வேம்பாற்றுவாசிகளின் வாசல்படி மறியல் விருத்தம்
மணமகளின் தாய்மாமன் – மகன் மணமகனை வழிமறித்தல்
மணமகளின் தாய்மாமன் மகன் :-

எழிலார் குணசீலரே
துந்துபி தொனி முழங்க மதிகுல
துவச விருதுகள் இலங்கவே
சமூக நிபுணர்கள் இருபுறமும் புடை
சூழ்ந்து வர நவம் இலங்கவே
செந்தமிழ் இசை பாடவும் சுர
நாதஸ்வரம் வீணை கூடவும்
சுற்றம் மகிழ சுகிர்த மணமுடன்
அன்றே புகழ்பெற்று இன்றே துணிவுற்று
(இந்தராவினில்)
மணமகன் :-
கலியாணம் செய்த என்றன்
பெண்ணரசியைக் கண்டு
களிகூற வந்தேன் தோழரே
நந்தாப் புகழ் நிம்ப நகரில் அமர் திரு
நற்றேவாலயம் நாடியே
நலமுலவுகுரு (பங்குத்தந்தை பெயர்) முன்
நவிலும் மெய்ம் மணம் சூடியே
எண்ணரும் ஜனர் கூடவும் எங்கள்
இதயம் அன்பு கொண்டாடவும்
திண்ணமுடனே திருநுதலாள்தனை
சீர்த்தியுடன் மனப்பூர்த்தியே கண்டு
(இந்தராவினில்)
சுற்றிடுவேன் இச்சபையோர் தாம் மகிழ
தொங்கவிட்ட பொற்சரிகைப் பாவுதன்னை
பட்சமுடனே தருவேன் இச்சமயம்
பாரிலுள்ளோர் தரம் அறிய
பட்சமுள்ள என்னுடைய மைத்துனரே
பாரிலிருப்போரும் வெகு நேசமாக
பல்வகையாம் பேறு பதினாறும் பெற்று
பாங்குடனே வாழுவீரே !
பெண்ணரசியைக் கண்டு
களிகூற வந்தேன் தோழரே
நந்தாப் புகழ் நிம்ப நகரில் அமர் திரு
நற்றேவாலயம் நாடியே
நலமுலவுகுரு (பங்குத்தந்தை பெயர்) முன்
நவிலும் மெய்ம் மணம் சூடியே
எண்ணரும் ஜனர் கூடவும் எங்கள்
இதயம் அன்பு கொண்டாடவும்
திண்ணமுடனே திருநுதலாள்தனை
சீர்த்தியுடன் மனப்பூர்த்தியே கண்டு
(இந்தராவினில்)
சுற்றிடுவேன் இச்சபையோர் தாம் மகிழ
தொங்கவிட்ட பொற்சரிகைப் பாவுதன்னை
பட்சமுடனே தருவேன் இச்சமயம்
பாரிலுள்ளோர் தரம் அறிய
பட்சமுள்ள என்னுடைய மைத்துனரே
பாரிலிருப்போரும் வெகு நேசமாக
பல்வகையாம் பேறு பதினாறும் பெற்று
பாங்குடனே வாழுவீரே !
மணமகளின் தாய்மாமன் மகன் :-
உத்தமரே எங்கள் அத்தை மகளை நீர்
உவந்து மணம் செய்தல் நியாயமோ?
ஊரிலுள்ள பெரியோர்கள் உமக்கென்று
உதவினதும் சம்ப்ரதாயமோ?
வித்தகா செல்ல விடுவேனோ யானும்
வீணில் ஆத்திரப்படுவேனோ
கொத்து சரமார் முத்துமாலையும்
கொண்டே தருவதை நன்றேயறியாமல்
இன்றே தருவதை எண்ணி நினையாமல்
(இந்தராவினில்)
உவந்து மணம் செய்தல் நியாயமோ?
ஊரிலுள்ள பெரியோர்கள் உமக்கென்று
உதவினதும் சம்ப்ரதாயமோ?
வித்தகா செல்ல விடுவேனோ யானும்
வீணில் ஆத்திரப்படுவேனோ
கொத்து சரமார் முத்துமாலையும்
கொண்டே தருவதை நன்றேயறியாமல்
இன்றே தருவதை எண்ணி நினையாமல்
(இந்தராவினில்)
மணமகன் :-
உரிமையுறும் என்றன் அருமை தம்பியே
ஓதுவது என்ன நியாயமோ?
உலக வழக்கத்தை அகற்றி விடுவது
ஓர்மையற்ற மாபேதமே
சரிகைச் சோமனும் சாத்துவேன் இன்னும்
தக்க பரிசுகள் ஏற்றுவேன்
உற்சாகமாக நில்லும் அச்சமதைத் தள்ளும்
மெச்சும் கணையாழி அச்சாரமாய்க் கொள்ளும்
(இந்தராவினில்)
ஓதுவது என்ன நியாயமோ?
உலக வழக்கத்தை அகற்றி விடுவது
ஓர்மையற்ற மாபேதமே
சரிகைச் சோமனும் சாத்துவேன் இன்னும்
தக்க பரிசுகள் ஏற்றுவேன்
உற்சாகமாக நில்லும் அச்சமதைத் தள்ளும்
மெச்சும் கணையாழி அச்சாரமாய்க் கொள்ளும்
(இந்தராவினில்)
விருத்தம்
மணமகளின் – தாய்மாமன் மகன்:-
கணையாழி ஈன்ற மணவாளனே நின் கனங்
குழலாளோடு
இணையான பாலும் ஜலம் போலும் கூடி
இனிது வந்து
கனமான பேறு பதினாறும் பெற்று—
இக்காசினியில்
தினம் வாழ ஏகன் கிருபை செய்வார் நித்தியம்
ஜெயம்! ஜெயமே!!.
மணமகளின் – தாய்மாமன் மகன்:-
கணையாழி ஈன்ற மணவாளனே நின் கனங்
குழலாளோடு
இணையான பாலும் ஜலம் போலும் கூடி
இனிது வந்து
கனமான பேறு பதினாறும் பெற்று—
இக்காசினியில்
தினம் வாழ ஏகன் கிருபை செய்வார் நித்தியம்
ஜெயம்! ஜெயமே!!.