக். 98, 201) குறிப்பிடுகிறார். மேலும் தூத்துக்குடித் துறைமுகத்தையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் புரட்சியணியினர் கொணர்ந்தனர் எனவும் குறிப்பிடுகிறார்.

இதன் பின்னர் இந்த எழுச்சி பாளையக்காரர்களின் போராட்டம் என்ற நிலையைக் கடந்து, மாபெரும் மக்கள் இயக்கம் என்ற நிலையை எய்திற்று. இக்கால கட்டத்தில், தூத்துக்குடிப் பகுதியின் முதன்மையான சமூகத்தவர்களான பரதவர் சாதியினர், புரட்சியாளர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். இக்கால கட்டத்தில், இராமநாதபுரம் சீமை ஆப்பனூர் மயிலப்பன் சேர்வை, திருநெல்வேலி மணியக்காரர் நாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து, தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர் இரகசியமாக ஆலோசனை நடத்தி, புரட்சியாளர் கூட்டணிப் படைகளுக்கு வெடிமருந்து, துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பெற்றுத் தந்தார் என்று கி.பி.1801ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைச் சேர்ந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி ஆவணங்களை ஆராய்ந்துள்ள பேராசிரியர் கே. இராஜையன், தமது "South Indian Rebellion" என்ற நூலில் (பக். 98, 201) குறிப்பிடுகிறார். மேலும் தூத்துக்குடித் துறைமுகத்தையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் புரட்சியணியினர் கொணர்ந்தனர் எனவும் குறிப்பிடுகிறார்.
இக்கால கட்டத்தில், தூத்துக்குடி முத்துக்குளி துறையின் தலைநகராகவும், பருத்தி ஏற்றுமதிக் கேந்திரமாகவும் விளங்கிற்று. மதுரைக் கடற்கரை என வழங்கப்பட்ட பாண்டி மண்டலக் கடற்கரைப் பகுதியின் குளித்தெடுக்கப்படும் முத்துக்களைப் பொருத்தவரை, மதுரை நாயக்க அரசு, இராமநாதபுரம் சேதுபதி அரசு ஆகியவற்றுக்கு உரிய பங்குகளைத் தவிர, தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர்க்குப் பிற பங்குகள் உரியவனவாகும். ஆர்க்காட்டு நவாப், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி ஆகியோரின் மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டபோது, பிற சிற்றரசர்களின் உரிமைகளும் பரதவர் சாதித் தலைவரின் உரிமைகளும் கேள்விக்குரியவையாயின. பருத்தி ஏற்றுமதியும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் ஏகபோகமாக மாறியபோது, பருத்தி விளை நிலங்களில் விளைந்த பருத்தியிலிருந்து நூற்கப்பட்ட நூலைக் கொண்டு துணி நெய்து விற்றுப் பிழைத்த நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாயிற்று. ஆயினும், விளைந்த பருத்தியை ஜின்னிங் செய்து கொட்டை நீக்கி அவற்றைப் பொதிகளாகக் கட்டி, தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலமாக இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கும் கப்பல்கள் மூலம் கொண்டு செல்வதற்கு உள் நாட்டுப் பாளையக்காரர்கள் மற்றும் நிலவுடைமையாளர்கள் தொழிலாளர்கள் ஆகியோரின் உதவி ஆங்கிலேயர்க்குத் தேவைப்பட்டது.
நிலவருவாய் நிர்வாக அமைப்பில், பூர்வீகமாக நிலவி வந்த உள்நாட்டு அமைப்புகளான தலையாரி, மணியக்காரர் ஆகியோர்க்கு மேலே தாசில்தார், வருவாய் தண்டல் நாயகர் (கலெக்டர்) ஆகிய பதவிகளைப் புதியனவாக உருவாக்கி அந்த அமைப்பின் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பருத்தி கொள்முதலை ஆங்கிலேயர்கள் ஏகபோக உரிமையாகப் பெற்றனர். இந்த ஏற்பாட்டுக்கு ஒத்து வராதவர்களை ஒழித்துக் கட்டும் வகையில் சட்டங்களும் இயற்றினர். இங்கிலாந்து நாட்டில் கி.பி. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்புரட்சி நிகழ்ந்ததன் விளைவாக, அந்நாட்டில் நூற்பு - நெசவுத் தொழில் உற்பத்தி பெருகிற்று. குறைந்த மனித உழைப்பைக் கொண்டே காற்றின் விசையாலும் நீரின் விசையாலும் குதிரைகளாலும் இயக்கப்படும், இயந்திரங்கள் மூலமாக விரைவாகவும் அதிக அளவிலும் துணியினை உற்பத்தி செய்யத் தொடங்கினர். நம் நாட்டிலிருந்து பருத்தியை இங்கிலாந்தில் இறக்குமதி செய்து நூலாக நூற்றுத் துணியாக நெய்து மீண்டும் நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து விற்றுக் கொள்ளை லாபமடைந்தனர். ஆங்கிலேயர் இந்திய நெசவாளர்களைப் பட்டினியில் ஆழ்த்தி, லங்காஷயர் முதலிய இங்கிலாந்து நகரங்கள் துணி உற்பத்தித் தொழிற்கேந்திரங்களாக உருவாயின.
கி.பி.18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழகத்தின் கரிசல் காட்டுப் பகுதிகளில் விளைந்த பருத்தி தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலம் இங்கிலந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்தும், ஆங்கிலேயரின் நிலவருவாய் நிர்வாக எதேச்சாதிகாரத்தை எதிர்த்தும் புரட்சியில் இறங்கிய பாளையக்காரர்களின் அணிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமை தாங்கினார். அவர் ஆங்கிலேயரால் வேட்டையாடிச் சிறைப்பிடிக்கப்பட்டுக் கயத்தாற்றுப் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட பின்னர், கட்டபொம்மனின் இளவல்களும் மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியை விரிவான தளத்துக்கு மாற்றினர் என்பதையே இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டோம்.
மருது சகோதரர்களின் தலைமையிலான படைகளுக்குத் தூத்துக்குடி பரதவர் சாதித்தலைவர் வெடிமருந்து, துப்பாக்கி, பீரங்கி முதலையவற்றைச் சேகரித்து வழங்கினார் என்ற செய்தி ஆங்கிலேயரின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. ஆப்பனூர் மயிலப்பன் சேர்வைக்காரரும் திருநெல்வேலி நாகராஜ மணியக்காரரும் இப்பணியில் அவருக்கு உதவி புரிந்தனர் என்று தெரிகிறது. கி.பி. 1787ஆம் ஆண்டிலேயே ரிபெல் சேதுபதி எனப்படும் முத்துராமலிங்க சேதுபதியின் சார்பாகப் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சு ஆளுநரைச் சந்தித்த மயிலப்பன் சேர்வைக்காரர், படை உதவியும் வெடிமருந்தும் கேட்டார் என்றும் அப்போது அவருக்கு அவ்வுதவிகள் கிடைக்கவில்லையென்றும் "History of Maravas" என்ற நூலில் பக்கம் 220-222இல் முனைவர் எஸ். கதிர்வேல் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆனால் 1801ஆம் ஆண்டில் வெடிமருந்து, ஆயுதங்கள் ஆகியவை புரட்சியணியினர்க்கு கிட்டியுள்ளன.
கத்தோலிக்க சமய அடிப்படையில் பிரெஞ்சு ஆட்சியாளர்களுடன் தூத்துக்குடிப் பரதவ சாதித் தலைவர்க்கு நல்லுறவு இருந்திருக்கலாம் என்றும் அந்த அடிப்படையில் வெடி மருந்து முதலியவற்றை அவர் பெற்றிருக்கலாம் என்றும் நாம் ஊகிப்பதற்கு அடிப்படை இருக்கிறது. ஆயினும் ஆங்கிலேயரின் ஆவணங்களில் இது பற்றிய குறிப்பு இல்லை. தூத்துக்குடித் துறைமுகத்தைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்த பாளையக்காரர்கள் பரதவர் கூட்டணி, இலங்கை வழியாகவும் வெடிமருந்துக்குரிய மூலப் பொருளான வெடியுப்பு (பொட்டாசியம் நைட்ரேட்) முதலியவற்றைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு. மேலும், மருது சகோதர்களிடம் ராக்கெட் (ஏவுகணை) இருந்ததாக ஆங்கிலேயக் கர்னல் அக்னியு தெரிவித்துள்ளார். தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலம் வெடியுப்பினை மட்டும் இறக்குமதி செய்து இப்பகுதியிலேயே வெடிமருந்துத் தயாரிப்பு, ராக்கெட் தயாரிப்பு போன்றவை தொடர்பான சில சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. தூத்துக்குடித் துறைமுகத்தின் வணிக முதன்மை, பரதவர் சமூகத்தவரின் கடல் கடந்த (இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளுடனான) தொடர்புகள், கர்ப்பூரச் செட்டிகள் போன்ற வாணம் தயாரிக்கும் பாரம்பரியத் தொழில்நுட்ப அறிவு படைத்த சமூகத்தவருடனான வணிக உறவுகள், இவையெல்லாவற்றுக்கும் மேலாக இப்பகுதியில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகையான தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கிய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் சந்ததியினரிடம் மறைந்து போய்விடாமல் நீடித்து வந்த உலோகபாஷாணக் கலவைகள் குறித்த அறிவு ஆகியன இத்தகைய சோதனை முயற்சிகளுக்கு அடிப்படை உந்த சக்தியாக இருந்திருக்கலாம்.
கட்டக்கருப்பன் காலாடி எனப்பட்ட வீரன் சுந்தரலிங்கம் (மள்ளர் குலத்தவர்) வெள்ளையத் தேவன் (மறவர் சமூகத்தவர்) பொட்டிப்பகடை, வாலப்பகடை (அருந்தததியர் குலத்தவர்) முதலான பல்வேறு சமூகத்தவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் படையில் இடம் பெற்றிருந்தனர் என்றாலும், ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் திரட்டிய படையில் மேற்படி சமூகத்தவர் மட்டுமின்றி, பெரும்பாலான இதர சமூகத்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். அப்படியிருந்தாலும் இந்த மக்கள் இயக்கம் தோல்வியையே தழுவிற்று. புரட்சியணித் தலைவர்கள் ஒவ்வொருவராக வேட்டையாடிச் சிறைப்பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டனர். இரண்டாவது மட்டத் தலைவர்கள் 72 பேர் பினாங்குப் பகுதியிலிருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட அட்மிரல் நெல்சன் என்ற பெயர் கொண்ட கப்பலில் 72 போராளிகளும் தீவாந்தர சிட்சை (தண்டனை) அனுபவிப்பதற்காக அனுப்பப்பட்டனர்.
இக்கால கட்டத்தில் தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர் ஆங்கிலேயரின் கைகளில் அகப்படாமல் தலைமறைவாகிவிட்டார். பரதவர் சாதியினரின் அடைப்பனார் பதவியை வகித்த ஹென்றி லெயோன் என்ற பெயருடைய இன்பகவிராயரும் இவருடன் சேர்ந்து தலைமறைவானார். (இவ்விருவரும் இலங்கைக்குச் சென்றிருந்தனர் எனக் கருதப்படுகிறது). கி.பி.1804 ஆம் ஆண்டில் பரதவர் சாதித்தலைவர் மணப்பாடு என்ற கடற்கரைச் சிற்றூரில் இருப்பதாக அறிந்த திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் கொக்ரேன், அவரை எவ்விதத்திலும் துன்புறுத்துவதில்லை என வாக்குறுதியளித்து, அவரைத் தூத்துக்குடிக்கே வரவழைக்க முயன்றார். அதற்காகக் கடிதம் ஒன்று எழுதி, தமது நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாகப் பரதவர் சாதித் தலைவரிடம் கொண்டு சேர்ப்பித்தார். அக்கடிதத்தில் கொக்ரேன் "பரதவர் சாதித் தலைவர் சார்ந்துள்ள கிறிஸ்துவ சமயத்தைத்தான் ஆங்கிலேயர்களும் பின்பற்றுகின்றனர்" எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். பரதவர் சாதித்தலைவர் ஆங்கிலேயரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கவில்லை. ஆயினும் போராட்டச் சூழல் முற்றிலும் மாறிப்போய் உயிர்த்தோழர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட நிலையில் மீண்டும் புரட்சியணியைக் கட்டியமைப்பதற்குரிய அவகாசமும் ஆற்றலும் இவருக்கு இல்லாததால் மணப்பாட்டிலேயே ஒதுங்கி வாழ்ந்திருந்து, 1808 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி மரணமடைந்தார். இவர் இறந்த பிறகு இவரது குடும்பத்தினர் இவரது உடலைப் பல்லக்கு ஒன்றில் வைத்துத் தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அடக்கம் செய்தனர்.
இந்திய சுதந்திரப் போராளிகளின் வரிசையில் இடம் பெற்றுவிட்ட இப்பரதவர் சாதித் தலைவரின் பெயர் தொன் கபரியேல் தக்ரூஸ் வாஸ்கோம்ஸ் என்பதாகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களின் ஆதரவுடன் கத்தோலிக்கக் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவிய பின்னர் இப்பகுதியைச் சேர்ந்த பரதவர் சமூகத்தவர் போர்ச்சுகீசியப் பாணியிலமைந்த பெயர்களையே ஏற்றனர். அந்த மரபின்படி இவரது பெயர் போர்ச்சுகீசியப் பெயராக அமைந்திருந்தாலும் இவர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழரேயாவார். இவருடைய வம்சத்தவர்கள் தூத்துக்குடியிலுள்ள கிரகோப் தெருவில் வசிக்கின்றனர் பீட்டர் கோயில் சந்தில் வசிக்கும் "செல்வராஜ் மிராந்தா" என்ற கவிஞர் - ஆராய்ச்சியாளர் மூலமாக இவரைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியவந்தன. இவரது வம்சத்தவரான பெர்க்மான்ஸ் மோத்தா என்பவரின் வீட்டில் இவரது ஆளுயரக் கான்வாஸ் ஓவியமும், இவரது உடலை மணப்பாட்டிலிருந்து எடுத்து வரப் பயன்படுத்தப்பட்ட பல்லக்கின் பாகங்களும், கலெக்டர் கொக்ரேனின் கடிதம் முதலிய சில ஆவணங்களும் உள்ளன. ஒர்னல்லோஸ் பள்ளி வளாகத்தில் இவரது கல்லறைக் கல்வெட்டு உள்ளது. (கல்வெட்டு வாசகங்கள் இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன).
தொன் கபரியேலின் உருவ ஓவியம், கி.பி. 1808ஆம் ஆண்டில் வரையப்பட்டிருக்கலாம். இது காளையார் கோவிலில் உள்ள மருது சகோதரர்களின் உருவச் சிற்பங்களுக்கு இணையாகப் போற்றத்தக்கது. இவ் ஓவியத்தில் திருச்செந்தூர் முருகனுக்குரிய சேவலும் மயிலும் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொன் கபரியேல் கல்லறைக் கல்வெட்டு
தூத்துக்குடியிலுள்ள ஒர்னல்லோஸ் பள்ளிக்கூட வளாகத்தில் இவரது கல்லறைக் கல்வெட்டு உள்ளது. தமிழ், போர்ச்சுகீசிய மொழி ஆகியவற்றில் கல்வெட்டு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ் வாசகங்கள்
"மதுரைக் கடல்துறை முதல் மற்றுந்தலங்களிலுண்டான பரதவர் சாதிகட்கெல்லாம் சாதித் தலைமையென்ற ஸ்தானத்துக்கு மிகவும் யோக்கியமுள்ளவராயிருந்த சீ.சீ.தொங்கவுரியேல்1 தற்கரூஸ்2 வாஸ் கோமுஸ்3 அவர்கள் பிறந்தது ? ? ? ௫ ௰ ? வரு4அவர்களுக்குச் சாதித் தலைமையென்ற பட்டாபிஷேகம் சூடினது ? ? ? ? ௰ ? வரு5 அவர்கள் தெய்வீகமானது ? ? ? ? வரு6அவர்கள் தேவியாராகிய சீ. தொன் மரிய அந்தோனி தற்குரூஸ் கொறெயப் பறனாந்திஸ்7 அவர்கள் அந்த ஆண்டிலே தானே புரட்டாதி மீ ௨ ௰ உ தெய்வீகமானார்கள்."
அடிக்குறிப்புகள்:
1. "சீதாதி சீதாதி தொன் கபரியேல்" என்ற போர்ச்சுகீசியப் பெயர். கபரியேல் என்பதே இவரது பெயர். சீதாதி என்பது "மரியாதைக்குரிய பட்டினவர்" எனப் பொருள்படும். தொன் (Don) என்பது பிரபு எனப் பொருள்படும் பட்டமாகும்.
2. De cruz (of the cross)
3. Vaz Gomes என்ற குடும்பப் பட்டப் பெயர். இது தாய்வழிப் பட்டப் பெயராகத் தெரிகிறது.
4. கி.பி. 1753ஆம் வருடம்
5. கி.பி. 1779ஆம் வருடம்
6. கி.பி. 1808ஆம் வருடம்
7. Coreia Fernandez என்ற குடும்பப் பட்டப் பெயர் "கொறெயப் பறனாந்திஸ்" எனத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. Coreia என்ற குடும்பப் பட்டப் பெயர் தற்போது Coreira என எழுதவும் உச்சரிக்கவும் படுகிறது. இச் சொல், கரையார் என்ற பட்டத்தின் திரிபே என்றும் பெரைரா என்ற போர்ச்சுகீசியக் குடும்பப் பட்டப் பெயரையட்டிக் கொரைரா என மாற்றி உச்சரிக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது.
(நன்றி: பழங்காசு, நாணயவியல் வரலாற்றியல் காலாண்டிதழ், இதழ் 13, நிறுவனர்: ப. சீனிவாசன், 1/385, சீதக்காதி தெரு, காட்டூர் (தெற்கு), திருச்சி-620019, தொலைபேசி: +91-431-2532043, ஓரிதழ் நன்கொடை ரூ. 25/- ஓராண்டு நன்கொடை ரூ. 80/-)
- எஸ். இராமச்சந்திரன்
நன்றி : திண்ணை
சுதந்திர தேவியின் மகுடத்தில் ஒரு தூத்துக்குடி முத்து
Heritage Vembarites
11:01
