வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 27 August 2015

பரதகுல மக்கள் வார்த்தைப்பாடு

இந்த கீழ்க்கண்ட வார்த்தைப்பாடு 258 ஆண்டுகட்கு முன் நம் முன்னோர்களால் தஸ்நேவிஸ் மாதாவுக்குத் தரப்பட்டதாகும்.




இது 1947 ஆண்டு வெளிவந்த பனிமய மலரில் காணப்பெற்றது. இதை இப்பொழுது வெளிக்கொண்டு வருவதின் நோக்கங்கள் மூன்றாகும்.
1) இதன் பழமையை வெளிப்படுத்துதல்: 258 ஆண்டுகட்கு முந்திய வார்த்தைப்பாடு இது.
2) நம் முன்னோரின் மாதா பக்தியையும் மாதாவிற்கு நம் சமர்ப்பணத்தையும் வெளிக்கொணர்தல்.
3) இதில் நம் முன்னோர்களால் எழுதப்பட்டுள்ள தொன்மைத் தமிழ்தனை வெளிக்கொணர்தல்.
_இதைப் படித்து மகிழுங்கள்……._





193 வருஷங்களுக்கு முன்
எழுகடற்றுறைக்கும் ஏக அடைக்கலமும் பாதுகாவலும்
பரதர் மாதாவாகிய திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு
பரதகுல மக்கள் சமர்ப்பித்த வார்த்தைப்பாடு
(அசலையே பிரசுரித்திருப்பதால் பிழைகளைத் திருத்தி வாசித்துக்கொள்க.)
இசேசு முன்னிற்க.
சவாது
*அர்சியசிக்ஷ்திரீத்துவத்தின் திருநாளன்று சாந்தமரிய தசுநேவிஸ் ஆண்டவளுக்குத் தூத்துக்குடி ஊராராகிற நாங்கள் கொடுக்கிற வார்த்தைப்பாடு.*
சினேகத்துக்குப் பாத்திரமாகவும் எங்களுடைய ஒரே பாதுகாவலுமாயிருக்கிற தசுநேவிஸ் மாதாவாகிய ஆண்டவளே. உமது மேலான திருப்பாதத்திலே மிகுந்ததாட்சியுடனே சாக்ஷாங்கமாகவிழுந்து உமது அடிமைகளாயிருக்கிற எங்கள் பேரிலேயும் தூத்துக்குடியாகிற இந்த ஊரின் பேரிலேயும் .
யித்தைவரைக்கும் நீர்பாதுகாத்துக் கொண்ட கனமான அடைக்கலத்துக்காக மிகுதியும்நன்றியறிகிறோம். யின்னமும் பாதுகாவலினாலே பஞ்சம் படை வியாதி முதலான துரிதங்களில் நின்று எங்களை ரெட்சித்துக் கொண்டதினாலும் நன்றி அறிந்த மனதுடனே நமஸ்காரம்பண்ணுகிறோம். நாங்கள் பாவம் நிரம்பினவர்களானாலும் உமது திருக்கரத்திலிருக்கிற திவ்ய கொமாரன் எங்களுடைய குடும்பத்தின் பேரிலேயும் சமுத்திரத்தின் பேரிலேயும் காண்பிச்சுக்கொண்டு வருகிற தேவ யிரக்கத்தை யெப்போதும் கண்டுவந்தோமே. அப்படியிருந்தாலுமித்தை வரைக்கும் எங்களுக்குச் செய்திருக்கிற அத்தனை உபகாரங்களுக்கும் நன்மைகளுக்கும் கூடின மட்டும் பிரத்தியுபகாரஞ்செய்ய வகையறியாதவர்களாயிருந்தோம். ஆனால் நீர் பாவிகளுடைய அடைக்கலமானதினாலே எங்கள் பேரிலே யிரக்கமாயிருந்து எங்களுடைய அறியாத் தனத்தை மனசிரங்கவேணும். அதேனென்றால் யின்று முதல் நன்றியறிந்த மனதுடனே பிரதியுபகாரமாக வார்த்தைப்பாடு சொல்லுகிறோம். யித்தைவரைக்கும் உமது யிஸ்தோத்திரமாகத் தேரிசு செபம் பண்ணுகிறதுக்கும் கோவில் சடங்கு முதலான தேவஆராதனைகளிலேயும் சுறுசுறுப்பன்றியே, சோம்பலுள்ளவர்களாயிருந்தோமே. யினி மேல்வரை கூடினமட்டும் எங்களுடைய ஆற்றுமசரீரத்தை உமதுபணிவிடைகளிலே காணிக்கையாகக் கொடுக்கிறோம். இதுவல்லாமல் உமது தேவாலயத்தின் திருப்பணிக்கு எப்போதுஞ் சங்குகுழிக்கிற காலத்திலே குழியாள்க்கள் நாள் ஒன்றுக்குச்சனம் ஒன்றுக்கு ஒறு காசும், பிரஊர்த்தோணி முதலான உருக்களிலேவருகிற யாபாரத்தில் ஊர்ஆதாயம் வாங்குகிறதில்பத்துக்குமூன்றும், மீன்பிடிதோணிமஞ்சிகளெல்லாம் தோணி ஒன்றுக்கு ஒருஆள்ப்பங்கும்பிலால் வலைகாரர் , களங்கட்டிகளும் ஒவ்வொருஆள்ப்பங்கும், கொம்பஞ்ஞியப்பணிவிடைமுதல் மற்றுமிந்தத் துறைமுகத்தில் யேற்றுமதி இறக்குமதிக்கும் , ஒவ்வொரு ஆள்ப்பங்கும், சல்லியேத்துகிற மஞ்சி ஒன்றுக்குப்பத்துக்காசும், கச்சைப்பிடவையாபாரிகள் அவர்களுக்குற்காணுகிற பிரயோசனத்தில் ஒரு ஆள்ப்பங்கும், உள்ளூர்க்குடியானவர்கள் முதல்ப்பிறவூரிலிருந்து தவசதரனிய முதல்மற்றும் யாபாரம் ஏற்றிவருகிற உருக்கள்முதலான தோணிமஞ்சிகளுக்கு அணுவுக்கு ஒரு பணமும் கொடுப்போமென்று யெப்போதைக்குமாக வார்த்தைப்பாடுகொடுக்கிறோம்.
எங்களுடைய கனமானகடனுக்குப் பரலோகத்தினுடைய ராக்கினியே யிதுகொஞ்சக்காணிக்கையானாலும், திருச்சமூகத்துக்குச்சந்தோக்ஷம் வருத்துவிக்கிறதுக்கு மிகுந்த ஆசையாயிருக்கிறோம். யிரக்கருணையுள்ள ஆண்டவளாகிற தசுநேவிஸ்மாதாவே கையேத்துக்கொள்ளும். அதேனென்றால் யித்தோடேகூட எங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் பத்தியும் அடிமைத்தனத்தையும் இந்தப்பட்டணத்தையும் முழுதும் பாதகாணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறோம்.
உமது திருக்கோமாரன்பேரிலுண்டான மெய்யான பக்கிக்ஷத்தையும் உம்முடைய பேரிலுண்டான நேமத்தையும் யிழந்துபோரதைப்பாற்க ஆயிரமுறை எங்களுடைய ரெத்தஞ்சிந்துகிறதுக்கு விருப்பமாயிருக்கிறோம்.
கிறுபைதயாபத்துக்குக் மாதாவே யிந்தஉம்முடைய பட்டணத்தை உமது யிரக்கமுள்ளதிருக் கண்களினாலேபாத்தருளி சகல பொல்லாப்புகளில் நின்றுரெட்சித்துக் கொள்ளும். விசேக்ஷமாய் எங்கள் பாவத்தினாலே வரத்தக்க சறுவேசுரனுடைய கோபத்தில்நின்று ரெட்சித்துக்கொள்ளும்.
சாதுகுணமுள்ள கன்னியாஸ்திரியே எங்களுடைய நம்பிக்கையானவளே உமதுமக்களாயிருக்கிற எங்களுக்கும் எங்களுடைய பட்டணங்களுக்கும் சமுத்திரத்துக்கும் ஆசீர்பதித்தருளும். யிந்த உமதுமகாபெரிய ஆசீர்பாதத்தோடே உம்முடைய திவ்விய பாலனுடைய வல்லமையுள்ள ஆசீர்பாதத்தையும் கொடுத்தருளும். யிப்படியே யிந்தலோகத்திலே உமக்கியன்ற நல்லஊளியஞ்செய்து மோக்கிக்ஷராட்சியத்திலே உம்மைச் சந்தோக்ஷத்துடனே கண்டுகளிகூருவோமென்கிற நம்பிக்கையாயிருக்கிறோம். ஆனால் நாங்கள் கொடுத்த வார்த்தைப்பாட்டின் நினைவு அழியாதபடிக்குச் சறுவேசுரனுடைய மாதாவாகிய தசுநேவிஸ்நாயகியே அடியேன்களுடைய பாத்திரமில்லாதபேர் உம்முடைய திருப்பாதத்திலே எழுதிவைக்கிறதுக்கு உத்தரவு தந்தருளும்.
தூத்துக்குடியில் சூஎளருயச ளூ ஆனிம கூ
யோசேமரீய தெவலாசி யேசுசபைச் சன்னியாசியார் நாளையில் அவர்கள் கையொப்பமும் பதிவிச்சு அதின் கீழே அவ்வேளைத் தலைமையாயிருந்த.
கவரியேல் கோமுசு, சாதித்தலைவமோர்.
பேதுரு கோமுசு பர்னாந்து உள்ளூர்த்தலைவமோர்.
சூசையின்னாசிக்குருசுக்கொறேய, கொம்பஞ்ஞிய அடப்பனார்
சவியேரின்னாசிக் குரூசு மெச்யகணக்கப்பிள்ளைமோர்.
சல்வதோரேன்றீக்தற்குரூசு துப்பாசிமோர்.
இவர்கள் கைஒப்பம்வைத்துக்கொடுத்திருக்கிற வார்த்தைப்பாடு.
இதின்அசல் துப்பாசிபட்டி சர்வேஸ்பான் கோயில் அக்தார் அவர்களிடமிருக்கிறது.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com