வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 11 June 2016

பெரிய புராணத்தில் நெய்தல் நில நிலவியல் கூறுகள்

தொண்டை நாட்டில் நெய்தல் நிலவளமும் உண்டு என்கிறார் சேக்கிழார். நெய்தல் நிலத்தின் இயல்பையும், மீன்பிடிக்கும் வகையினையும் சேக்கிழார் சித்தரித்துக் காட்டுகிறார். பரதவர் வாழும் கடற்கரை சூழ்ந்த இடங்களில் கைதையும், புன்னையும் பூத்து நிறைந்திருக்கும். பரதவர்கள் கடலில் மீன் பிடித்து குவியல்களாக குவித்து வைத்திருப்பர் என்றும், பரதவப் பெண்கள் கடலில் விளையும் முத்துகளையும், பவளங்களையும் முல்லைத்திணை மக்களுக்குக் கொடுத்து அதற்கு ஈடாக திணையைப் பெறுவார் என சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

மேலும் நெய்தல் நிலத்தன்மையினையும், மக்கள் வாழ்க்கையினையும் அதிபத்த நாயனார் வரலாற்றில் சேக்கிழார் விரிவாக பேசுகிறார். 

நாகப்பட்டின கடற்கரையோரத்தில் பரதவர்கள் நிறைந்த ‘நுளைப்பாடி’ அமைந்திருந்தது. இது ‘நம்பியான் குப்பம்’ என்று வழங்கப் பெறுகின்றது. ‘குப்பம்’ என்பது கடற்கரையிலுள்ள பரதவர் சேரிக்கு வழங்கும் பெயராகும். 

அக்குப்பத்து மக்களது தொழில் கடலில் சென்று மீன் பிடிப்பதாகும். இவர்களது குப்பங்களில் மீன்கள் நிறைந்திருக்கும் உலர்ந்த மீன்களைக் கவர்ந்து செல்ல பறவைகள் கூட்டம் வரும். பரதவர்கள் மீன் குவியல்களை விலை கூறி வாங்க அழைப்பர். இவை போன்ற செய்திகளை அதிபத்த நாயனார் வரலாறு கூறுகிறது.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com