வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 20 June 2016

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் பாணற்குரைத்தப் பத்து பாடல்கள் தொகுப்பு

நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள பாணற்கு உரைத்த பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


131.தலைவி கூற்று

நன்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ்வூர்க்
கல்என் கௌவை எழாஅக் காலே.

132.தலைவி கூற்று

அம்ம வாழி பாண புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்
அலரா கின்றுஅவர் அருளுமாறே.

133.தலைவிகூற்று

யான் எவன்செய்கோ பாண ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றெனஎன் புரிவளைத் தோளே.

134.தலைவி கூற்று

காண்மதி பாண இருங்கழிப்...
பாய்பரி நெடுந்தேர் கொண்கனோடு
தான்வந் தன்றுஎன் மாமைக் கவினே.

135.தலைவி கூற்று

பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தலங் கண்ணியை நேர்தல்நாம் பெறினே.

136.தலைவி கூற்று

நாண்இலை மன்ற பாண நீயே
கோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல்லுகுப் போயே.

137.தலைவி கூற்று

நின்னொன்று வினவுவல் பாண! நும்மூர்த்
திண்தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம்நலம் பெறுபவோ மற்றே.

138.தலைவி கூற்று

பண்பு இலை மன்ற பாண இவ்வூர்
அன்புஇல கடிய கழறி
மென்புலக் கொண்கனைத் தாரா தோயே.


139.தலைவி கூற்று

அம்ம வாழி கொண்க எம்வயின்
மாண்அல மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலஞ்சிதைக் கும்மே.

140.தலைவி கூற்று

காண்மதி பாணநீ உரைத்தற்கு உரியை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே.


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com