வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 4 June 2016

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் தாய்க்குரைத்தப் பத்து பாடல்கள் தொகுப்பு

நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள தாய்க்குரைத்தப் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


101. தோழி கூற்று

அன்னை வாழி வேண்டன்னை உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்(பு) இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே.

102. தோழிகூற்று

அன்னை வாழி வேண்டன்னை நம்மூர்
நீல்நிறப் பெரும்கடல் புள்ளின் ஆனாது
துன்புறு துயரம் நீங்க
இன்புற இசைக்கும்அவர் தேர்மணிக் குரலே.

103.தோழி கூற்று

அன்னை வாழி வேண்டன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்குஅமைந் தன்னால் தானே
தனக்குஅமைந் தன்றுஇவள் மாமைக் கவினே.

104.தோழிகூற்று

அன்னை வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பலர்மடி பொழுதின் நலமிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வன் அஃது ஊரே.

105. தோழி கூற்று

அன்னை வாழி வேண்டன்னை முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தெனப்
பொன்னினுஞ் சிவந்தன்று கண்டிசின் நுதலே.

106. தோழிகூற்று

அன்னை வாழி வேண்டன்னை அவர்நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்
தண்கடல் வளையினும் இலங்கும்இவள்
அங்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.

107.தோழிகூற்று

அன்னை வாழி வேண்டன்னை என்தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து
தண்கடல் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.

108.தோழிகூற்று

அன்னை வாழி வேண்டன்னை கழிய
முண்டகம் மலரும் தண்கடல் சேர்ப்பன்
எம்தோள் துறந்தனன் ஆயின்
எவன்கொல் மற்றவன் நயந்த தோளே.

109.தோழிகூற்று

அன்னை வாழி வேண்டன்னை நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எம்தோள் துறந்தகாலை எவன்கொல்
பன்மாண் வரும் அவன் அளித்த போழ்தே.

110. தோழி கூற்று

அன்னை வாழி வேண்டன்னை புன்னைப்
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே இவ்வூர்
பிறிதொன் றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே.


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com