அம்பர்
பூமியில் வாழும் உயிரினங்களிலேயே மிகப் பெரிய உயிரினம் திமிங்கிலம். திமிங்கிலங்களில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கிலம், மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிப்பதில்லை. மனிதர்களைப் போலவே அவற்றுக்கு நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந்து செல்லும். அதிகபட்சமாக 2 மணி நேரம் வரைகூட மூச்சுவிடாமல் இருப்பதுடன் இரைதேடி 2,000 மீட்டர் ஆழம் வரையிலும் செல்லக்கூடிய ஆற்றல் திமிங்கிலங்களுக்கு உண்டு.

இவ்வாறு திமிங்கிலங்கள் வெளியேற்றும் கழிவுகளுக்கு 'அம்பர்' என்று பெயர். கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது உருண்டை வடிவம் பெற்று கடற்கரையில் அம்பர்கள் ஒதுங்குகின்றன. இவ்வாறு கரையில் ஒதுங்கும் அம்பர்களை கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறத்துக் கேற்ப மீனம்பர், பூவம்பர் மற்றும் பொன்னம்பர் என மீனவர்கள் அழைக்கின்றனர்.
தற்போது திமிங்கிலத்தின் அம்பரை சேகரிப்பதற்கு தடை உள்ளது. திமிங்கில கழிவான அம்பர், வாசனை திரவியங்கள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த வாசனை திரவியம் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கு அம்பர் பயன்படுவதால் ஒரு கிலோ அம்பர் அதன் நிறத்துக்கேற்ப பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது.
இயற்கையாகவே கடற்கரையில் ஒதுங்கும் ஒரு சிறிய அம்பர் உருண்டையை கண்டெடுத்தால்கூட அதுவே அந்த மீனவரின் வாழ்நாள் பொக்கிஷமாக மாறிவிடும்.