வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 8 June 2016

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் தோழிக்கு உரைத்த பத்து பாடல்கள் தொகுப்பு

நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.


ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள தோழிக்கு உரைத்த பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


111.தலைவி கூற்று

அம்ம வாழி தோழி பாணன்
சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமோ
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே.

112.தலைவி கூற்று

அம்ம வாழி தோழி பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே
மறந்தேம் மன்ற நாணுடை நெஞ்சே.

113. தலைவி கூற்று

அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய என்னை
அதுகேட்டு அன்னாய் என்றனள் அன்னை
பைபய எம்மை என்றனன் யானே.

114. தலைவி கூற்று

அம்ம வாழி தோழி கொண்கண்
நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடலம் பெண்ணை அவனுடை நாட்டே.

115. தலைவி கூற்று

அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்துநின் றோனே.

116. தலைவி கூற்று

அம்ம வாழி தோழி நாமழ
நீல இருங்கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று மன்ற
காலை அன்ன காலை முந்துறுத்தே.

117.தலைவி கூற்று

அம்ம வாழி தோழி நலனே
இன்னது ஆகுதல் கொடிதே புன்னை
அணிமலர் துறைதொறும் விரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தீமே.

118. தலைவி கூற்று

அம்ம வாழி தோழி யான்இன்று
அறனி லாளற் கண்ட பொழுதின்
சினவுவென் தகைக்குவென் சென்றனென்
பின்நினைந்து இரங்கிப் பெயர்தந் தேனே.


119. தலைவி கூற்று

அம்ம வாழி தோழி நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி
அன்பிலன் மன்ற பெரிதே
மென்புலக் கொண்கன் வாரா தோனே.

120.தலைவி கூற்று

அம்ம வாழி தோழி நலமிக
நல்ல ஆயின அளியமென் தோளே
மல்ல இருங்கழி மலிநீர் விரியும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே.


Thanks: www.garuda-sangatamil.com
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com