வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 27 June 2016

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் ஞாழற் பத்து பாடல்கள் தொகுப்பு
நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

 ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள ஞாழற் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.

 141.தலைவி கூற்று

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பசலை செய்தன பனிபடு துறையே.

142.தலைவி கூற்று

எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே.

143.தோழி கூற்று

எக்கர் ஞாழல் புள்இமிழ் அகன்துறை
இனிய செய்து நின்றுபின்
முனிவு செய்தஇவள் தடமென் தோளே.

144.தலைவி கூற்று

எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குருகு உறங்கும் துறைவற்கு
இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.

145.தோழிகூற்று

எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன் இனியே.

146.தலைவி கூற்று

எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழ்இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்றஎன் மாமைக் கவினே.

147.தோழிகூற்று

எக்கர் ஞாழல் மலரில் மகளிர்
ஒண்தழை அயரும் துறைவன்
தண்தழை விலையென நல்கினன் நாடே.

148.தோழிகூற்று

எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீஇனிது கமழும் துறைவனை
நீஇனிது முயங்குமதி காத லோயே.
149.தோழிகூற்று    

எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்துஅகறல் வல்லா தீமோ.

150.தலைவிகூற்று

எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்குந் துறைவன்
புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே.


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com