மேமிகு. திபூர்சியஸ் ரோச் ஆண்டகைக்கு வாழ்த்துப்பா
மேமிகு. திபூர்சியஸ் ரோச் ஆண்டகையின்
முதல் வேம்பாற்று வருகையின் போது பாடப்பட்ட வாழ்த்துப்பா
(அற்புதமாகிய கற்பகத் தருக்கள் – என்ற மெட்டு)
ஆண்டகையினிரூ அம்புஜ பதத்தை
ஆர்வமுடன் தொழுவோம்

மானிலம் புகழும் வல்லவராம்
மக்களுக் கிரங்கும் நல்லவராம்
மதிகுலத்தி லுதித்தவராம் - ஆண்டகை
தானமும் தவமும் தன்நலத் தியாகமும்
தனக்கிணையிலாக் கொண்டவராம்
தந்தையிற் சிறந்த தந்தையராம்
தமியோர் குறை தவிப்பவராம் - ஆண்டகை
அன்பே விண்மீ னெனும் அரியமொழியை
இன்பமுடன் என்றும் கொண்டவராம்
பண்புடன் பாலித்துக் காப்பவராம்
பாரில் சிறந்த நல் உத்தமராம் - ஆண்டகை
தேனினு மினிய தெள்ளமுதாளா
திபூர்ஸ்யஸ் ரோட்செனும் சுகுணா
தேவாசீர் தந்தெமைப் பரிபாலா
தினமாசீர் வதிகுண சீலா - ஆண்டகை
சிஷ்ட செபஸ்தியார் சீர்பாடசாலை
சிறப்புற் றோங்கித் திகழ்ந்திடவும்
தேவருளே தினம் பெற்றிடவும்
தேவரீர் ஆசீர் வதித்திடுவீர் - ஆண்டகை