வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 16 June 2016

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் கிழவற்குரைத்தப் பத்து பாடல்கள் தொகுப்பு

நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு,மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள கிழவற்குரைத்தப் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


121. பரத்தை கூற்று;தோழி கூற்றுமாம்

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
முண்டகக் கோதை நனையத்
தென்திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே.

122.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே.

123.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்என் பெருங்கடல் திரைபாய் போளே.

124.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டல் பாவை வௌவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே.


125.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லவோ கொண்கநின் கேளே
தெண்திரை பாவை வௌவ
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.

126.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உண்கண் வண்டினம் மொய்ப்பத்
தெண்கடல் பெருந்திரை மூழ்கு வோளே.

127.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கிநன் கேளே
தும்பை மாலை இளமுலை
நுண்பூண் ஆகம் விலங்கு வோளே.

128.பரத்தை கூற்று

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
உண்ணாப் பாவையை ஊட்டு வோளே!

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com